நம் உடம்பில் உள்ள கல்லீரல்கள் தான் கொழுப்புகளை உற்பத்தி செய்கிறது, அளவுக்கு அதிகமான கொழுப்புகள் உடலில் சேரும் போது உடல் பருமன் ஏற்படுகிறது. உடல் பருமனுக்கான காரணங்கள் அதிக அளவு உணவு எடுத்துக்கொள்ளல், குறைவான சக்தியைச் செலவிடல், அதிக சக்தி தரும் உணவுகளை உட்கொள்ளல் (இனிப்புகள்/ ஐஸ்-கீரிம்/ குளிர்பானங்கள்), மதுப் பழக்கம் போன்றவற்றால் கூடுதல் பருமன் ஏற்படுகிறது. வயது மற்றும் பரம்பரைக் காரணிகளும் கூட உடல்பருமனுக்குக் காரணங்கள். தைராய்டு சுரப்புக் குறைவதாலும், அட்ரீனல்...
தனது அனல் பறக்கும் ஆட்டத்தால் ரசிகர்களை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் இந்திய டெஸ்ட் போட்டிகளின் அணித்தலைவர் விராட் கோஹ்லியை இன்ஸ்டாகிராமில் பின்பற்றுவர்கள் அதிகம். அதற்கு காரணம் தனது ஹேர்ஸ்டைல் முதல் தான் செய்யும் உடற்பயிற்சி வரை அனைத்தையும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துவிடுகிறார். இதனைப்பார்த்து மெய்சிலிக்கும் ரசிகர்களின்(பின்பற்றுபவர்கள்) எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 7 மில்லியன் ஆகும். இவருக்கு அடுத்தபடியாக, சச்சின் டெண்டுல்கர் 3.9 மில்லியன், டோனி 2.2 மில்லியன், டி வில்லியர்ஸ் 2.1 மில்லியன்...
யுத்தத்தின் பின்னர் பொதுமக்களது நிலங்கள் இராணுவத்தால் அபகரிக்கப் பட்டுவருகின்றது. இதிலும் குறிப்பாக வடகிழக்குப் பிரதேசங்களில் இராணுவத்தினது அத்துமீறல்கள் அதிகமாகக்காணப்படுகின்றது. நாட்டின் பாதுகாப்பு அல்லது உயர் வலயம் எனக்கூறி தமிழ் மக்களது காணிகளை முக்கியமாக மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளிலும் இந்த இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பது தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதிலும் குறிப்பாக வன்னிப் பகுதியிலேயே பாரியளவில் இராணுவத்துக்கென நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் கணிசமான இராணுவ...
மல்லாவி – வவுனிக்குளம் பாலிநகர் கிராமத்தில் இராணுவ வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் மல்லாவி – வவுனிக்குளம் பாலிநகர் கிராமத்தில் மு/பாலிநகர் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் பத்தாவது காலாட்படை முகாமில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாத்தறை – வில்கடுவ பகுதியைச் சேர்ந்த டி.ஏ.ஏக்கநாயக்க (வயது 30) என்ற இராணுவ வீரரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். எனினும்...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற சகலதுறை ஆட்டக்காரரான திலகரட்ன டில்ஷான் அண்மையில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். சிறைச்சாலையில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காகவே அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் பங்குபற்றியமை தொடர்பில் டில்ஷான் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சிறைச்சாலைக்கு முன் டில்ஷானை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் அணிதிரண்டு அவரை சூழ்ந்து கொண்டமையை காணக்கூடியதாக உள்ளது. எனினும் இவர் இந்தக் கூட்டத்தை உதாசீனப்படுத்தாமல் அனைவருடனும் நீண்டநேரம்...
தமிழினத்தின் ஆயுதப்போராட்டத்தை மழுங்கடித்த இலங்கையரசு, 03தசாப்த காலத்தில் ஆட்சிபுரிந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழினத்திற்கானத் தீர்வுத்திட்டத்தில் மாற்றம் எதனையும் கொண்டுவரவில்லை. படிப்படியாக காலதாமதத்தை நீடித்து 83காலப்பகுதியில் ஒரு அரசியலும், 90களில் மற்றுமொரு அரசியலையும், 95இல் சமாதானம் நோக்கிய அரசியலையும், 2000ஆம் ஆண்டில் இடைக்கால நிர்வாகம் என்ற அரசியலையும், 2000-2005வரை விடுதலைப்புலிகளைப் பிளவுபடுத்தி அவர்களுக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தி அதன் பின்னர் விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதை நோக்காகக்கொண்டே ஆட்சியாளர்கள் செயற்பட்டனர். மாற்றம் என்கின்றபோது தீர்வுத்திட்டம் தொடர்பான...
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் இராசமாணிக்க ம் சிலைக்கு அருகாமையில் மோட்டர் சைக்கிள் ஒன்று வீதியால் பயணித்த துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  
இலங்கையின் கர்ப்பிணி பெண்கள், வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளது. ஸீகா வைரஸ் பரவுகை ஆசியா மற்றும் ஏனைய நாடுகளில் தீவிரமாகியுள்ளமையை அடுத்தே இந்தஎச்சரிக்கையை சுகாதார அமைச்சு விடுத்துள்ளது.
அகிம்சை போராட்டம் தமிழ் மக்களுக்கு தெரியாத ஒன்றல்ல. எனினும் அந்த அகிம்சை போராட்டங்களை பேரினவாத ஆட்சியாளர்களுக்கு மதிக்கத் தெரியாமல் போயிற்று. இதன் அனுபவிப்புத்தான் இன்று இலங்கை ஆட்சியாளர்கள் ஜெனிவாவுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ஒருவரை மின்சார கதிரையிலிருந்து பாதுகாத்துள்ளோம் என்று இன்றைய ஆட்சியாளர்கள் கூறும் அளவில் மிகப் பெரிய இன அழிப்பாளர்கள் இந்த நாட்டின் ஆட்சி அதிகாரங்களில் இருந்துள்ளனர் என்பது...
ஐக்கிய நாடுகளின் 71ஆவது பொதுச் சபைக் கூட்டம் என்பது இலங்கைக்கு சர்வதேச ரீதியில் மேலும் முன்னோக்கி செல்ல கிடைத்துள்ள சந்தர்ப்பம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அமைச்சர் இதை குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சர்வதேச ரீதியில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறியுள்ளார். நியூயோர்க்கில் இன்று ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டம் எதிர்வரும் 26ஆம் திகதி வரை...