சுவிட்சர்லாந்து நாட்டில் போலி திருமணம் மூலம் குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர்களின் குடியுரிமை உடனடியாக ரத்து செய்யப்படும் என அந்நாட்டு குடியமர்வு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுவிஸ் குடியமர்வு அதிகாரிகள் இன்று செய்தியாளர்களின் சந்திப்பில் ஒரு அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், சுவிஸ் நாட்டு சட்டப்படி சுவிஸ் குடிமகன்/குடிமகளை ஒரு வெளிநாட்டினர் போலியாக திருமணம் செய்து சுவிஸ் குடியுரிமை பெற்றுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டால், அவருடைய குடியுரிமை 8 வருடங்கள் வரை ரத்து செய்யப்படும். இதுபோன்ற...
இந்த வருடம் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க மாநாடு செப்டம்பர் மாதம் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் பாரிஸ் நகரில் நடைபெற உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா, சி. சிறிதரன், சீ.யோகேஸ்வரன், ஈ.சரவணபவன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிப்பதற்காக பிரான்ஸ் நோக்கி பயணமாக உள்ளனர். இன்றைய சூழலில் தமிழ் மொழியும் கலாச்சாரமும் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் தமிழ் கலாச்சாரத்தை...
கடந்த காலத்தில் இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதல்கள் மற்றும் ஏனைய யுத்த காரணங்களால் தங்களுடைய தங்களுடைய கால்களை இழந்த முன்னாள் போராளிகள் மற்றும் சில பொது மக்களுக்கு இராணுவத்தினரால் செயற்கை கால்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு இன்று கிளிநொச்சியில் ஒத்துழைப்பு மையத்தில் இடம்பெற்றது. அமெரிக்காவின் யுஎஸ் எய்ட் உதவியுடன் கண்டி குண்டகசாலை மாற்று வலுவுள்ளோர் நிலையத்தின் அணுசரனையில் கிளிநொச்சி இராணுவத்தினரால் 28 பேருக்கு செயற்கை கால்கள் வழங்கப்பட்டுள்ளது. இராணுவத்தினருடன் நேரடி யுத்தம், மிதிவெடி...
மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்திற்கு பிற் பகுதியில் அமைந்துள்ள மரக்காலை ஒன்றில் இடம் பெற்ற திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நபரிடம் இருந்து ஒரு தொகை பணமும் மீட்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பி.ஆர்.சரத் தெரிவித்துள்ளார். குறித்த மரக்காலையின் உரிமையாளர் நேற்று (8) வர்த்தக நிலையத்தில் பணம் திருடப்பட்டமை குறித்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனை தொடர்ந்து...
கொழும்பு பம்பலப்பிட்டியை சேர்ந்த வர்த்தகர் மொஹமட் சுலைமான் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார். இந்த நபருடன் மொத்தமான 9 பேர் வர்த்தக சுலைமான் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் 5 வர்த்தகர்களின் கடவுச்சீட்டுக்களை தடைசெய்யுமாறு பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவை நீதவான் இன்று...
மரண தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் நிலை பரிதாபகரமாக மாறியுள்ளது. சிறைச்சாலையின் சீ- 3 அறையின் தனி செல்லில் துமிந்த அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட 20 மீற்றர் நீளமான அறையை கொண்ட கட்டிடத்தொகுதியின் ஒரு செல்லில் ஒரு கைதி தடுத்து வைப்பது சாதாரணமானதாகும். எனினும் தற்போது ஒரு செல்லில் துமிந்த உட்பட மூவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். குறித்த செல்களில்...
  பாதுகாப்புப் படை, பொலிஸ் சேவை மற்றும் சிறைச்சாலை திணைக்களம் ஆகியவற்றுக்கு வடக்கு, கிழக்கிலிருந்து தமிழ் பேசும் உத்தியோகத்தர்களை அதிகளவில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்காலத்தில் நாடளாவியரீதியில் உள்ள அனைத்துப் பொலிஸ் நிலையங்களிலும் தமிழ் மொழி தெரிந்த இரு பொலிஸ் அதிகாரிகளையாவது நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். வடக்கு, கிழக்கிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்கள் இல்லாமை பெரும் பிரச்சினையாக உள்ளது. இதனை நிவர்த்தி செய்வதற்கான...
முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தனவிற்கு வெளிநாடு செல்வதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இவருக்கான இந்த அனுமதி உயர்நீதிமன்ற நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்னவால் இன்று வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 4.3 மில்லியன் பணத்தினை சட்டவிரோதமாக சம்பாதித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்சமயம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ரோஹித அபேகுணவர்த்தன தனக்கு வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு நீதிமன்றில் கோரியிருந்தார். அதற்கமைய இந்த மாதம் 25ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 25ஆம் திகதி வரை இவருக்கான வெளிநாட்டு...
பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வருகைதந்துள்ளார். கொழும்பில் இருந்து பலாலிக்கு விமானம் மூலம் வந்தடைந்த ஜனாதிபதி, அங்கிருந்து உலங்கு வானூர்தியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தை வந்தடைந்தார். இந்நிலையில், யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவில் திறந்தவெளி அரங்கில் இடம்பெற்றுவரும் "போதையற்ற தேசம்" தேசிய வேலைத் திட்டத்தின் 8 ஆவது மாவட்ட நிகழ்வு இன்றைய தினம் காலை 10 மணிக்கு யாழ்.பொதுநூலகத்தின் அருகில் உள்ள வளாகத்தில்...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐவரில் ஒருவரான தெமட்டகொட சமிந்தபோகம்பறை சிறைச்சாலைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார். இன்று காலை 08.30 மணி அளவில் கண்டியில் உள்ள பல்லேகல போகம்பறை சிறைச்சாலைக்கு சமிந்தவை கொண்டு சென்றுள்ளனர். மேலும் குறித்த நபரை பலத்த பாதுகாப்பின் மத்தியில் அழைத்து வரபட்டமை குறிப்பிடத்தக்கது. வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்கனவே மரண தண்டனை பெற்ற பாதாள உலக குழுவினர் இருந்த காரணத்தினால், இவர்களின் உயிருக்கு...