இன்று திங்கட்கிழமை முற்பகல் 10.05 மணிக்கு எதிரணிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து நிகழ்வு ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்ற மத ஆசீர்வாதம் இடம்பெறுகின்ற இந்நிகழ்வில் சரத் பொன்சேகா, சந்திரிகா பண்டாரநாயக்க, ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, மாதுளுவாவே சோபித தேரர்,  எம்.கே.எஸ். குணவர்தன , அர்ஜூன ரணதுங்க, ராஜித சேனாரத்ன, மனோகணேசன், நிர்மால் ரஞ்சித் தேவசிறி அத்துரலிய ரதன தேரர் ஆகியோர் உட்பட பலர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். சரத் பொன்சேகா...
ஐ.நா.வில் இலங்கை தன்னை நியாயப்படுத்த பெருமளவு பணத்தை செலவிடுகிறது!- பீரிஸ் கவலை தன்னை நியாயப்படுத்துவதற்காக இலங்கை ஐ.நாவில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை நேரத்தையும், பணத்தையும் செலவிடுகிறது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ்  கவலை தெரிவித்துள்ளார். காலியில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமான கடற்பிராந்திய பாதுகாப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடந்து உரையாற்றுகையில், சட்டவிரோத ஆட்கடத்தலுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கும்...
பேச்சுவார்த்தைக்கு என அழைக்கப்பட்ட பிரபாகரனுக்கு ராஜீவ்காந்தி செய்த துரோக செயலும் அதன் பின் விளைவுகளும் புலிகளுடன் மட்டுமே கலந்தாலோசிக்கப்பட உள்ளதாகக் கூறி புலிகளின் தலைவர் பிரபாகரனை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்த இந்தியா, தனது அரைகுறை ஒப்பந்தத்திற்கு புலிகளின் தலைவர் ஒருபோதும் சம்மதம் தெரிவிக்கமாட்டார் என்பதை நன்கு உணர்ந்திருந்தது. ஆனாலும் மிகவும் பலம் வாய்ந்த அமைப்பு என்ற ரீதியிலும், அப்பொழுது ஈழமண்ணில் நிலைகொண்டிருந்த ஒரே அமைப்பு என்ற ரீதியிலும் புலிகளை இந்த ஒப்பந்தத்தை எப்படியாவது...
எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள மஹிந்த ராஜபக்சவுக்கான கட்டுப்பணம், இன்று திங்கட்கிழமை (01) தேர்தல் செயலகத்தில் செலுத்தப்பட்டது. இந்த கட்டுப்பணத்தை செலுத்துவதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, அமைச்சர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.    
  இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் நடைபெறுகின்ற தேர்தல்களில் ஆட்சிமாற்றங்கள் ஏற்பட்டுவந்தாலும் கூட, சிங்கள பௌத்த ஆதிக்கங்கள் மாற்றமடையாமல் தமிழர்களிடத்திலும், தமிழர்களின் அடையாளங்களிலும் திணிக்கப்பட்டுவருவது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம். தமிழர்களின் பூர்வீக குடியேற்ற இடங்களில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவுதல், தமிழர் நிலங்களை சிங்கள மயப்படுத்துதல் போன்ற திட்டங்கள் 1948ம் ஆண்டிலிருந்தே நடைபெறுவதனையும் அனைவரும் அறிந்ததே. ஒருபக்கம் சிங்கள பௌத்த மயமாக்கல் என்று ஆட்சியாளர்கள் தேர்தல்கள் மூலம் மாறிமாறி வந்தாலும் இந்த பௌத்த...
புலனாய்வுப்பிரிவினரின் அழுத்தங்களையும் மீறி தண்டுவான் வாழ்மக்கள், ரவிகரனின் மக்கள் குறைகேள் சந்திப்பில் கலந்துகொண்டு பிரதேசத்தின் குறைகளை எடுத்துரைத்த சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது. இன்று காலை பத்து மணியளவில் ஆரம்பமான இச்சந்திப்பில் அடைமழையையும் பொருட்படுத்தாது புலனாய்வுப்பிரிவினரின் அழுத்தங்களையும் மீறி, மக்கள் கலந்து கொண்டு குறைகளை எடுத்துக்கூறியிருந்தனர். இது தொடர்பில் மேலும் அறியவருகையில், ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்குட்பட்ட தண்டுவான், பழம்பாசி, பெரிய இத்திமடு பகுதிமக்கள் தமது குறைகள் கோரிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடலுக்கு மக்கள் சந்திப்பொன்றை ஏற்படுத்துமாறு வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனிடம்...
வருடா வருடம் நாம் கொண்டாடுகின்ற முதியோர் தினமானது அவர்களை முதியோர் என தனிமைப்படுத்தி காட்டுகின்றதால் இத்தினத்தை பெரியோர் தினமாக கொண்டாட வேண்டும் என மகாறம்பைக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் நடைபெற்ற முதியோர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் தெரிவித்தார். மேற்படி முதியோர் தின நிகழ்வு கடந்த 22.11.2014 அன்று மகாறம்பைக்குளம் கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வட மாகாணசபை உறுப்பினர்கள் வைத்திய கலாநிதி சி.சிவமோகன்...
மகிந்தவின் ஆட்சி பல தசாப்தங்களுக்கு பிறகு நாட்டில் ஏற்பட்ட கொடூர ஆட்சி: முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்பவர் ஜனநாயக தலைவர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மைத்திரிபால சிறிசேன, எதிரான கொள்கைகளை கொண்டவர்களை வீதியில் கொலை செய்யாதவர். ஏனைய நிலைப்பாடுகளையும் கொள்கைகளையும் கேட்கக்கூடிய...
தயவு செய்து பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸை ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார். நத்தார் பண்டிகையை முன்னிட்ட இரண்டு புதிய தபால் தலைகள் வெளியிடும் நிகழ்வு நேற்று நீர்கொழும்பு புனித மேரி தேவாலயத்தில் நடைபெற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தபால் தொலைதொடர்பு அமைச்சர் ஜீவன் குமாரதுங்க உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். நீதியான முறையில் ஜனாதிபதி தேர்தலை...
  தலைமைகள் அமைதியாக இருக்க சமூகம் பெருத்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றது: அமீர் அலி- மக்கள் காங்கிரஸை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்: றிஷாட் பழுத்த அரசியல்வாதிகளுக்கே இன்றைய அரசியல் குழப்பத்தின் மையத்தை கண்டுகொள்ள தடுமாற்றமாக இருக்கின்ற போது, பிரதேச அரசியல்வாதிகளுக்கும் அரசியல் சூறாவளியின் மையத்தைக் கண்டு கொள்வதில் தடுமாற்றம் இருக்கின்றது என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  அமீர் அலி தெரிவித்தார். ஏறாவூர் நல்லிணக்கம் மற்றும் சமூக வலுவூட்டலுக்கான நிலையத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நஸீர் தலைமையில்...