வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் இன்று காலை மக்கள் பேருந்தினை மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா - ஆசிகுளம் வழியில் குறித்த பேருந்து போக்குவரத்தானது தமது கிராமத்தினூடாக சரியான நேரத்தில் பயணிப்பது இல்லை. இதன் காரணமாக அவ்வழியூடாக பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் காலையில் பணிகளுக்கு செல்பவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ஆச்சிபுரம் மக்கள் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் பாடசாலை நிறைவடைந்து மாணவர்கள் வீடு திரும்பும் போது தங்கள் கிராமத்தினுள்...
போர் இரகசியங்களை வெளியிடும் இழிவான நபர் நான் அல்ல என மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கமல் குணரட்ன போர் இரகசியங்களை அம்பலப்படுத்தியதாக சுமத்திய குற்றச்சாட்டு குறித்து கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… அண்மையில் வெளியிடப்பட்ட நூலின் ஊடாக எந்தவொரு போர் இரகசியங்களும் அம்பலப்படுத்தப்படவில்லை. நான் போர் இரகசியங்ளை வெளியிடும் படைவீரனல்ல. போர் இரகசியங்கள்...
பஸ் மற்றும் ஹயஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 7 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பளை பகுதியில் இன்று காலை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் இருந்து மதுகம நோக்கி பயணித்த பேருந்துடன் கொழும்பில் இருந்து வந்த ஹயஸ் வாகனம் வழித்தடம் மாறிச் சென்று பேருந்துடன் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துச் சம்பவத்தில் 4...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி மற்றும் இரண்டாவது புதல்வரிடம் இரகசிய பொலிஸார் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிய வருகிறது. செஞ்சிலுவை சங்கத்தால் 'சிரிலிய சவிய' வேலைத்திட்டத்தின் கீழ் பெற்றுக்கொடுக்கப்பட்ட டிபென்டர் ரக வாகனத்தின் நிறத்தை மாற்றி அதனைத் தனிபட்ட தேவைகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளது. இதற்கான அனுமதியை இரகசியப் பொலிஸார் நேற்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் நிசாந்த பீரிஸிடம் கோரியுள்ளனர். WPKA-0642 என்ற இலக்க தகட்டினை கொண்ட குறித்த வாகனம்...
பொலன்னறுவை மாவட்ட கிராமம் ஒன்றில் அரியவகை மலர் ஒன்று பூத்துள்ளது. குறித்த மலரினை பார்வையிடுவதற்கு ஏராளமான பொது மக்கள் வந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், மலர் நறுமணம் வீசுவதற்கு பதிலாக துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை அதிகளவான ஈக்கள் குறித்த மலரில் மொய்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், குறித்த மலரில் உள்ள கிழங்கு வகை உள்நாட்டு மருத்துவ தேவைக்காக பயன்படுத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.      
மன்னார்-மதவாச்சி பிரதான வீதியில் உள்ள குஞ்சுக்குளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான பாதையில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அருட்கலாநிதி கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையினால் நேற்றையதினம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. குஞ்சுக்குளம் கிராம மக்களின் பூரண ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்ட குறித்த நுழைவாயில் திறப்பு நிகழ்வு,குஞ்சுக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை இ.அன்ரனி சூசை தலைமையில் இடம்பெற்றது. இதன்போது மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அருட்கலாநிதி கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையுடன், அருட்தந்தையர்கள்,...
  இறைமையுள்ள சமஷ்டித் தீர்வுக்கு சிங்கள இனத்தை உள்ளடக்கிய பொதுவாக்கெடுப்பிற்கு இடமில்லை. அரசியல் யாப்பு கடவுளால் உருவாக்கப்படுவதில்லை. அது மனிதனால் உருவாக்கப்படுகிறது. இலங்கை அரசியல் யாப்புகள் அனைத்தும் இனப்பிரச்சனையை தீர்ப்பதில் தோல்வி கண்டவை மட்டுமல்ல. அவை இனப்பிரச்சனையை பெரிதும் உருவாக்குவதில் பங்கு வகித்தவையுங்கூட. மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த யாப்புகள் பிழையானவை மட்டுமல்ல சமூக நீதி பொறுத்து அவை பெருங் குற்றங்களுக்கு ஏதுவானவையாகவும் உள்ளன. இத்தகைய பிழையான, குற்றம் நிறைந்த அரசியல் யாப்புகளை உருவாக்கிய மனிதர்களே...
   வெற்றிமகள் முகா­மொன்றில் 700 பேர் தடுத்து வைக்­கப்­பட்டு அந்த முகா­முக்கு கோத்தா முகாம் எனப் பெய­ரி­டப்­பட்­டி­ருப்­ப­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் கடந்த19 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­று­கின்ற போது தெரி­வித்த தக­வ­லா­னது நாட்­டிலும் சர்­வ­தேச அள­விலும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.ஐ.நா. சபையின் மனித உரிமைப் பேரவை கூட்டத்தொடர் தொடங்­க­வி­ருக்­கின்ற காலங்­க­ளி­லெல்லாம் இவ்­வா­றான பர­ப­ரப்­பான தக­வல்­களும் அதிர்ச்சி தரும் செய்­தி­களும் வெளி­வ­ரு­வது இலங்­கை­ய­ர­சாங்­கத்­துக்கு பாரிய சவால்­களை உண்டு பண்­ணி­யி­ருக்­கி­றது...
மீண்டும் தண்ணீர் எண்ணெயாய் பற்றி எரிய துவங்கி இருக்கிறது. நைல் நதியை பங்கிட்டுக் கொள்வதில் எகிப்து, எத்யோப்பியா, சூடான் என மூன்று நாடுகள் அமர்ந்து பேசி சுமூகமான ஒரு தீர்வை எட்டி விட முடிகிறது. ஆனால், ஒரே தேசத்திற்குள் உள்ள மூன்று மாநிலங்களுக்குள், தண்ணீரைப் பங்கிட்டுக் கொள்வதில் கன அடிக் கணக்கில் பிரச்னைகள். பல லட்சம் கன அடி நீர் பகிர்ந்து கொள்ளப்பட்டதெல்லாம், இனி எப்போதும் உயிர்த்தெழ முடியாத...
  போர் நடைபெற்ற காலத்தில் போர் என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு கொள்ளையிட்டவர்களை தற்போதைய அரசாங்கம் காப்பற்ற தலையீடுகளை மேற்கொள்ளாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். கொலன்னாவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி யுத்தத்தை முற்றாக முடிவுக்கு கொண்டு வந்ததாக கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்தவர்கள் கூறுகின்றனர். யுத்தம்...