முறையற்ற அனுமதிப்பத்திரங்களை பயன்படுத்தி மணல் கடத்தலில் ஈடுபட்ட நிலையில் லொறிகள் டிப்பர்களென 5 வாகனங்களை கைப்பற்றியதுடன், அவற்றறை செலுத்தி சென்ற சாரதிகளும் கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தர்மபுரம் பொலிஸார் இன்று (சனிக்கிழமை) விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே குறித்த லொறிகளை கைப்பற்றியுள்ளனர்.  . அனுராதபுரம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மணல் ஏற்றிச்செல்வதற்கான அனுமதிப்பத்திரங்களை கொண்டு வட்டக்கச்சி பகுதியிலிருந்து மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் 2 லொறிகளும், வழி அனுமதிப்பத்திரத்திற்கு மாறாக...
மாகாண சபைக்கான அதிகாரங்கள் என்பது பெயரளவில்  மாத்திரமே உள்ளது. மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் தம்மால் காத்திரமான விடயங்களை செய்ய முடியாத நிலையே காணப்படுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் கவலையுடன் தெரிவித்துள்ளார்.. மாகாண சபைகளின் புதிய அதிகாரப் பகிர்வும் அதற்கான தீர்வும் என்ற தொனிப்பொருளில் இரு நாள் மாநாடு இன்று (சனிக்கிழமை) நீர்கொழும்பு ஹெரிடேன்ஸ் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. மாற்றுக்கொள்கை நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து...
இலங்கையில் சட்டம் நீதியான முறையில் நடைபெறவில்லை. திருகோணமலை குமரபுரம் படுகொலைச் சம்பவம் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு  என நல்லிணக்கத்திற்கான கருத்தறியும் செயலமர்வில் பெண்மணி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். நல்லிணக்கத்திற்கான கருத்தறியும் செயலமர்வு இன்று (சனிக்கிழமை) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்று வருகின்றது. குறித்த செயலமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பெண்ணொருவர் இவ்வாறு விமர்சித்துள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் சட்டம் நீதியான முறையில் நடைபெறவில்லை....
பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடாத்தப்படும் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான விருது வழங்கும் வைபவம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தலைமையில் நேற்று (05) பிற்பகல் சினமன் கிரேண்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இலங்கைப் பொருளாதாரத்திகு பெண்கள் ஆற்றும் விசேட பங்களிப்பினைப் பாராட்டி 10 பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு இதன்போது விருதுகள் வழங்கப்பட்டதுடன் சிறந்த தொழில்முயற்சியாளருக்குரிய விருது ஜனாதிபதி அவர்களினால் திருமதி லக்மினி விஜேசுந்தரவிற்கு வழங்கி வைக்கப்பட்டது. மகளிர் கைத்தொழில் மற்றும்...
மேற்படி நிகழ்வு தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியின் ஹொலிருட் தோட்டம் நுவரெலியா பிராந்திய பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி பொறுப்பு மற்றும் பாம் நிறுவனத்தின் பங்களிப்புடன் 417 முதியோர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு அடையாளங்காணப்பட்ட 52 பெரியோர்களுக்கு கண் படல சத்திர சிகிச்சையும் ஏனைய 92 முதியோர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வும் நேற்று 04- 08-2016 ஆம் திகதி காலை 11.30 மணிக்கு நுஃஹொலிருட் தமிழ் வித்தியாலயத்தில் தோட்ட மனிதவள அபிவிருத்தி குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஹொலிருட்...
யாழ்ப்பாணம், கீரிமலை பிரதேசத்தில் புதிய மீன்படி துறைமுகம் நிர்மாணிப்பது தொடர்பாக அரசாங்கம் எவ்வித தீர்மானங்களும் எடுக்கவில்லை என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்துக்கள் புனிதமாகக் கருதும் யாழ்ப்பாணம் கீரிமலையில் மீன்பிடி துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கான அரசாங்கம் முயற்சிப்பதாகவும், அவ்வாறு கோவிலுக்கு அருகில் மீன்படித் துறைமுகைம் அமைக்கப்பட கூடாது என்றும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர,...
2016ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு வெகு கோலகலமாக ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு நாடுகளினதும் குழுக்களுக்கு, அந்தந்தநாடுகளின் தலைசிறந்த வீரர்கள் தலை தாங்குகின்றனர். பார்ப்போரின் கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் மிகவும் நேர்த்தியான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. ஒலிம்பிக் வரலாற்றில் முதல் தடவையாக அகதிகள் குழுவொன்றும் அணி வகுப்பில் இணைந்து கொண்டு போட்டியில் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த முறை ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலின் - றியொ டி ஜெனேரோ நகரில் நடைபெறவுள்ளது. இதற்காக...
சிரியா அலப்போ நகரின் முக்கிய இடமொன்றை கைப்பற்றியதாக சிரிய கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினருக்கும் சிரிய அரப படையினருக்கும் இடையில் நீண்ட காலமாக போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அலேப்போவின் கட்டுப்பாட்டை கைப்பற்றுவதில் இரு தரப்பிற்கும் இடையில் கடும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அலப்போவில் அமைந்துள்ள அரசாங்கப் படையினரின் பீரங்கி முகாமை கைப்பற்றியதாக சிரிய கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். எனினும் இந்தக்கூற்றை சிரிய அரசாங்கப்படையினர் நிராகரித்துள்ளனர். படை...
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்கும் திட்டமில்லை என பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்கப்பட உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் சுமத்தும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கலப்பு நீதிமன்றம், வெளிநாட்டு நீதவான்கள், வெற் வரி மற்றும் பிணை முறி தொடர்பில் கோசம் எழுப்பி வந்த கூட்டு எதிர்க்கட்சி தற்போது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்கப்பட உள்ளதாக போலிப்...
போதைப் பொருட்களை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு நகரை பீடித்துள்ள போதைப்பொருள் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். போதைப்பொருள் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத்திட்டம் ஒன்று முன்வைக்கப்படாது எவ்வளவு வீடுகளை நிர்மானித்தாலும் பலனில்லை என அவர் தெரிவித்துள்ளார். வீடுகளை நிர்மானிப்பதனை போன்றே போதைப் பொருள் இல்லாதொழிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மாளிகாவத்தையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார்.