பள்ளிமுனை கடற்பரப்பில் வைத்து சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை உற்பட 6 பேர் கைது-பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு.
Thinappuyal News -0
மைக்கில் காந்தன்
சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் உற்பட 6 பேரை பள்ளிமுனை கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் நேற்று (3) சனிக்கிழமை காலை 10 மணியளவில் கைது செய்துள்ள நிலையில் குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரனைகளை மேற்கொள்ள மன்னார் நீதிமன்றம் இன்று (40) ஞாயிற்றுக்கிழமை மாலை உத்தரவிட்டுள்ளது.
...
மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் தாக்கப்பட்டமை தொடர்பில், இலங்கை அரசாங்கம் கண்டத்தை வெளியிட்டுள்ளது.
கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து அன்சார், மஹிந்த ராஜபக்சவின் எதிர்ப்பாளர்களால் இன்று தாக்கப்பட்டார்.
இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கம், கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் ராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்திய நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி தனது பந்துவீச்சையும் மைதானத்தின் நாலாபக்கமும் சிதறடிப்பார் என முன்னாள் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடரைப்போல, தமிழகத்தில் முதல் முறையாக தமிழக் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.
இதில் பங்கேற்கும் காஞ்சியின் அணியின் ஆலோசகராக முன்னாள் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ உள்ளார்.
இந்நிலையில், பத்திரிக்கையாளர் பேட்டியின் போது பிரட் லீயிடம், விராட் கோஹ்லி குறித்து...
லாரன்ஸ் இயக்கி நடித்த படம் காஞ்சனா 2. இப்படத்தில் வந்த மொட மொடவென என்ற பாடல் தம்மாத்துண்டு குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் மிகவும் பிடித்தனமானது என்று கூறலாம்.
பயம் பாதி, கொமடி பாதி என்று பட்டையக் கிளப்பியது இப்படம். தற்போது அதிகமான பாடல் போட்டிகளை நாம் அவதானித்து வருகிறோம். அதில் பங்கேற்கும் குட்டீஸ்களின் குரலை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது.
இங்கு மேடை நிகழ்ச்சி ஒன்றில் சிறுமி...
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 8 பந்துக்கு 1 ஓட்டம் எடுக்க முடியாமல் திணறிய வீடியோ தற்போது இணையத்தில் உலா வருகிறது.
கிரிக்கெட் போட்டியின் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பதற்கு இப்போட்டியும் ஒரு சான்று தான்.
1995 ஆம் ஆண்டுகளில் பலம் வாய்ந்த அணிகளாக வலம் வந்த அணிகளில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணியும் உண்டு. இவர்கள் மோதும் போட்டி என்றால் ஆட்டத்தில் அனல் பறக்கும்.
அது போல தான்...
தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் ஏன் இன்னும் என் பின்னாலேயே வந்து கொண்டு இருக்கின்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.
மலேசியாவில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பிக்கு ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பிலும், தனக்கு எதிராக தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் ஆர்பாட்டம் முன்னெடுத்திருந்தமை தொடர்பிலும் மகிந்த இதன் போது தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்த மகிந்த,...
கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் எனப்படும் திட்டமிட்ட இன அழிப்பு, கிழக்கு ஈழ மக்களிள் நெஞ்சில் மாத்திரமின்றி ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் நெஞ்சிலும் ஆறாத ரணமாக படிந்துள்ளது.
செப்டம்பர் 5, 1990 ஆம் ஆண்டு, அன்று, மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவித் தமிழ் அகதிகள் 158 பேர் இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வே...
எதிர்வரும் 2019ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடக்கவுள்ள 50 ஓவர் உலகக்கிண்ண அணியில் இடம்பிடிப்பதே தனது இலக்கு என்று அதிரடி வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய யுவராஜ் சிங், இந்திய கிரிக்கெட் அணி 2007ம் ஆண்டு டி20 உலகக்கிண்ணத்தை கைப்பற்ற முக்கிய பங்காற்றினார்.
இதைத் தொடர்ந்து 2011ல் நடந்த 50 ஓவர் உலகக்கிண்ணப் போட்டியில் சகலதுறை வீரராக அசத்திய யுவராஜ் சிங்...
ஆசிய நாடுகளுள் காணப்படும் விமான நிலையங்களில் பல குறைபாடுகளைக் கொண்ட விமான நிலையமாக கட்டுநாயக்க விமான நிலையமானது 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதில் நேபாளத்தின் காத்மண்டு சர்வதேச விமான நிலையமானது முதலாவது இடத்தைப் பிடித்துள்ளதாக வெளிநாட்டு இணையம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
உஸ்பெகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் விமான நிலையங்கள் முறையே 2ஆம், 3ஆம் இடங்களை பிடித்துள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஆசிய நாட்டு விமான நிலையங்களுள் காணப்படும் பல்வேறு விடயங்களை கவனத்திற்கொண்டு இந்த...
தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
நெல்லையில் நேற்று நடைபெற்ற 13-வது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி அணி, 20 ஓவரில் 120 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக அந்த அணியின் கவுசிக் காந்தி 35 ஓட்டங்கள் எடுத்தார்.
121 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணியும் 20...