ஒரு பச்சிளம் குழந்தை கொடியைப் பார்த்து நாட்டின் பெயரை பளிச் பளிச் என்று சொல்லுகிறது என்றால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியுமா? அக் குழந்தையின் பெயர் லஸ்யபிரியா.3 வயதை எட்டி பிடிக்க இன்னும் 1 மாதம் இருக்கின்றது. இந்திய தேசியக் கொடியில் மேற்பகுதியில் சிவப்பு வருமா? பச்சை வருமா? என்று அடிக்கடி குழப்பம் வந்துவிடும். இத்தனைக்கும் 1ம் வகுப்பு முதல் தேசிய கொடியின் கீழ் நின்று தாயின் மணிக்கொடி பாரீர்… என்று...
செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மழலைகளின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சொலை சிறுமிகள் இல்லத்தின் மீது கடந்த 2006 ஆகஸ்ட் 14ஆம் திகதியன்று இலங்கை விமானப்படையினர் தாக்குதல் நடத்தியிருந்தனர். குறித்த குண்டுத் தாக்குதலில் பாடசாலை மாணவிகள் 61 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன். 129 பேர் காயமடைந்திருந்தனர். மேற்படி சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும், நினைவு தின நிகழ்வுகள் எதிர்வரும் 14ஆம் திகதி யாழ் முனியப்பர் கோவிலடியில்...
யாழ்ப்பாணம் இளவாலை வடலியடப்பு பகுதியில் மீட்க்கப்பட்ட சிசுவை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இளவாலை வடலியடப்பு பகுதி கோயிலுக்கு அருகில் பெட்டி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிறந்து 10 நாட்களேயான சிசு இன்று காலை மீட்க்கப்பட்டது. இந்த சிசு தெல்லிப்பளை மருத்துவமனைக்குச் கொண்டுச் செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டது. இந்ந நிலையில் மூன்று அரை கிலோ கிராம் நிறையுடைய குறித்த குழந்தை தேக ஆரோக்கியத்துடன்...
நிதி தூய்மையாக்கல் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைக்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட 6 பேரை உடனடியாக கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார். கைது செய்யுமாறு கடந்த 28ஆம் திகதி பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு உத்தரவிட்ட போதிலும், இன்றுவரை நாமலை கைது செய்ய நிதி மோசடி விசாரணை பிரிவு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதற்கான காரணம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...
ஒலிம்பிக் பதக்கம் என்பது அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுக்கு ஜஸ்ட் லைக் தட் விஷயம்.எத்தனையோ நாடுகள் பல ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற போதிலும், பதக்கப்பட்டியலில் இடம் பெற முடியாமலேயே போய் விடுகின்றன.இந்தியா கூடவும் அப்படித்தானே. ஆனால் கொசோவோ என்ற குட்டிநாடு, பங்கேற்ற முதல் ஒலிம்பிக்கில்  அதுவும் தனிநபர் பிரிவில் தங்கம் வென்று சாதித்துள்ளது. ரியோ ஒலிம்பிக்கில் இரு நாடுகள் புதுமுகங்களாக களம் கண்டன. ஒன்று, ஐரோப்பிய நாடானா கொசோவா; மற்றொன்று...
  காரைதீவு,எமக்கு புனர்வாழ்வளிப்பதாகக்கூறி விஷமேற்றி பாரிய துரோகத்தை செய்து எம்மை நம்பவைத்து ஏமாற்றியுள்ளது இலங்கை அரசாங்கம். நாம் தினம் தினம்செத்துக்கொண்டிருக்கின்றோம். எனவே சர்வதேசமும் எமது தமிழ் அரசியல்வாதிகளும் விரைந்து துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முன்னாள் போராளிகள் கோரிக்ககை விடுத்துள்ளனர். காரைதீவைச் சேர்ந்த முன்னாள் போராளிகளான பெரியதம்பி வசந்தகுமார் (வயது45) மற்றும் செல்வி சுப்பிரமணியம் தவமணி(வயது36) ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், தமிழினப் போராட்டத்தில் அர்ப்பணிப்புடன் உயிரை...
நிஸ் ஸ்டார் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் நோட்டன் தோட்ட சிறுவர் நிலைய சூழல் சுத்தம் செய்யும் சிரமதானப் பணி 08.08.2016 திங்கட்கிழமை நடைபெற்றது.  நோட்டன் தோட்ட  இளைஞர், யுவதிகள், முதியோர்கள் என பலரும் சிரமதான பனியில் கலந்துகொண்டனர். நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்
சீனாவில் ஆயிரம் ரோபோக்கள் ஒன்றாக நடனமாடி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது. சீனாவின் கியுண்டாவ் நகரில் நடந்த பீர் திருவிழாவின் போதே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்ற ரோபோக்கள் ஒவ்வொன்றும் 43.8 செ.மீ உயரம் கொண்டது, சுமார் 1007 ரோபோக்கள் செல்போன் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு சுமார் ஒரு நிமிடம் தொடர்ச்சியாக நடனமாடி அசத்தியது. இதற்கு முன்னதாக 540 ரோபோக்களை வைத்து நிகழ்த்தப்பட்ட சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் செல்பி என்றால் என்னவென்று தெரியாதவரை வேற்றுகிரகவாசி அளவுக்கு பார்க்கிறோம். ஆனால் நமக்கு அதைபற்றி எந்தளவும் தெரியும். அமெரிக்க புகைப்படக்கலையின் முன்னோடியாக கருதப்படும் ராபர்ட் கொரனலிஸ் தான் முதன் செல்பி புகைப்படத்தை எடுத்தவர். ஆனால் இது திட்டமிட்டு எடுக்கப்பட்டதல்ல, 1839ம் ஆண்டு Daguerreotype கேமராவில் சாதாரணமாக புகைப்படம் எடுக்க முயலும் போது லென்ஸ் மூடியை சரியாக கழட்ட முடியாததால் முன்னாள் ஓடி வந்து முயற்சித்துள்ளார். ஒரு நிமிடத்துக்கு மேல்...
இந்தியாவில் ஸ்மார்ட் போன் விற்பனை அதிகரித்து, உலகில் சீனா, அமெரிக்காவிற்கு அடுத்து ஸ்மார்ட் போன் விற்பனைக்கான மூன்றாவது பெரிய சந்தையாக திகழ்ந்து வரும் நிலையில், ஆப்பிள் நிறுவனம் கடும் சரிவை சந்தித்துள்ளது. சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தியாவில் 2015ம் ஆண்டை விட கடந்த மூன்று மாதங்களில் 35 சதவீத விற்பனை சரிந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை - செப்டம்பர் மாதங்களில், 12 லட்சம் போன்கள் விற்பனை ஆனது....