இணையத்தளப் பக்கங்களை தரவிறக்கம் செய்து அல்லது சேமித்து வைத்து இணைய இணைப்பு இல்லாத நேரத்தில் அல்லது வசதியான நேரத்தில் அவற்றைப் படிக்கக்கூடிய வசதியை தரும் ஒரு அப்பிளிக்கேஷனே Instapaper ஆகும்.
இவ் அப்பிளிக்கேஷனை iPhone, iPad, Android, Computer, மற்றும் Kindle ஆகிய சாதனங்களில் நிறுவிப் பயன்படுத்த முடியும்.
தற்போது இந்த அப்பிளிக்கேஷனை புகைப்படங்களை பகிர்ந்து மகிழும் வசதியை தரும் முன்னணி வலைத்தளமான Pinterest கொள்வனவு செய்யவுள்ளது.
Instapaper அப்பிளிக்கேஷன் ஆனது 3...
அப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அடுத்த மாதம் அறிமுகம் செய்யவுள்ளது.
அனைவரினதும் எதிர்பார்ப்பைப் பெற்றுள்ள இக் கைப்பேசி தொடர்பாக தகவல்கள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் இருந்தன.
இதன் தொடர்ச்சியாக தற்போது மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது குறித்த கைப்பேசியானது iPhone 7 எனும் பெயருடனயே அறிமுகம் செய்யப்படும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் அவ்வாறில்லாமல் iPhone 6SE என்ற பெயருடனேயே குறித்த கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு...
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் சகலதுறை வீரரான திசர பெரேராவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஆட்டமிழந்த போது திசர பெரேரா அதை கொண்டாடிய விதம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்தே ஒழுங்கு விதிமுறையை மீறி நடந்து கொண்டதாக திசர பெரேராவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஓட்டங்கள்...
அமெரிக்கா சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் அங்குள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டு டி20 போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
இதற்கான அமெரிக்கா சென்றுள்ள இந்திய வீரர்கள், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
அதுபோல இந்திய வீரர்களான அஷ்வின், தவான் மற்றும் புவனேஷ்குமார் ஆகியார் அங்குள்ள பிரபல கூடைப்பந்து Miami Heats NBA கிளப்பிற்கு சென்று சிறிது நேரம் விளையாடினார்கள்.
இந்திய அணியின் தலைவர்...
போலந்து நாட்டை சேர்ந்த வட்டு எறிதல் வீரர் மலா சாவ்ஸ்கி, கண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 3 வயது சிறுவனின் சிகிச்சைக்காக, தான் ரியோ ஒலிம்பிக்கில்வென்ற வெள்ளிப் பதக்கத்தை தானமாக அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலந்து நாட்டை சேர்ந்த 33 வயதான மலா சாவ்ஸ்கி ரியோ ஒலிம்பிக்கலில் வட்டு எறிதல் போட்டியில் 67.55 மீட்டர் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இவருக்கு சமீபத்தில் ஒரு கடிதம் வந்துள்ளது. அதில் தனது 3 வயது...
திலக்கரட்ன டில்ஷான் போட்டியை மாற்றியமைக்ககூடிய வீரர் என கௌரவ துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜீன ரணதுங்கா தெரிவித்துள்ளார்.
சர்வதே கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வுப் பெறுவதாக டில்ஷான் அறிவித்த பொழுதே, அவர் இலங்கை கிரிக்கெட்டிற்கு ஆற்றிய பணியை பாராட்டும் வகையில் அமைச்சர் இக்கருத்தினை வெளியிட்டார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், திலக்கரட்ன டில்ஷான் விளையாட்டு வீரர் என்ற வகையில் இந்நாட்டிற்கு ஆற்றிய சேவையை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது.
மத்திய வரிசை துடுப்பாட்டக்காரராக தன்னுடைய...
2015-2016ம் ஆண்டின் ஐரோப்பாவின் சிறந்த கோலுக்கான விருதை பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தட்டிச்சென்றார்.
கடந்த நவம்பர் மாதம் பார்சிலோனா கேம்ப் நவ் மைதானத்தில் நடந்த சாம்பியன்ஸ் லீக் முதல் சுற்றில் பார்சிலோனா – ரோமா அணிகள் மோதின.
குறித்த போட்டியில் ரோமா அணிக்கு எதிராக பார்சிலோனா வீரர் மெஸ்ஸி அடித்த கோலே ஆண்டின் சிறந்த கோலாக ரசிகர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஆட்டத்தில் பார்சிலோனா அணி 6-1 என்ற...
2015-2016ம் ஆண்டுக்கான ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
போர்ச்சுக்கல் கால்பந்து அணித்தலைவரான கிரிஸ்டியானா ரொனால்டோ இவ்விருதை தட்டிச்சென்றுள்ளார்.
இறுதிச்சுற்றில் போர்ச்சுக்கல் வீரர் ரொனால்டோ, பிரான்சின் அந்துவான் கிரீசுமன், வேல்ஸின் கேரத் பேல் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது.
இறுதியில் ரொனால்டோ 2015-2016ம் ஆண்டுக்கான ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதைப் பெற்றுள்ளார்.
கிரிஸ்டியானா ரொனால்டோ இந்த விருதை ஏற்கெனவே 2013-2014ம் ஆண்டில் வென்றுள்ளதால் இது அவர் பெறும் இரண்டாவது விருதாகும்.
அர்ஜென்டினாவின் லயோனல்...
கருப்பாக இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்குமே வெள்ளையாக வேண்டும் என்ற ஆசை இருக்கும், இதற்காக பல்வேறு ரசாயன பொருட்களை உபயோகிப்பார்கள், இது உடனடியாக பலன் தந்தாலும் பிற்காலத்தில் ஆபத்துகள் தான் அதிகம்.
எனவே வீட்டில் இருந்தபடியே வெள்ளை நிறத்தை பெற உங்களுக்கான எளிய பேஸ் பேக் டிப்ஸ் இதோ,
பால்பவுடர் மற்றும் எலுமிச்சை
பால்பவுடர் மற்றும் எலுமிச்சை சாறுடன் சிறிது தேன் கலந்து, பேஸ் பேக் போல தயாரித்து முகத்தில் தடவி 10 நிமிடத்திற்கு...
வெந்தயத்தை நீரில் ஊற வைத்து , மறுநாள் காலையில் எழுந்து அந்நீரை வெறும் வயிற்றில் குடித்து வருவதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெறலாம்.
கொலஸ்ட்ரால்
வெந்தயத்தில் ஸ்டெராய்டல் சாப்போனின்கள் என்ற நிறமி இருப்பதால், இவை நம் உடலில் உள்ள அதிகப்படியான கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
சர்க்கரை நோய்
சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெந்தய தண்ணீரை தினமும் குடித்து வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்பட்டு சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது.
இதய நோய்
வெந்தயத்தில் பொட்டாசியம் இருப்பதால், இவை...