ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை முடக்கி, போலியான தகவல்களை பிரசுரித்த சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மாணவர் நன்னடத்தை மாணவரை பராமரிப்பு மையத்திற்கு ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அவரை கொழும்பு பிரதான நிதவான் கிஹான் பிலபிடியவிடம் இன்று முன்னிலைப்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் , சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 26 வயதுடைய நபர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இரண்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை...
பரிசோதனைக்காக வந்த பெண் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ‘பயிலுனர் சட்டவைத்திய அதிகாரி
Thinappuyal -
களுபோவில போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்காக வந்த பெண் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 'பயிலுனர் சட்டவைத்திய அதிகாரி பயிற்சிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
களுபோவிலை வைத்தியசாலையின் பணிப்பாளர் அசேல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.
இந்த பயிலுநர் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பயின்ற பின்னர் உள்ளகப் பயிற்சிக்காக களுபோவில வைத்தியசாலையில் பணியாற்றிவந்தார்.
குறித்த தினத்தில் காதலன் ஒருவரால் தாக்கப்பட்டு பரிசோதனைக்காக வந்த பெண் ஒருவரை குறித்த பயிலுநர் சட்டவைத்திய அதிகாரி, பெண் தாதியின் உதவியின்றி சோதனையிட்டதாக...
இராணுவ கேர்ணலின் மனைவி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் குறித்த இராணுவ கேர்ணல் பிரதீப் குமார நெத்தசிங்கவை அத்துருகிரிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இராணுவ கேர்ணல் பிரதீப் குமார நெத்தசிங்கவின் மனைவி (45) துப்பாக்கிச் சூடு காரணமாக ஏற்பட்ட காயங்களால் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர் இசுருப்புர பகுதியை சேர்ந்தவர் என்றும், மூன்று பிள்ளைகளின் தாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் குறித்த இராணுவ கேர்ணலிடம்...
காணாமல் போனோர் தினமான இன்று வலிந்து காணாமல ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் வடக்கு கிழக்கு பிரதேசங்களைச் சார்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவுகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது தேசிய நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைகள் பற்றிய செயலணிக்கு மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.
அந்த மகஜரில் “நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைகள்...
சர்வதேச காணாமல் போனோர் தினம் இன்று உலகளாவிய ரீதியாக இன்று செவ்வாய்க்கிழமை அனுஸ்டிக்கப்படுகின்ற நிலையில் காணாமல் போனவர்களது உறவினர்கள் மன்னார் நகரில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டம் இன்று காலை ஆரம்பமாகியிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் போனோர் தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றது.
இதனை முன்னிட்டு ஸ்ரீலங்காவின் பல்வேறு பகுதிகளிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் இன்று காலை முதல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சர்வதேச தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில்காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிழக்கு ஆளுநர் செயலகம் முன் ஆர்ப்பாட்டம்!
Thinappuyal -
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சர்வதேச தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் காணாமல் போனோரது உறவினர்கள் கிழக்கு மாகாண ஆளுனர் செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30க்கு ஆரம்பமாகி சுமார் ஒன்றரை மணிநேரம் வரை நீடித்தது.
வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், படுகொலைக்கும் வன்முறைக்கும் உள்ளானோரின் குடும்ப உறவுகள், கிராமிய பெண்கள் மற்றும் சாமூக அமைப்புக்கள், சிவில் சமூக...
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
சிவில் அமைப்புக்களினால் இந்த ஆர்ப்பாட்டம் காலை 10 மணி தொடக்கம் 11.30 வரை முன்னெடுக்கப்பட்டது.
ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தினால் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பிரதேசங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போனதாக அவர்களது உறவினர்கள் முறையிட்டுள்ளனர்.
எனினும் யுத்தம் நிறைவடைந்து ஏழு வருடங்கள் கடந்துள்ள நிலையில் கடத்தப்பட்டு காணாமல்போன மற்றும் கையளிக்கப்பட்டு காணாமல்போன தமது உறவுகளுக்கு...
65 இலட்சம் ரூபாய் பணத்தினை திருடிச் சென்ற நபர் கொழும்பு கிரேண்பாஸ் பகுதியில் வைத்து கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளார்.
Thinappuyal -
கண்டி வர்த்தக மைய கட்டிட தொகுதியில் அமைந்துள்ள ஹட்டன் நெஷனல் வங்கியில் பணம் மீளப்பெறும் இயந்திரத்திற்கு இடுவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட 65 இலட்சம் ரூபாய் பணத்தினை திருடிச் சென்ற நபர் கொழும்பு கிரேண்பாஸ் பகுதியில் வைத்து கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் எப்பாவளை பகுதி அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 3 மணியளவில் இவர் கொழும்பு கிரேண்பாஸ் ஸ்டேஸ் வீதியில் அமைந்துள்ள பாலமொன்று அருமைகாமையில் வைத்து...
கொழும்பு, பம்பலப்பிட்டி கொத்தலாவல அவனியூ பகுதியில் கடத்தப்பட்ட கோடீஸ்வர முஸ்லிம் வர்த்தகர் மொஹமட் சகீப் சுலைமான் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் விசாரணை அதிகாரிகளை உள்ளடக்கிய 20 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று நண்பகல் ஆகும் போது ஏற்கனவே வெளிநாட்டுப் பயணம் தடை செய்யப்பட்டுள்ள ஐந்து வர்த்தகர்கள் உள்ளிட்ட...
நோர்வே நாட்டில் உள்ள Hardangervidda mountain என்ற பகுதியில் நூற்றுக்கணக்கான காட்டுமான்கள் துள்ளி விளையாடி கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட மின்னல் காரணமாக மான்கள் கூட்டத்தில் இருந்த 323 காட்டுமான்கள் பரிதாபமாக உயிரிழந்தன. இவற்றில் 70 குட்டி காட்டு மான்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Hardangervidda mountain பகுதியில் அடிக்கடி திடீர் திடீரென மின்னல் ஏற்பட்ட போதிலும் அதிகளவிலான உயிரிழப்பு நடந்தது இப்போதுதான்...