சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் முத்தமிழ் சங்கமம்  நிகழ்வு வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலய திருமண மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.   பிரித்தானியாவின் லண்டனை தலைமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச இந்து இளைஞர் பேரவை   பல நாடுகளில் தனது கிளைகளை நிறுவி சமய, கலை, கலசார தமிழர் பண்பாட்டு விழுமியங்களை பாதுகாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதுடன், தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்களை மீள கட்டியெழுப்பும் வகையிலான பொருளாதார உதவிகளையும் செய்துவருகின்றது.   இந்நிலையில்...
கவிஞர் பீ.பி. அல்விஸ் பெரேரா அவர்களின் 50வது நினைவு தினம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (22) பிற்பகல் இலங்கை தேசிய நூலக சேவைகள் சபையில் இடம்பெற்றது. இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், பீ.பி.அல்விஸ் பெரேரா நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் தனது கடமையினை செவ்வனே நிறைவேற்றிய ஒரு சிரேஷ்ட நபர் ஆவார் எனக் குறிப்பிட்டார். SWRD .பண்டாரநாயக்க மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்களுடன் மிக...
  நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்துக்கு வருகை தரும் பக்தர்கள், தங்க நகைகள் அணிந்து வருவதை குறைத்துக்கொள்ளுமாறு யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்ண தெரிவித்தார். நல்லூர் ஆலய மகோற்சவம் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நல்லூர் ஆலயத் திருவிழா 25 தினங்கள் இடம்பெறுகின்றன. இந்நிலையில், ஆலயத்துக்கு வரும் பக்தர்களின்...
எட்டு அடி நீளமான ராஜநாகத்திடமிருந்து எஜமானின் உயிரைக் காப்பாற்றவதற்காக நாயொன்று தன் உயிரை மாய்த்துக் கொண்ட நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவமொன்று நேற்று யாழ்.கல்வியங்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேற்படி சம்பவம் யாழில், நேற்று மாலை 5.00 மணியளவில் விளையாட்டரங்கு ஒழுங்கை ஜி.பி.எஸ் வீதி, கல்வியங்காடு எனும் பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. மேற்படி வீட்டில் வசிக்கும் செல்வரட்ணம் பிரசாந்த் என்பவர் அல்சேசன் நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வந்துள்ளார். பிரஸ்தாப நாய் தினந்தோறும்...
மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் சவுண்டர்ஸ் விளையாட்டு மைதானத்தில் குப்பைகளைக் குவித்தமை தொடர்பில் உணவக விடுதி உரிமையாளர்கள் இருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த பொதுச் சுகாதாரப் பரிசோதகரான எஸ். ரவிதர்மா, பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று காலை மஞ்சந்தொடுவாய் சவுண்டர்ஸ் விளையாட்டு மைதானத்தைச் சென்று பார்வையிட்டபோது அங்கு இரவோடிரவாக பாரிய சாக்கடைக் கழிவுப் பொதிகள் கொட்டப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து பொதுமக்கள்...
துருக்கியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக 51 பேர் பலியாகியுள்ளதாகவும், 100இற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. துருக்கியில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றின் போதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இலங்கையை சேர்ந்த யாத்ரீகர்களும் இந்த தாக்குதலின் போது பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மகிஷினி கொலன்னே தெரிவித்துள்ளார். காஸியான்டிப், இஸ்தான்புல் போன்ற நகரங்களிலுள்ள ஐ.எஸ்.ஸின் ரகசிய உள்ளூர்...
இலங்கையில் இருந்து இஸ்ரேலிற்கு பணியாற்ற சென்ற நபர் ஒருவர் மீது பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் பேரில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த நபர் வீடு ஒன்றை சுத்தம் செய்வதற்காக சென்ற நிலையில் 6 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார். சந்தேகநபர் சட்டவிரோதமான முறையிலேயே அங்கு பணியாற்றி வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ஜெருசலத்தில் வாழ்ந்து வரும் உதிசா பிரியங்கார என்ற 46 வயதுடையவரே...
இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 16 குதிரைகள் நுவரெலியா குதிரைப் பந்தய திடலில் சுமார் மூன்று கோடி ரூபாவுக்கு ஏலத்தில் விற்கப்பட்டன. குதிரைப் பந்தய போட்டிகளில் ஈடுபடுகின்ற உரிமையாளர்களே இவ் 16 குதிரைகளையும் பெற்றுக்கொண்டனர். இனிவரும் காலங்களில் நடைபெறும் போட்டிகளில் 16 குதிரைகளும் மேலதிகமாக கலந்துகொள்ள உள்ளன. நுவரெலியாவின் குதிரைப் பந்தய போட்டிகளை உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியாக எடுத்துச் செல்லும் நோக்கத்துடனேயே இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த காலங்களில்...
இராணுவத்தினரின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்காக தான் மிகுந்த அக்கறையுடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தான் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் அதன் பொறுப்பு தனக்கு அதிகம் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பனாங்கொட இராணுவ முகாமில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இராணுவத்தினரின் கௌரவம் மற்றும் கண்ணியத்தை பாதுகாப்பதுடன், அவர்கள் உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த வீரர்கள் என்று நிரூபிப்பதற்கு அரசு அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும்...
வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 2016 ஆம் ஆண்டுக்கான வடக்கு மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது  திட்டத்தின்கீழ் நன்னீர் மீன்குஞ்சுகளை வடக்கில் உள்ள குளங்களில் வைப்பிலிடும் நிகழ்வின் ஒரு பகுதியாக மன்னார் கட்டுக்கரை குளத்தை மையமாக கொண்டு நன்னீர்மீன்பிடியில் ஈடுபடும் சங்கங்களுக்கு சுமார் 75000 மீன்குஞ்சுகளை வைப்பிலிடும் நிகழ்வு 22-08-2016 திங்கள் மாலை இடம்பெற்றது. இவ் நிகழ்வில் மத்திய மீன்பிடி அமைசர் மகிந்த அமரவீர அவர்களும், வன்னி...