வேகம், விறுவிறுப்பு, பரபரப்பு மற்றும் புதிய சாதனைகளுக்குப் பஞ்சமில்லாத ஒலிம்பிக் தடகளப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன.
ஒலிம்பிக்கில் மற்ற போட்டிகளைவிட தடகளப் போட்டிகளுக்குத்தான் எப்போதுமே முக்கியத்துவம் அதிகம். ரியோ டி ஜெனீரோவில் உள்ள ஜுவா ஹாவேலாஞ்சே மைதானத்தில் நடைபெறும் தடகளப் போட்டிகள், ஒலிம்பிக்கின் கடைசி நாளான 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 47 பிரிவுகளில் நடைபெறும் இப்போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இதில்...
ரியோ ஒலிம்பிக்கில் இன்றைய தினம், இந்திய வீரர்கள் பங்குபெறும் போட்டிகளின் விவரம்:
வில்வித்தை
ஆடவர் தனிநபர் காலிறுதிக்கு முந்தைய சுற்று
அதானு தாஸ் (இந்தியா) -
லீ சியூங்யன் (தென் கொரியா),நேரம்: மாலை 5.43
தடகளம்
ஆடவர் வட்டு எறிதல் தகுதிச்சற்று
விகாஸ் கெளடா, நேரம்: இரவு 7.20
மகளிர் குண்டு எறிதல் தகுதிச்சுற்று
மன்பிரீத் கெளர்,நேரம்: மாலை 6.35
ஆடவர் 800 மீ. ஓட்டம்
ஜின்சன் ஜான்சன், நேரம்: மாலை 6.58
ஆடவர் 20 கி.மீ. நடைப் போட்டி
குருமீத் சிங்,மணீஷ் சிங், கணபதி, நேரம்:...
பாக்.,கிற்கு எதிரான டெஸ்ட் – நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த இரு இங்கிலாந்து வீரர்கள் மீது நடவடிக்கை!
Thinappuyal -
பத்திரிகையாளரின் விமர்சனத்தை கண்டித்தது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்களான ஸ்டுவர்ட் ஃப்ராட் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்டுவர்ட் ஃப்ராட் மற்றும் ஹேல்ஸ் களமிறங்கினர். அந்த அணி 23 ரன்கள் எடுத்திருந்த போது ஹேல்ஸ்...
ரியோ: ரியோ ஒலிம்பிக் போட்டியில் தொடர்ந்து 4-வது தங்க பதக்கத்தை கைப்பற்றி அமெரிக்க வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் அசத்தியுள்ளார். இத்தொடரில் ஏற்கனவே தான் பங்கேற்ற 3 பிரிவுகளிலும் தங்கம் வென்ற பெல்ப்ஸ் தற்போது 200 மீட்டர் தனிநபர் மெடலி பிரிவு நீச்சலில் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஜப்பான், சீனா, ஜெர்மனி, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வீரர்களுடன் களமிறங்கிய பெல்ப்ஸ் 1 நிமிடம் 54.66 விநாடிகளில் இலக்கை எட்டி...
விடுதலைப்புலிகளுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டின்கீழ் எமிழ்காந்தன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
Thinappuyal -
சுனாமி நிதிகளை பிழையான வழிகளில் பயன்படுத்திய குற்றச்சாட்டின்கீழ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான டிரான் அலஸ் மற்றும் எமிழ்காந்தன் ஆகியோருக்கு எதிராககுற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சட்டமாஅதிபர் பரிந்துரை செய்துள்ளார்.
கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் இந்த பரிந்துரை அறிக்கை நேற்று (11) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதிகளை முறைகேடாக பயன்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
புனர்அமைப்பு மற்றும் அபிவிருத்தி நிறுவனமான ராடாவின் ஊடாக சுனாமிக்கான நிதியை விடுதலைப்புலிகளுக்கு வழங்கிய குற்றச்சாட்டுக்காக 2015ஆம் ஆண்டு...
ஹங்குராங்கெத்த-தமுனுமேய பிரதேசத்தில் சட்டவிரோத ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை பிரதேசவாசிகளின் தகவலுக்கமைய இந்த ஆயுதங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் டி.56 ரக துப்பாக்கி குண்டுகள் 261, துப்பாக்கி பாகங்கள் 3, மெகசின் 4, உள்ளிட்டவையும் ரம்போ வர்க்க கத்திகளையும் ஹங்குராங்கெத்த பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆயுதங்கள் ஆயுத களஞ்சியசாலை ஒன்றில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள பொலிஸார் இது தொடர்பான விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் தாஜுடீன் கொலை தொடர்பான விசாரணைகளுக்கு தடை ஏற்படுத்துவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கொலைகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு, குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பீ.ஆர்.எஸ்.ஆர்.நாகமுல்லவினால் தடை ஏற்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இந்த விசாரணைகள் தொடர்பிலான தகவல்களை ராஜபக்சர்களுக்கு இரகசியமாக வழங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாகமுல்லவினால் ஏற்படுத்தப்படும் தடை தொடர்பிலான தகவல்களை இரசிய தன்மை கருதி வெளியிட...
தமது காதலியை மகிழ்ச்சிப் படுத்துவதற்காக திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இரண்டு இளைஞர்கள் காலியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
காலி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வீடுகள் மற்றும் கடைகளில் உள்நுழைந்து 18 இலட்சத்திற்கும் அதிகமான நகைகள் பணம் மற்றும் மின் உபரணங்களை குறித்த இளைஞர்கள் திருடியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் 18 மற்றும் 21 வயதானவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்றைய தினம் பத்தேகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் இவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி...
ஆப்கானிஸ்தானில் இயங்கும் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இந்தியாவில் உள்ளவர்கள் இணைந்து கொள்வதற்கான பாதையாக யாழ்ப்பாணம் மாறி வருகிறது என்று தகவல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை கொழும்பின் ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தான் செல்வதற்கு பங்களாதேஸ் அல்லது துபாய் ஊடான பாதையை பயன்படுத்த முடியும்.
எனினும் அங்கு பாதுகாப்பு அதிகாரிகள் தமது கண்காணிப்பை அதிகரித்துள்ள நிலையில், புதிய வழியாக யாழ்ப்பாணத்தின் ஊடாக ஆப்கானிஸ்தான் செல்ல முயற்சிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஐஎஸ் தீவிரவாதிகளுடன்...
சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் படகு ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த தம்மை காப்பாற்றியவர்களை காண்பதற்காக கனடாவில் வசிக்கும் 110 தமிழர்கள் நியூபௌன்ட்லேன்ட், சென். மேரீஸ் குடாவுக்கு நேற்று சென்றிருந்தனர்.
கைவிடப்பட்ட படகு ஒன்றில் இருந்து 150 தமிழர்கள், 1986ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் திகதியன்று நியூபௌன்ட்லேன்ட் பொதுமக்களால் காப்பாற்றப்பட்டனர்.
இதன்பின்னர் அவர்கள் கனடாவின் பல்வேறு இடங்களில் குடியேறினர்.
இந்தநிலையில் 30வருடங்கள் கழித்து தம்மை காப்பாற்றியவர்களை காண்பதற்காக குறித்த 110 பேர் நியூபௌன்ட்லேன்டுக்கு...