அதியுயர் பாதுகாப்பு வலய பகுதியில் 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான மூடிமறைக்கப்பட்ட பல தகவல்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கண்டறிந்துள்ளனர்.
இந்த வழக்கு கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் அன்று பிரேதப் பரிசோதனை நடத்திய, களுபோவில வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி சுனில் குமார அறிக்கையில் துப்பாக்கிச் சூடு...
வத்தளை பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை சுமார் 4 மணிளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தீ விபத்து காரணமாக பிளாஸ்டிக் தொழிற்சாலை முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் 6 தீயணைப்பு வண்டிகள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
விபத்து தொடர்பில் காரணங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை இதேவேளை தீ ஏனைய கட்டிடங்களுக்கு பரவாத வகையில் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக தீயணைப்பு வீரர்கள்...
வவுனியா பொலிஸ் நிலையத்தில் சத்தியபிரமாண நிகழ்வு.!
இன்று காலை வவுனியா பொலிஸ் நிலையத்தில் (17.09.2016) 8.30 மணியளவில் சத்தியபிரமாண நிகழ்வு உதவி பொலிஸ்அத்தியட்சகர் பியசிறி பெர்னாண்டோ தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதான பொலிஸ் பரிசோதகர் சோமரத்ன விஜயமுனி மற்றும் வவுனியா பொலிசார், விஷேட அதிரடி படையினர் போன்ற பலரும் கலந்து கொண்டனர்
தியாகதீபம் நினைவுநாள் நிகழ்வு நாளை கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. தமிழர் விடுதலை கூட்டணியும், ஜனநாயக போராளிகள் கட்சியும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள குறித்த நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாளை ஞாயிற்று கிழமை காலை 10 மணியளவில் கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு...
யாழ் செயலகத்தின் புதிதாக அமைக்கப்பட்ட மூன்று மாடி கட்டிடத்தை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் திறந்துவைத்த போது
Thinappuyal News -
17-09-2016 யாழ் செயலகத்தின் புதிதாக அமைக்கப்பட்ட
மூன்று மாடி கட்டிடத்தை ஐக்கிய தேசிய
கட்சியின் தலைவரும் இலங்கை சோசலிச குடியரசின் பிரதமருமான
ரணில் விக்கிரமசிங்கவும் மற்றும் உள்
நாட்டு அலுவலக அமைச்சர் கௌரவ வஜிரா அபேவர்த்தன அவர்களும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்
கௌரவ விஜயகலா மகேஸ்வரன் அவர்களும்.மாகாண முதல் அமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆகியோரால்
திறந்துவைத்த போது இந்நிகழ்வில கௌரவ அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன், மாவை சேனாதிராஐ ஆகியோர் கலந்து கொண்டனர்
...
தன்மொழி அறிந்தே பிறமொழி பாண்டித்தியம் பெறவேண்டும். இல்லையேல் நாம் கலப்பினக் காடையர்கள் ஆகிவிடுவோம் என தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர்
Thinappuyal News -
தன்மொழி அறிந்தே பிறமொழி பாண்டித்தியம் பெறவேண்டும். இல்லையேல் நாம் கலப்பினக் காடையர்கள் ஆகிவிடுவோம் என தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்மொழி சார்ந்த எமது சமூக ஒருமைப்பாடே வடக்கு கிழக்கு மாகாணங்களின் சமரசத்திற்கும் சமஷ்டிக்கும் வழி அமைக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழாவின் முதலாம் நாள் நிகழ்வு நேற்று முன்தினம் மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் அரங்கில் நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு...
இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு இராணுவம் தேநீர் வழங்கிவிட்டு சுட்டுக் கொன்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் முன்னர் தெரிவித்த கருத்துக்கள் மீண்டும் உங்கள் பார்வைக்கு….
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான போராளிகள் இறுதி மோதல்களின் இறுதி நாளான மே 18, 2009 காலையில் வெள்ளைக் கொடிகளைப் பிடித்துக் கொண்டு...
அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மைய கோபுரத்தின் மீது ஏசுநாதாரின் உருவம் தோன்றியதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூயோர்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீது அல்-கொய்தா தாக்குதல் நடத்தியதில் 2,996 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் திகதி நடத்தப்பட்ட இந்த தாக்குதலின் 15-வது ஆண்டு நினைவு அஞ்சலி கடந்த 11ம் திகதி அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி ஒபாமா, ஜனநாயக கட்சி வேட்பாளார் ஹிலாரி...
அப்பிள் நிறுனம் கடந்த வாரம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகள் தொடர்பான செய்தியாளர் மாநாடு ஒன்றினை நடத்தியிருந்தது.
இதில் குறித்த கைப்பேசிகள் தொடர்பான சிறப்பியல்புகள் வெளியிடப்பட்டிருந்தன. இவற்றில் மின்கலங்களின் சிறப்பியல்புகளும் உள்ளடங்கும்.
குறித்த தகவல்களின்படி முன்னர் அறிமுகம் செய்யப்பட்டிருந்த iPhone 6S மற்றும் 6S Plus ஆகியவற்றில் தரப்பட்ட மின்கலங்களை விடவும் சற்று நீடித்து உழைக்கக்கூடிய மின்கலங்கள் இப்புதிய கைப்பேசிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதன்படி iPhone 6S கைப்பேசி மற்றும் iPhone 7...
ஜப்பானில் உள்ள அப்பிள் நிறுவனத்தின் iTunes பிரிவுக்கு, 118 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த iTunes பிரிவு, ஜப்பானியப் பயனீட்டாளர்கள் செலுத்தும் கட்டணத்திலிருந்து கிடைக்கும் இலாபத்தில் ஒரு பகுதியை, அதன் அயர்லாந்து கிளைக்கு அனுப்புகின்றது. அதற்கான வரி ஜப்பானில் செலுத்தப்படாத காரணத்தினாலேயே இவ் அபராதம் அறவிடப்பட்டுள்ளது.
மேலும் இவ்அபராததொகை தற்போது அப்பிள் நிறுவனத்தினால் செலுத்தபட்டுள்ளதுடன் வரி செலுத்துவதன் தொடர்பில், அண்மைய நாட்களாக அப்பிள் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் உலக அரசாங்கங்களின்...