நாம் சிரிக்கும் போது நம்முடைய அழகைத் வெளிப்படுத்துவது நம்முடைய பற்களில் உள்ள வெண்மை நிறம் தான். நாம் சரியாக பல் துலக்கினால் கூட பற்களில் இருக்கும் மஞ்சள் கரை போகவே போகாது. இதனால் நாம் மருத்துவரை பார்க்க வேண்டிய நிலைமை உருவாகும். ஆனால் அதை தவிர்த்து இயற்கையான முறையில் நம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு பளிச்சிடும் வெண்மையான பற்களை பெற இதோ சூப்பரான டிப்ஸ்! 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன்,...
பரதநாட்டிய கலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் முயற்சியை மேற்கொண்டுவரும் இருதயா நாட்டிய நிகழ்ச்சி கனடாவில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. நிவேதா மூத்ததம்பி, கீர்த்தனா அருளானந்தராஜா, யழிகா மகேசுவரன் மற்றும் சிந்திய ஸ்ரீரங்கன் ஆகியோர் டொராண்டோவின் வளர்ந்து வரும் பரதநாட்டிய கலைஞர்கள். இவர்களின் கலை பயணத்தில் பிரபல கலைஞர்கள் ஸ்ரீ பார்வதி ரவி கண்டசாலா, மதுரை. ஆர். முரளிதரன், குச்சிப்புடி கலைஞர் உமா முரளிகிருஷ்ணா ஆகியோருடமிருந்து கற்றும் அவர்களுடன் இணைந்தும் பல...
சுவிட்சர்லாந்து நாட்டில் சூதாட்டம் விளையாடிய பெண் ஒருவர் ஒரே நாளில் ரூ.112 கோடி ஜெயித்து சாதனை கோடீஸ்வரியாக மாறியுள்ளார். சுவிஸில் உள்ள சூரிச் நகரில் ’கேசினோ’ என்று அழைக்கப்படும் பிரபல சூதாட்ட மையம் அமைந்துள்ளது. சூரிச்சில் நேற்று கனமழை பெய்த நிலையில் மழையில் நனைந்தவாறு சூதாட்டம் விளையாட ஒரு பெண் வந்துள்ளார். விளையாட்டை தொடங்கிய அப்பெண் முதலில் 200 பிராங்க்(29,826 இலங்கை ரூபாய்) ஜெயித்துள்ளார். பின்னர், விளையாட்டை முடித்துக்கொண்டு வீடு திரும்ப எண்ணியுள்ளார். ஆனால்,...
ஆண்கள் மட்டுமே ஆடும் புலி நடனத்தை எங்களாலும் ஆட முடியும் என கேரளத்தை சேர்ந்த பெண்கள் நிரூபித்து காட்டியுள்ளனர். கேரளாவில் உள்ள திரிஷூர் மாவட்டத்தில் ஓணம் பண்டிகை சமயத்தில் புலிகாலி என்னும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. 200 ஆண்டுகளுக்கு முன்னர் கொச்சின் மகாராஜா ராம வர்ம தம்புரானால் இந்த கலை ஆரம்பிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. புலி போல வேடம் அணிந்து வயிற்றில் புலி முகத்தை வரைந்து கொண்டு சாலையில் நடனமாடும்...
சாம்சுங் நிறுவனம் அண்மையில் புதிதாக அறிமுகம் செய்திருந்த Galaxy Note 7 கைப்பேசி அந்நிறுவனத்திற்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. சார்ஜ் செய்யும்போது அவற்றின் மின்கலங்கள் வெடித்து சிதறியமையே பிரதான காரணம் ஆகும். இதனால் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான 2.5 மில்லியன் கைப்பேசிகளை அந்நிறுவனம் மீளப் பெற்றிருந்தது. இந்நிலையில் இவற்றில் மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதன்படி சாம்சுங் நிறுவனத்தின் தாய் நாடான தென் கொரியாவில் இச்செயற்பாடு...
நம் உடம்பில் உள்ள கல்லீரல்கள் தான் கொழுப்புகளை உற்பத்தி செய்கிறது, அளவுக்கு அதிகமான கொழுப்புகள் உடலில் சேரும் போது உடல் பருமன் ஏற்படுகிறது. உடல் பருமனுக்கான காரணங்கள் அதிக அளவு உணவு எடுத்துக்கொள்ளல், குறைவான சக்தியைச் செலவிடல், அதிக சக்தி தரும் உணவுகளை உட்கொள்ளல் (இனிப்புகள்/ ஐஸ்-கீரிம்/ குளிர்பானங்கள்), மதுப் பழக்கம் போன்றவற்றால் கூடுதல் பருமன் ஏற்படுகிறது. வயது மற்றும் பரம்பரைக் காரணிகளும் கூட உடல்பருமனுக்குக் காரணங்கள். தைராய்டு சுரப்புக் குறைவதாலும், அட்ரீனல்...
தனது அனல் பறக்கும் ஆட்டத்தால் ரசிகர்களை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் இந்திய டெஸ்ட் போட்டிகளின் அணித்தலைவர் விராட் கோஹ்லியை இன்ஸ்டாகிராமில் பின்பற்றுவர்கள் அதிகம். அதற்கு காரணம் தனது ஹேர்ஸ்டைல் முதல் தான் செய்யும் உடற்பயிற்சி வரை அனைத்தையும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துவிடுகிறார். இதனைப்பார்த்து மெய்சிலிக்கும் ரசிகர்களின்(பின்பற்றுபவர்கள்) எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 7 மில்லியன் ஆகும். இவருக்கு அடுத்தபடியாக, சச்சின் டெண்டுல்கர் 3.9 மில்லியன், டோனி 2.2 மில்லியன், டி வில்லியர்ஸ் 2.1 மில்லியன்...
யுத்தத்தின் பின்னர் பொதுமக்களது நிலங்கள் இராணுவத்தால் அபகரிக்கப் பட்டுவருகின்றது. இதிலும் குறிப்பாக வடகிழக்குப் பிரதேசங்களில் இராணுவத்தினது அத்துமீறல்கள் அதிகமாகக்காணப்படுகின்றது. நாட்டின் பாதுகாப்பு அல்லது உயர் வலயம் எனக்கூறி தமிழ் மக்களது காணிகளை முக்கியமாக மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளிலும் இந்த இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பது தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதிலும் குறிப்பாக வன்னிப் பகுதியிலேயே பாரியளவில் இராணுவத்துக்கென நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் கணிசமான இராணுவ...
மல்லாவி – வவுனிக்குளம் பாலிநகர் கிராமத்தில் இராணுவ வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் மல்லாவி – வவுனிக்குளம் பாலிநகர் கிராமத்தில் மு/பாலிநகர் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் பத்தாவது காலாட்படை முகாமில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாத்தறை – வில்கடுவ பகுதியைச் சேர்ந்த டி.ஏ.ஏக்கநாயக்க (வயது 30) என்ற இராணுவ வீரரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். எனினும்...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற சகலதுறை ஆட்டக்காரரான திலகரட்ன டில்ஷான் அண்மையில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். சிறைச்சாலையில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காகவே அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் பங்குபற்றியமை தொடர்பில் டில்ஷான் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சிறைச்சாலைக்கு முன் டில்ஷானை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் அணிதிரண்டு அவரை சூழ்ந்து கொண்டமையை காணக்கூடியதாக உள்ளது. எனினும் இவர் இந்தக் கூட்டத்தை உதாசீனப்படுத்தாமல் அனைவருடனும் நீண்டநேரம்...