ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர் நவீன் திசாநாயக்கஆகியோருக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று பிற்பகல் இடம்பெறவுள்தாகதெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலகத்திலேயே குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளமைகுறிப்பிடத்தக்கது. இலங்கை தேயிலை சபையின் 60 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை திறைசேரிக்குசுவீகரிப்பதற்கு முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும்,அவ்வாறு இடம்பெற்றால் தான்பதவி விலகுவதாகவும் அமைச்சர் நவீன் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். குறித்த சம்பவம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கே ஜனாதிபதி அமைச்சர் நவீனைஅழைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மலையகத்தில் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவிவருவதால் பெருந்தோட்டத் தொழிலாளர்களும், பொதுமக்களும் அசௌகரியஙளுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது. அந்த வகையில் 22.08.2016 திங்கட்கிழமை அதாவது இன்றைய தினம் காலை முதல் பெய்துவரும் கடும் மழையினால் அட்டன் பொலிஸ் நிலைய விளையாட்டு மைதானம் மற்றும் சிற்றுன்டிச்சாலைகளிலும் நீர் நிரம்பியுள்ளதால் பொலிஸாரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் வாகன சாரதிகளும் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நோட்டன் பிரிட்ஜ் நிருபர்...
நுவரெலியா குதிரை பந்தய திடல் ரோயல் ட்ரூப் கழகத்தின் (ROYAL TURF CLUN) ஏற்பாட்டில் (20.08.2016) குதிரை சவாரி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை பார்வையிடுவதற்காக நாடளாவிய மற்றும் உலகளாவிய ரீதியில் ரசிகர்கள் கலந்துகொண்டதுடன் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரி தயசேகர பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இரண்டு பாடல்களையும் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந் நிகழ்வில் குதிரை சவாரி (Horse Race) இசை நிகழ்ச்சி (Music Prugramme), ஆடை அலங்கார போட்டி (Fhaison...
கொத்மலை வௌண்டன் தோட்டத்தில் அனர்த்தத்தின் மத்தியில் வாழ்ந்துவந்த நீண்டகாலமாக வாழ்ந்துவந்த 58 குடும்பங்களுக்கு பசும்பொன் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் புதிய தனி வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் தலைமையில் கடந்த 21.08.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை இடம்பெற்றது. அமைச்சர் பி.திகாம்பரம் அவர்களின் பணிப்புரைக்கமைய மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சின் ரூபாய்...
  பாகிஸ்தான் ஒன்றும் நரகம் அல்ல அது நல்ல நாடு என்று நடிகை ரம்யா கூறியுள்ளதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். நடிகையும், காங்கிஸ் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா கர்நாடக மாநிலம் மாண்டியாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் பாகிஸ்தானுக்கு டூர் சென்றன். அது நரகம் அல்ல ஒரு நல்ல நாடு. மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியது போன்று பாகிஸ்தான் ஒன்றும் நரக நாடு இல்லை. அவருடைய...
புகையிரதங்கள் மீது கல் வீசுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. புகையிரதங்களில் பயணித்துக் கொண்டிருக்கும் நபாகளை இலக்கு வைத்து கல் வீசி எறியும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட உள்ளது. இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்த 0.38 மில்லிமீற்றா ரக 25 கைத்துப்பாக்கிகள் புகையிரத திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் இந்த கைத்துப்பாக்கிகள் வெலிசறை கடற்படை முகாமிலிருந்து வழங்கப்பட்டதாக புகையிரதப் பாதுகாப்புப் பிரிவு பொறுப்பாளர் அனுர பிரேமரட்ன தெரிவித்துள்ளார். சிங்கள...
நேற்றைய தினம் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்கு சென்ற மாணவன் ஒருவனைக் காணவில்லை என மாணவனின் பெற்றோர் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த சம்பவம் நுவரெலியா - நோர்வூட் பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. சிறுவன் தன்னுடைய மூத்த சகோதரியுடன் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு புலமைப்பரிசில் பரீட்சை நிமித்தம் சென்றதாகவும், அதன் பின்னரே காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக...
தற்போதைய அரசியலில், முன்னாள் போராளிகளுக்கான விஷ ஊசி விவகாரம், தென்னிலங்கை அரசியலிலும், கூட்டு எதிர்க்கட்சியிலும் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் மைத்திரி ரணில் கூட்டணியில் சிக்கல்கள் போன்ற பல்வேறு விமர்சனங்களுக்கு லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் சிரேஷ்ட சட்டவாளரும் மூத்த அரசியல் ஆய்வாளருமான எம்.எம். நிலாம்டீன் தெளிவு படுத்தியுள்ளார். மேலும், இலங்கைக்கு அப்துல் கலாம் வந்திருந்தபோது அவருக்கு இந்த விஷ ஊசி ஏற்றப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டிருப்பதாகவும், பலத்த சந்தேகங்களை...
மட்டக்களப்பு - காத்தான்குடியில் நேற்று பிற்பகல் (21) வான் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து காத்தான்குடி முதியோர் இல்ல வீதியில் இடம்பெற்றுள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்த சிறுவனே படுகாயமடைந்துள்ளார். மேலும், இந்த சிறுவன் படுகாயமடைந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த விபத்து பற்றிய மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  
கிளிநொச்சி - ஆனையிறவு பகுதியில் ஐ.நாவை நோக்கிய நீதிக்கான நடைபயணம் இன்று (22) காலை 8.00 மணிக்கு ஆரம்பமானது. உமையாள்புரம் ஆலயமுன்றில் இருந்து ஆரம்பமான பேரணி கிளிநொச்சியில் அமைந்துள்ள ஐ.நா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களையும் கையளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ பலத்துடன் திட்டமிட்ட வகையில் தமிழர் தாயகப்பகுதிகளில் பௌத்த விகாரைகளையும் புத்த சிலைகளையும் நிறுவிய சிங்கள மயமாக்கலை எதிர்த்தும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும், உரிமைகளை வென்றெடுப்பதற்கானதும், காணாமல்...