சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வு நாட்டை பிளவுபடுத்தும் அலகாக கூறுவது தவறானது. உலகில் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில் குறித்த அதிகாரப் பகிர்வை அடிப்படையாக கொண்ட நிர்வாகம் காணப்படுகின்றது. இங்கு தனி நாடாக அதிகார பகிர்வை உள்வாங்கிய அலகுகளை கருதுவதில்லை என இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் ஹெயின் வோல்கர் நெடர்குன் தெரிவித்தார். அத்துடன், சுவிட்ஸர்லாந்தின் சமஷ்டி முறையை இலங்கையில் பசைப்போட்டு ஒட்ட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கைக்கும் – சுவிஸர்லாந்திற்கும் இடையிலான...
  ஒலிம்பிக் தொடருக்கான உத்தியோகபூர்வ விளையாட்டு வைத்திய நடவடிக்கைகளுக்காக இலங்கையைச் சேர்ந்த இரு வைத்தியர்கள் முதன்முறையாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கராபிடிய போதனா வைத்தியசாலையின் விளையாட்டு வைத்தியப் பிரிவின் பிரதானி வைத்தியர் ஹிமான் டி சில்வா மற்றும் வைத்தியர் சங்க தேபுவனஆராச்சி ஆகியோரே இவ்வாறு, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது. குறித்த இருவருக்கும் தேவையான விமான டிக்கெட்டுக்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொடுக்குமாறு, சுகாதார அமைச்சர்...
நண்பரை, அடித்துக் கொலை செய்த சுன்னாகம் பொலிஸார், அந்தக் கொலையை தற்கொலையாக மாற்றி, மரணச் சான்றிதழ் வழங்கினர்’ என, சுன்னாகம் பொலிஸாருக்கு எதிராக சந்தேகநபர்கள், மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்றுத் திங்கட்கிழமை (25), பரபரப்புச் சாட்சியம் வழங்கியுள்ளனர். ‘உனக்கு தனி நாடு தேவையா?’ எனக்கூறி நண்பரை அடித்துக் கொலை செய்ததாகத் தெரிவித்த சந்தேகநபர்கள், நண்பனைக் கொலை செய்ததாகக் கூறப்படும் பொலிஸாரையும் அடையாளங்காட்டினர். அவர்கள் அடையாளம் காட்டிய அனைத்துப் பொலிஸாரையும் கைது செய்யுமாறு,...
90ம் ஆண்டில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'குச் குச் ஹோத்தா ஹை' என்ற இந்தித் திரைப்படத்தில் தாயின் மறைவுக்குப் பிறகு தனிமையில் வாடும் தனது தந்தைக்கு அவருடைய பழைய காதலியை தேடிச் சென்று தந்தைக்கு திருமணம் செய்து வைப்பார் 8 வயது மகள். சினிமாவில் பார்த்து ரசித்துப் பார்த்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம், கேரளாவில் நிஜத்திலும் அரங்கேறியிருக்கிறது. கேரளா மாநிலம் கொல்லத்தில் வசிக்கும் அனிதா செம்புவில்யால், தனது இளம்வயதில், ஜி.விக்ரம் என்ற...
ஊர்காவற்றுறை கடற்படைத் தளங்களில் கடற்பரப்பை நோக்கி சி.சி.ரி.வி. தொழில்நுட்பக் கெமராக்கள் பொருத்தப்படுகின்றன. இப்பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை கடற்படையினரின் முகாமின் வெளிப்புறங்கள் தோறும் இவ்வாறு நவீன கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதேவேளை, அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட, நீருக்கு அடியில் இயங்கும் பாதுகாப்பு கெமராக்களும் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24-ம் தேதி இன்ஜினீயர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமாரை போலீஸார் கைதுசெய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவரை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தது தனிப்படை போலீஸ். அப்போது அவர், சுவாதியை எப்படிக் கொலை செய்தேன் என்ற தகவலை விரிவாகச் சொன்னதாக போலீஸ் சொல்கிறது. அவருடைய வாக்குமூலத்தை போலீஸ் தரப்பில் இருந்து சேகரித்தோம். அதில், பி.இ படிப்பில் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு கோச்சிங் கிளாஸுக்காக சென்னை...
இலங்கையர் உட்பட சுமார் 100 தொழிலாளர்கள், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நிர்க்கதியானநிலைக்கு உள்ளாகியிருப்பதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. இந்திய தொழிலாளர்களும் இதில் அடங்குகின்றனர். தமது தொழில் வீசா முடிவடைந்த நிலையிலேயே இவர்கள் நிர்க்கதிக்கு உள்ளாகியிருப்பதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இவர்கள் அனைவரும் இந்திய அரசாங்கத்திடம் நிதியுதவியை கோரியுள்ளனர்.தமது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துக்கொள்ள உதவுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நிதிவசதியோ அல்லது ஆவணங்களோ இன்று தாம் நாட்டுக்கு திரும்பிச்செல்ல முடியாதுள்ளதாகஅவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த தொழிலாளர்களில் பங்களாதேஸ் மற்றும் பாகிஸ்தானியர்களும் உள்ளடங்குகின்றனர். தமக்கு தொழில்...
ஜப்பானில் ஊனமுற்றவருக்கான மருத்துவமனை வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 45 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிரது. ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே அமைந்துள்ள ஊனமுற்றவருக்கான மருத்துவமனை வளாகத்தில் மர்ம நபர் திடீரென்று கத்தியால் தாக்கியதில் 19 பேர் சம்பவயிடத்தில் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் 45 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தகவலறிந்து விரைந்து வந்த பொலிசார் குறிப்பிட்ட மர்ம நபரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். காயமடைந்தவர்களில் 20...
கொடிய யுத்தத்தினால் உள்ளங்கள் உடைக்கப்பட்டுள்ளது. உள்ளங்கள் நொந்து போயுள்ளது. ஒவ்வொரு சமூகங்கள் சந்தேகக் கண்களுடன் பார்க்கின்ற நிலைமையே மன்னார் மாவட்டத்தில் உள்ளது. உள்ளங்கள் இணைக்கப்பட வேண்டும் மக்கள் மத்தியில் ஒற்றுமையினை ஏற்படுத்த அனைவரும் கை கோர்க்க வேண்டும் என மன்னார் மூர்வீதி யூம்மாப்பள்ளிவாசல் மௌலவி அசீம் தெரிவித்தார். வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சின் மன்னார் மாவட்ட உப அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயெ அவர்...
மீள்குடியேற்றச் செயலணியின் செயற்பாடுகளை முடக்கும் வகையிலான வடக்கு மாகாண சபையின் நடவடிக்கைகளை நாம் பொறுத்துக்கொண்டு, அதன் வாலாக இருக்கப் போவதில்லை என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் முறையாக ஒரு கட்டமைப்பின் கீழ் குடியேற்ற வேண்டும். வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குடியேற்றி அவர்களை நிம்மதியாக வாழ வைக்கவென உருவாக்கப்பட்ட மீள்குடியேற்ற செயலணியின் செயற்பாடுகளை முடக்கும் வகையில் வடக்கு...