ஆர்ப்பரித்து கொட்டும் இந்தத் தண்ணீர் பார்க்கவே கண்கொள்ளாக்காட்சியாக உள்ளது. ஆனால் தண்ணீருக்கு உள்ள சக்தி நம்மில் சில மனிதர்களுக்கு தெரியாமல் விளையாடி வருகின்றனர். நாமும் கண்கூடாக பார்த்திருக்கிறோம் சுனாமி, வெள்ளம் என வரும் இயற்கையின் பேரழிவினால் சிக்கி பழியாகும் காட்சியும் தற்போது நடந்து கொண்டு தான் இருக்கின்றன. என்னவொரு வேகம் என்று பாருங்கள்... இந்த வேகத்தில் சிக்கினால் மனிதர்களின் நிலை என்னவாக இருக்கும்?... யூகித்துக்கூட பார்க்க முடியவில்லை அல்லவா?.. அழகாக இருந்தாலும்...
அழகு என்பது வெறும் முக அமைப்பு மற்றும் சரும நிறம் சார்ந்ததல்ல. பிறரை வசீகரிக்கும் அளவிற்கு அழகு இல்லையென்றாலும் சிறு அழகு குறிப்புகளை பயன்படுத்தி நாம் எப்படி நமது அம்சங்களை மாற்றிகொள்கிறோம் என்பதில் தான் சூட்சமம் இருக்கிறது. அந்த வகையில் பெரும்பான்மையான பெண்கள் தவறு செய்வது அவர்களின் சிகை அலங்காரத்தில் தான். நமது ஒவ்வொருவரின் முகமும் வெவ்வேறு அமைப்புகளை உடையது. அதில் பெரும்பாலான பிரிவுகளாக கருதப்படுபவை, வட்ட வடிவ முகம்,...
கனடா நாட்டில் உடன் படித்த தோழியை கற்பழித்து கொலை செய்ய திட்டமிட்ட இரண்டு பள்ளி மாணவர்கள் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கியூபெக் மாகாணத்தில் உள்ள St-Hyacinthe என்ற நகரை சேர்ந்த பள்ளி மாணவர்கள் தான் இந்த சதி திட்டத்தை தீட்டியுள்ளனர். இதே நகரில் உள்ள பள்ளி ஒன்றில் 14 மற்றும் 16 வயதுடைய இரண்டு மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களுடன் படிக்கும் தோழி ஒருவரை கற்பழித்து கொல்ல திட்டமிட்டுள்ளனர். இதுமட்டுமில்லாமல்,...
ஹால்ரன் பிராந்திய துணைப் பொலிஸ்மா அதிபரான நிசான் துரையப்பா கனடிய மத்திய அளுனரிடமிருந்து ஓடர் ஒவ் மெரிற் விருதினைப் பெற்றுக் கொண்டார். இந்த விருதினை பெற்ற முதல் தென்னாசியர் என்ற பெருமையை இவர் பெறுவதோடல்லாது, கனடிய தமிழ்ச் சமுதாயத்தில் கனடிய அரசின் அதியுயர் விருதினைப் பெற்ற முதலாவது பிரதிநிதியாகவும் இருக்கின்றார். மாணாக்கர்கள் பொலிசார் நட்புறவுக் குழுவினூடாக பொலிஸ் தொண்டராக 1991ல் இணைந்த நிசான் துரையப்பா 1995ல் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளாக பதவியேற்று...
முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழங்களின் அரசன் என்று அழைப்பார்கள். இதனுடைய சுவையோ மிகவும் அற்புதமான இனிப்புச் சுவையைக் கொண்டது. நீர்ச்சத்து, நார்ச்சத்து, தாதுக்கள், கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், விட்டமின் C போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. மாம்பழத்தை சாப்பிட்டு அதன் பின் உடனே பால் குடித்து வந்தால், உடல் பலமடைவதுடன் செரிமான சக்தியும் அதிகரிக்கும். மாம்பழத்தில் இரும்புச்சத்து உள்ளதால் இது ரத்தசோகையை குணப்படுத்துகிறது. மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும்...
பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை குறித்த இடைவெளிகளில் கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் கட்டாயப்படுத்தப்படவுள்ளன. சட்டம் மற்றும் ஒழுங்குத்துறை அமைச்சர் சாகல ரட்நாயக்க இதனை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அண்மையில் புசல்லாவ பொலிஸ் நிலையத்தில் கைதி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்தே இந்த நடவடிக்கை கட்டாயப்படுத்துள்ளதாக அவர்குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன, பொலிஸ் காவலில் உள்ள கைதிகள் அரை மணித்தியாலங்களுக்கு ஒருமுறை கண்காணிக்கப்படும் நடவடிக்கை இடம்பெற்றிருக்குமாக இருந்தால் புசல்லாவ பொலிஸ்...
சவுதி அரேபியா விமானத்தில், அவசர கால, 'அலாரத்தை' பைலட், தவறுதலாக அழுத்தியதால், பிலிப்பைன்சின் மணிலா விமான நிலையத்தில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேற்காசிய நாடான, சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரிலிருந்து, தென் கிழக்கு ஆசிய நாடான, பிலிப்பைன்சின் மணிலா நகருக்கு, நேற்று காலை, சவுதி அரேபிய ஏர்லைன்ஸ் விமானம் சென்றது. மணிலாவை விமானம் நெருங்கிய போது, மணிலா விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு, சவுதி விமானத்திலிருந்து, அவசர காலத்தில் பயன்படுத்தப்படும் அலாரத்தின்...
மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் 2 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து ஏறாவூர், வாவிக்கரையில் மறைந்திருந்த ஒருவரை நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை கைது செய்ததுடன், அவரிடமிருந்து கொலை இடம்பெற்ற வீட்டில் திருடப்பட்ட பென்ரனுடன் கூடிய தங்கச் சங்கிலியைக் கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும், இச்சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையை அடுத்து திருகோணமலை, முள்ளிப்பொத்தானை...
யாழ்ப்பாணம் சிறையில் கடந்த 40 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள காரைக்கால் மீனவர்கள் தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி திடீர் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் திகதி காரைக்கால் அருகே உள்ள டி.ஆர்.பட்டினத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கணேஷ்குமார், பிச்சைபாண்டி, முகமதுகான், ரகுமான்கான் ஆகியோர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். குறித்த நால்வரும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை...
யாழ். பருத்தித்துறை, சித்திவிநாயகர் பகுதியைச் சேர்ந்த 13 வயதான சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன், தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட 4 சந்தேகநபர்களை இன்று கைது செய்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 34 வயதுடைய சந்தேகநபர் ஒருவர், சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை காட்டி, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று, தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியைத் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளார். அத்துடன், இந்த விடயத்தை வெளியில் தெரிவித்தால் கொலை செய்வேன் எனச்...