கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் ஐக்கிய மக்கள்சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்றுநீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படஉள்ளார். நாமல் ராஜபக்ஷவிற்கு சொந்தமான நிறுவனம் ஊடாக முறைகேடாக கிடைத்த பணத்தில் ஹேலோகோப் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டார். தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்த போதே நிதி மோசடி விசாரணை பிரிவினரால் ஆகஸ்ட் 15 ஆம்...
புனர்வாழ்வு முகாம்களில் வைத்து விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு விஷ ஊசிகள் ஏற்றப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து ஆராய ஐந்து பேரடங்கிய குழு ஒன்றை வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நியமித்துள்ளார். வடக்கு சுகாதார அமைச்சின் விசாரணைக்கு உதவும் வகையில் இந்தக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழுவுக்கு மருத்துவக்கலாநிதி சிவன் சுதன் தலைமை ஏற்றுள்ளார். இந்தக்குழுவுக்கு உதவுவதற்காக வடக்கின் மாவட்டங்களில் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த குழு அமைப்பு தொடர்பான தீர்மானம் அண்மையில் வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது
இலங்கையர்களின் இரத்தமாதிரிகளை பெறுவதற்கு யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கும் அமெரிக்க வைத்தியர்களுக்கு எவ்வாறு எந்த நெறிமுறையின்கீழ் அனுமதி வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது தேசிய பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளனர். இந்தக்குழுவின் தலைவர் வைத்தியர் ச்சன்ன ஜெயசுமான்ன இந்தக்கேள்வியை எழுப்பியுள்ளார். தமக்கு கிடைத்த தகவல்களின்படி குறித்த வைத்தியர்கள், விஷ ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் முன்னாள் விடுதலைப்புலிகளின் இரத்த மாதிரிகளை பெறவுள்ளனர். இந்த நிலையில் குறித்த இரத்தமாதிரிகளை பெறுவதற்கு அதிகாரிகளின் அனுமதி தேவை. எனவே இந்த விடயம் தொடர்பில்...
சிந்தித்து செயலாற்றக்கூடிய வகையில் மிருகங்களிடம் ஆறாவது அறிவு இல்லாத நிலையிலும் சொல்லிக்கொடுத்ததை அப்படியே செய்யும் ஆற்றல் அவற்றிடம் உண்டு. அதிலும் மனித இனத்திற்கு நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட ஓரங்குட்டான் வகை குரங்குகள் திறமை வாய்ந்தவை. அவ்வாறான ஒரு குரங்கை எப்படியெல்லாம் பழக்கி போட்டோவுக்கு போஸ் கொடுக்க வைக்கின்றார்கள் பாருங்கள். மனிதர்கள் கூட இவ்வளவு ரொமான்டிக்காகவோ அல்லது ஸ்டைலாகவோ போஸ் கொடுக்க மாட்டார்கள்.  
சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை ஒன்றில், மத்திய தரைக்கடல் உணவுமுறை (Mediterranean Diet ) பழக்க வழக்கம் நீண்ட ஆயுள் தரவல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ இது பண்டையக் காலத்தில் பின்பற்ற பட்டு வந்த உணவு பழக்க முறை தான். அரிசி உணவுகள், சோடா பானங்கள், வெள்ளை சர்க்கரை, அதிகளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை நாம் உட்கொள்ள ஆரம்பித்த காலத்தில் தான் புதுப்புது உடல்நலக் கோளாறுகள் வெகுவாக பெருக ஆரம்பித்தது. பரம்பரை வியாதிகள்...
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலகிய பின்னர் ரயில்வே நிலையங்களில் பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. பிரித்தானியா போக்குவரத்து துறை இதுதொடர்பாக வெளியிட்டுள்ள புள்ளியல் அறிக்கையில், பிரித்தானியாவில் உள்ள ரயில் நிலையங்களில் மொத்தம் 119 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளது. அதுவும் இந்த சம்பவங்கள் கடந்த யூன் 23 ஆம் திகதி முதல் யூலை 7 ஆம் திகதி வரையிலான காலத்திலேயே அதிகரித்துள்ளது. ஒருநாளைக்கு 8 வன்முறை...
அமெரிக்காவின் பிரபல நடிகையான Lindsay Lohan என்பவர் ரஷ்யாவின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, அந்நாட்டு அரசாங்கத்திடம் பல்வேறு வேண்டுகோள்களை முன்வைத்துள்ளார். Pust govoryat என்ற Talk Show நிகழ்ச்சி ரஷ்யாவில் மிகப்பிரபலமான ஒன்றாகும், இந்நிலையில் இதில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க நடிகை Lindsay Lohan- க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், நான் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன், ஆனால் நான் கேட்கும் சில வேண்டுகோள்களை அந்நாட்டு அரசாங்கம் நிறைவேற்றம்...
புர்க்கினி உடைக்கு பிரான்ஸ் முழுவதும் தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோர் கடற்கரை நோக்கி பேரணி மேற்கொண்டனர். பிரான்சின் தென் பகுதியில் அமைந்துள்ள Palavas கடற்கரையில் குவிந்த 200க்கும் அதிகமான பொதுமக்கள் புர்க்கினி உடைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். சமூகவலைத்தளத்தில் இதுகுறித்து ஆதரவு திரட்டிய ஒரு குழு இந்த போராட்டத்தை முன் நின்று நடத்தியதாக உள்ளூர் பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளன. கடந்த ஒருவாரம் முன்னர் இதுகுறித்து சமூக வலைப்பக்கத்தில் விவாதிக்கப்பட்டு இந்த முடிவுக்கு...
துருக்கியில் திருமணவிழாவின் போது நடந்த வெடி குண்டு தாக்குதலுக்கு 12-14 வயது சிறுவனை ஐஎஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ளதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். சிரியா துருக்கி எல்லையில் அமைந்துள்ள காசியந்தெப் நகரில் நடந்த திருமண நிகழ்ச்சியின் போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினார். இதனால் 30 பேர் பலியானதாகவும், 100 க்கும் மேற்பட்டோருக்கு காயங்கள் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து அந்நாட்டு அதிபர் Recep Tayyip Erdogan கூறியதாவது,...
உலகம் முழுவதும் 13 கோடி பேர் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வருகின்றனர். அவர்களுக்கு தாராளமாக உதவி செய்ய வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் அழைப்பு விடுத்துள்ளார். உலக மனிதாபிமான தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19ம் திகதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நியூயார்க்கில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது: உலகம் முழுவதும் சுமார் 13 கோடி மக்கள் தங்களின்...