யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 43 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டதற்கு அமைய இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை துாதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை விரைவில் நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை துாதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு மாத காலப்பகுதிக்குள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி...
சோமாலி தலைநகர் மொகடிசூவில் அமைந்து விமானநிலையத்துக்கு அருகில் பாரிய குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இரு குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மன்னார் – முள்ளிக்குளம் கிராம மக்களை அவர்கள் தற்காலிகமாக வசிக்கும் மலைக்காடு காட்டு பிரதேசத்தில் நிரந்தர வீட்டுத்திட்டத்தை அமைத்து நிரந்தரமாக குடியமரத்தும் முயற்சிகளில் நல்லாட்சி அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மக்களுக்கு சொந்தமான 2500 ஏக்கர் காணிகளை கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் கைப்பற்றிவைத்திருக்கும் ஸ்ரீலங்கா கடற்படையினர், கடந்த ஒன்பது வருடங்களாக இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர விடாது தடுத்து வருகின்றனர்.
யுத்தம் காரணமாக கடந்த 2007 ஆம் ஆண்டு...
தமிழ்ப்படங்களில் ஹீரோயினாக நடிப்பதற்கு ஈடாக, முன்னணி ஹீரோ, ஹீரோயின்களுக்கு அம்மாவாக நடிக்கவும் கடும் போட்டி நிலவுகிறது. முன்னாள் ஹீரோயின்கள்தான் இந்த போட்டியில் இருக்கிறார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் அம்மாவாக நடிப்பதற்கென்றே சில நடிகைகள் இருந்தார்கள். அவர்கள் அறிமுகமாகும்போதே அம்மா நடிகையாகவே அறிமுகமானார்கள். லட்சுமி ராமகிருஷ்ணன், மீரா கிருஷ்ணன், கம்பம் மீனா, சுஜாதா உள்பட பலர் ஹீரோக்களுக்கோ, ஹீரோயின்களுக்கோ அம்மாவாக அறிமுகமானர்கள்.
ஆனால் தற்போது முன்னாள்...
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள சுமார் 100 தொழிலாளர்களில் இலங்கையர்களும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பணிக்கான அனுமதிகாலம் காலாவதியானமை, சம்பளம் வழங்கப்படாமை, போதிய உணவு, நீர் மற்றும் சுகாதார வசதிகள் இன்மையால் குறித்த தொழிலாளர்கள் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர்.
நாடு திரும்புவதற்கு பணமோ உரிய ஆவணங்களோ இன்றி தாம் உள்ளதாக காணொளி ஒன்றின் ஊடாக நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் கூறியுள்ளார்.
அபுதாபியின், கயந்தி என்ற பகுதியிலுள்ள முகாமில் தாம் உள்ளதாகவும் ஸ்ரீலங்கா,...
ரஜினி நடிப்பில் கடந்த ஜுலை 22-ந் திகதி வெளிவந்த ‘கபாலி’ பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறது. வெளிவருவதற்கு முன்பே பல்வேறு சாதனைகளை படைத்த இப்படம், வெளிவந்த பிறகும் சாதனைக்கு மேல் சாதனையை படைத்து வருகிறது. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி இரண்டாம் பாகம் வரும் என்பதுபோல முடிக்கப்பட்டு இருக்கிறது.
எனவே, படத்தை பலரும் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? என்ற கேள்வியோடு திரையரங்குகளில் இருந்து வெளியே வந்தனர். இந்த கேள்விக்கு ‘கபாலி’...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி வரை நீடிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் உத்தரவிட்டார்.
இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டார்.
புங்குடுதீவு மாணவியின் படுகொலை வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகின்றது.
இன்றைய தினம் இவ்வழக்கில் எந்த விடயங்களும் ஆராயப்படாமல், சந்தேகநபர்களின்...
கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளில் ஒரு தொகுதி காணிகளை உடனடியாக விடுவிப்பதற்கு பாதுகாப்பின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
இவ்வாறு விடுவிக்கப்படவுள்ள காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டு அவர்களை விரைவில் மீள்குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.
கிளிநொச்சி நகரை அண்மித்த பிரதேசமான பரவிப்பாஞ்சானில் 180 ஏக்கர் காணிகளை இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ளது.
இவ்வாறு இராணுவத்தினர் வசமுள்ள காணிகளில் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டுள்ள...
யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் கடந்த ஞாயிற்றுகிழமை இரவு வயோதிபர் ஒருவரை மோதி விபத்துக்கு உள்ளாக்கி, மரணத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற காரினை நேற்று திங்கட்கிழமை கோப்பாய் பொலிசார் கைப்பற்றியுள்ளதுடன் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.
கல்வியங்காடு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீதியில் சென்ற வயோதிபர் ஒருவரை காரினால் மோதி விபத்தினை ஏற்படுத்தி விட்டு காரில் சென்றவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
விபத்துக்குள்ளான வயோதிபரை அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். வைத்தியசாலையில் சிகிச்சை...
தெனியாய – பிட்டபெத்தர பிரதேசத்தில் 13 வயது சிறுமியை ஒரு மாதமாக துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய 30 நபர்களைத் தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட நபர் வழங்கிய தகவலுக்கமைய பஸ் நடத்துநர்கள், சாரதிகள், வர்த்தகர்கள் உள்ளிட்ட சமூகத்தில் பல முக்கயஸ்தர்கள் இதனுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கைதுசெய்யப்பட்ட நபர் இது தொடர்பில் பல அதிர்ச்சித் தகவல்களை பொலிஸாரிடம் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.