புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் சந்தேகத்து இடமாக உயிரிழந்தவர்களுடைய விபரங்களை உடனடியாக வழங்குமாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கேட்டுள்ளார். உயிரிழந்த முன்னாள் போராளியின் பெயர், சிகிச்சை பெற்ற வைத்தியசாலை, உயிரிழந்த திகதி இந்தத் தகவலை வழங்குபவரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் என்பவற்றை உடனடியாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அல்லது பிராந்திய சுகாதார சேவைகள் நிலையத்தில் எழுத்து மூலம் கையளிக்குமாறும் சுகாதார அமைச்சர் கோரியுள்ளார். இந்த...
வடக்கில் உள்ள வேலையில்லாப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். இதன் ஒரு அங்கமாக புலம் பெயர் நாடுகள் மற்றும் வெளிமாவட்டங்களில் உள்ள முதலீட்டாளர்களை உள்ளீர்க்கும் முகமாக யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி “முதலீடுகளும், தொழில் வாய்ப்புக்களும்” என்ற கருப் பொருளில் செயலமர்வு ஒன்று நடாத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். வடமாகாண ஆளுநர் ஆலுவலகத்தில் நேற்று மாலை ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில்...
இம்முறை இடம்பெற்று வரும் உயர்தரப் பரீட்சைகளில் முறைகேடுகள் இடம்பெற்றுவருவதாக கல்வி கல்விசாரா ஊழியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. பரீட்சைகள் மண்டப உதவியாளர் தெரிவுகளில் பல மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக இந்ததொழிற்சங்கத்தின் செயலாளர் அஜித்.கே.திலகரத்ன தெரிவித்துள்ளார். மேலும் தகுதியற்றவர்கள் இவ்வாறு உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதால் இம்முறைபரீட்சை மண்டபங்களில் அதிகம் முறைபாடுகள் இடம்பெறுவதற்கு காரணம் எனவும் அவர்சுட்டிக்காட்டியுள்ளார். கல்வி சேவையில் நிரந்தர சேவையாளர்களாக 25,000 பேர் இருப்பதாகவும்,குறித்தகடமைகளுக்காக 3500 பேர் மாத்திரமே தேவையாக காணப்படும் நிலையில் பரீட்சைமண்டபத்துக்கு பொறுப்பான அதிகாரிகள்...
அக்குரஸ்ஸ நகரில் இன்று பகல் இரு தரப்பிடையே ஏற்பட்ட மோதலால் மூன்று மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அக்குரஸ்ஸ நகரின் துணிக்கடை ஒன்றில் குறித்த கடை ஊழியர்களுக்கும், இம்முறை உயர்தரப்பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் சிலருக்கும் முறுகல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த முறுகல் நிலையானது இன்று நகரில் வைத்து மாணவர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு முற்றியுள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கத்திக்குத்துக்கு இலக்கான மூன்று மாணவர்களுள் ஒருவர்...
கிளிநொச்சி ஏ 35 வீதி கோரக்கன் கட்டுப்பகுதியில் இராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்த கரைச்சி வடக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான கட்டடம் நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் அரச மற்றும் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் படையினரின் பயன்பாட்டில் இருந்து வருவதனால் அதன் உரிமையாளர் கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இந்தநிலையில் நல்லாட்சி அரசினால் கணிசமான நிலங்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றன.   இதனடிப்படையில் கிளிநொச்சி ஏ 35 வீதி கோரக்கன் கட்டுப்பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும்மேலாக...
எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளான 153 பேர் இந்தவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய பால்வினை நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. பெண்களை விட ஆண்களுக்கு அதி வேகமாக எச்.ஐ.வி தொற்றால் வீக்கம் ஏற்படுவதாகவும் அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது அதனை குறைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டு தாக்கம் அதிகரித்த நிலையில் இன்னும் பலர் அதற்கான மருந்தினை பெற்றுக்கொள்ள முன்வரவில்லை என்றும் அந்த பிரிவு...
வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி, அதன் பகுதிகளை கழற்றி எஞ்சினை கழிவு நீர் வாய்காலில் மறைத்து வைத்ததாக கூறப்படும் இரண்டு இளைஞர்கள் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, மோட்டார் சைக்கிளை பாகங்களாக கழற்றி  விற்கும் இன்னும் சிலரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்தள்ளதாக பொலிஸார் கூறினர்.
பாகிஸ்தான் வழியாக ஐரோப்பாவுக்கு சூப்பர் நெடுஞ்சாலையை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. இந்தியா உரிமை கோரும் பகுதிகள் வழியாக இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது. சீனாவின் ஜின்ஜி யாங் பகுதியில் இருந்து ஐரோப்பாவுக்கு நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் குவேதாரில் சீன உதவியுடன் கட்டப்பட்டு வரும் துறைமுகம் வழியாக நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. மேலும், இந்த நெடுஞ்சாலை சர்ச்சைக்குரிய கில்ஜித் (பலுசிஸ்தான் மாகாணம்) பகுதி வழியாகவும் செல்கிறது. இப்பகுதி தற்போது பாகிஸ்தான் கட்டுப்பாட்டில்...
சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த திருமதி பாலேந்திரன் ஜெயக்குமாரி மீண்டும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதன்படி எதிர்வரும் 16ம் திகதி பயங்கரவாத குற்றத்தடுப்பினரின் அலுவலகத்திற்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆட்பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த ஜெயக்குமாரி வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதுடன் கடவுச்சீட்டும் முடக்கம் செய்யப்பட்டிருந்தது. அதேநேரம் ஜெயக்குமாரி கைது செய்யப்பட்ட போது அவருடைய அடையாள அட்டை, வங்கிப் புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களையும்...
வடமாகாணத்துக்கான வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நியதிச் சட்டம் விரைவில் உருவாக்கப்பட்டு ஐந்து மாவட்டங்களிலும் உள்ள மக்கள் அதி உச்சப் பயனை அடையக் கூடிய வகையிலும், பாதுகாப்பான, தரமான போக்குவரத்துச் சேவையை வழங்குவதற்கும் தீர்மானித்துள்ளேன். எதிர்வரும்-01 ஆம் திகதி தொடக்கம் இந்த நியதிச் சட்டம் மூலமான நன்மைகளை எமது மக்கள் அனுபவித்துக் கொள்ள முடியும் எனத் தெரிவித்தார் வடமாகாணக் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன். வடக்கு மாகாண, மாகாண...