பாணந்துறை கடற்கரையில் நீராட சென்று காணாமல் போன இரு இளைஞர்களின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று பாணந்துறை கடற்கரையில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர்.
இந்த நிலையில், பொதுமக்களின் உதவியுடன் இரு இளைஞர்கள் காப்பாற்றப்பட்டனர்.
ஏனைய இருவரும் காணாமல் போன நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ஒருவரின் சடலம் பாணந்துறை – கல்வெட்டிமோதர பிரதேசத்தில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
மற்றைய இளைஞரின்...
ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பாக சந்தேகத்தில் பேரில் நான்கு பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த மூவரும் ஓட்டமாவடிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 11.09.2016ம் திகதி ஏறாவூர்- முகாந்திரம் வீதியிலுள்ள வீட்டில் படுத்துறங்கிய 56 வயதான என்எம்.சித்தி உசைரா மற்றும் அவரது திருமணமான மகளான 32...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் ஒன்றாக சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பு கடந்த புதன் கிழமை நடந்துள்ளது. ஜனாதிபதியின் புதல்வர் டட்லி சிறிசேனவின் புதல்வரது திருமண நிகழ்வு கொழும்பு ஹில்டன் ஹொட்டலில் நடைபெற்றது. இதன் போதே மூவரும் சந்தித்துள்ளனர்.
மூன்று பேரும் ஒரு மேசையில் அமர்ந்து சுமார் 20 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தாக கூறப்படுகிறது.
எது எப்படி இருந்த போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால...
வாழ்கையில் அதிர்ஷ்டம் பலமுறை வந்தாலும் அதற்கான தக்க முயற்சிகளை சரியான சந்தர்ப்பத்தில் எடுக்காவிடின் ஒருபோதும் வெற்றி பெறாது.
ஓர் காலகட்டத்தில் சென்னை தெருக்களில் பிச்சை எடுத்த ஓர் இளைஞர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பினை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக சென்னை வந்த ஜெயவேல் என்ற இளைஞர் வேலை ஏதும் கிடைக்காததால் வறுமையின் பொருட்டு தனது பெற்றோருடன் பிச்சை எடுத்து வந்துள்ளார்.அப்போது தெருவோரம் வசிப்போரின் வாழ்க்கையை ஆவணப்படமாக...
பூமிக்கு அருகாமையில் ஆபத்து ஒன்று ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
பூமிக்கு அருகில் இன்று பயணிக்கும் பாரிய விண்கல் ஏதாவதொரு சமயத்தில் பூமி மீது மோதுண்டால், பாரிய அழிவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. இந்த விண்கல்லின் நீளம் 200 அடி நீளம் கொண்டதென கண்டறியப்பட்டுள்ளது.
எனினும் அவ்வாறான வாய்ப்புகள் மிகவும் குறைவு என துறைசார் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விண்கல் பூமியில் மோத வாய்ப்பில்லை என இலங்கை வானியல் ஆராய்ச்சியாளர் சந்தன...
நாட்டிற்குள் ஒரு மதம், ஒரு மொழி, ஒரே இனம் என்று செயற்பட்ட காலம் முடிவுக்கு வந்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறையினர் பல்லின, பல மதங்கள் மற்றும் பல மொழிகள் என்ற எண்ணக்கருவை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
முக்கிய பிரமுகர்கள் அரசியல் அதிகாரத்திற்காக இனவாதத்தை பரப்பி வருகின்றனர்.
விகாரைகள், பள்ளிவாசல்கள் மற்றும் கோவில்களுக்கு சென்றாலும் தனக்கு மதங்கள் எதுவும் இல்லை எனவும் மதங்களை தான் நம்புவதில்லை எனவும்...
வவுனியா தோணிக்கல் பிரதேசத்தில் வீடொன்றுக்குள் புகுந்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டில் இருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 48.25 மற்றும் 46.60 கிராம் தங்க உருண்டைகள், 12 தங்க மோதிரங்களை சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் கொள்ளையிட்ட தங்க ஆபரணங்களை...
தமிழகத்துக்குக் காவிரி நீர் திறக்கப்பட்டதைக் கண்டித்து கர்நாடகாவில் நடந்த வன்முறை வெறியாட்டத்தில், கே.பி.என் பேருந்துகள் உட்பட 42 பேருந்துகள் வன்முறையாளர்களால் கொளுத்தப்பட்டன.
இந்தப் பேருந்துகளை எரிக்க உதவியதாக, 22 வயதுமிக்க இளம்பெண்ணை பெங்களூரு போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
கே.பி.என் பேருந்துகள் எரியூட்டப்பட்ட பிறகு, பூர்வாங்க விசாரணைகளைத் தொடங்கிய ஆர்.ஆர். நகர் போலீஸார், டிசோசா நகரைச் சேர்ந்த ஏழு இளைஞர்களைக் கைதுசெய்தனர்.
விசாரணையில், ‘‘அடையாளம் தெரியாத ஒரு பெண், பேருந்துகளுக்குத் தீவைக்க எங்களுக்கு உதவினார்’’ எனக்...
நாட்டில் தற்போது ஆட்சியில் இருப்பது நல்லாட்சி அரசாங்கம் அல்ல. இது நாய் ஆட்சி அரசாங்கம் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பல்கலைக்கழக பேராசிரியர்களே தற்போது அரசாங்கம் விமர்சித்து வருகின்றனர்.
மேலும் தமக்கு எதிரானவர்களை அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளில் அடக்கி வருவதாகவும் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நேரத்தில் இருந்து நாட்டுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை எனவும்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது! செய்தியாளர் மாநாட்டில் சுமந்திரன்
Thinappuyal News -
தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தும் தமிழ் மக்களிடமே மீளவழங்கப்படவேண்டும். நஷ்டஈட்டைப் பெற்றுக் கொண்டு மக்களுடைய நிலங்களைஅரசாங்கத்திற்கு வழங்கவேண்டும். என்பதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும்ஏற்றுக்கொள்ளாது என தமிழ்தே தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும்,கட்சியி ன் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.
சமகால அரசியல் விடயங்கள் தொடர்பாக யாழ்.பிரதான வீதியில் உள்ள நாடாளுமன்றஉறுப்பினரின் அலுவல கத்தில் நேற்றைய தினம் மாலை பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றைநடத்தியிருந்தார்.
இதன்போது வலி,வடக்கு உயர் பாதுகாப்புவலயத்திற்குட்பட்டிருக்கும் மயிலிட்டி,...