ஈரான் மீண்டும் இலங்கைக்கு பெற்றோலிய எண்ணெயினை ஏற்றுமதி செய்யவுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குவதுடன் ஈரானிலிருந்து பெற்றோலிய எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு முதல் ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடையின் காரணமாக இலங்கை அரசு எண்ணெய் இறக்குமதியை தடைசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விசேட சந்திப்பொன்று இலங்கையின் பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடிக்கும், ஈரானின் பெற்றோலிய வள அமைச்சருக்கும் இடையில் நேற்றைய...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு சிங்கள மாணவர்கள் இன்னமும் செல்லவில்லை என சிங்கள பௌத்த மாணவர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறிய போதிலும் சிங்கள மாணவர்கள் எவரும் பல்கலைக்கழகத்திற்கு செல்லவில்லை என பல்கலைக்கழகத்தின் சிங்கள பௌத்த மாணவர் சங்கத்தின் எஸ்.துசார என்ற மாணவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
யார் இல்லையென்றாலும் சிங்கள மாணவாகளுக்கு பல்கலைக்கழகத்தில் சிக்கல் நிலைமை காணப்படுகின்றது.
வீதியில்...
ஜேர்மனி ஸ்டட்கார்டு பகுதியில் இடம்பெற்ற வெட்டுக்கத்தி தாக்குதலில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஸ்டட்கார்டு நகரில் உள்ள ரீட்லின்ஜென் பகுதியில் இளைஞர் ஒருவருக்கும் யுவதி ஒருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினை அடுத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் உயிரிழந்த அதேவேளை மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்டவர்...
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, இலங்கையில் உண்மையான சமாதானத்தை கொண்டுவருவதற்காக முன்வைத்த யோசனைகளை நிறைவேற்றுவதற்காக கனடா, தொடர்ந்தும் இலங்கைக்குஊக்கமளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ருடீயு (Justin Trudeau) இதனை தெரிவித்துள்ளார்.
1983ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளைநினைவுபடுத்தும் வகையில் உலகளாவிய ரீதியாக அனுஸ்டிக்கப்படும்; கறுப்பு ஜூலைநிகழ்வுகளில் கனடாவும் பங்கேற்பதாக கனேடிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இலங்கையின் போரில் உயிர்நீத்த இலங்கையர்கள் அனைவருக்கும், தமிழர்எதிர்ப்பு நடவடிக்கையின்போது உயிர்நீத்த...
வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
1916 ஆம் ஆண்டு சிறிய கொட்டகையில் ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலை இன்று பல மாணவர்களை கொண்டு இயங்கி வருகின்றது.
இந் நிலையில் நேற்று இடம்பெற்ற நூற்றாண்டு விழாவின் முதல் நாள் அமர்வு போற்பிள்ளை அரங்கில் இடம்பெற்றது. இதன்போது இறுவட்டு வெளியீடு இடம்பெற்றதுடன் பாடசாலையில் கல்வி கற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள், ஓய்வுபெற்ற பாடசாலை...
இலங்கை உட்பட்ட பல உயர்ஸ்தானிகரங்களும் தூதரகங்களும் லண்டன் மாநகர போக்குவரத்து (congestion charge) நெருக்கடி கட்டணங்களை செலுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தில் பிரித்தானியாவின் வெளியுறவு இராஜாங்க மற்றும் பொதுநலவாயத்துறை செயலாளர் பொரிஸ் ஜோன்ஸனால் வெளியிடப்பட்டுள்ளது.
2003ம் ஆண்டு போக்குவரத்து சேவைக்காக அப்போதைய லண்டன் மாநகர முதல்வர் Ken Livingstone இந்த கட்டணத்தை அறிமுகப்படுத்தினார்.
அன்று முதல் இது வரியாக இல்லாமல் கட்டணமாக அறிவிடப்பட்டு வருகிறது.
லண்டனில் காலை 7 மணிமுதல்...
சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மீனவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடல் எல்லையை மீறி மீன்பிடிக்கும் மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதால் மீன்பிடி செயற்பாடு குறைவடைந்துள்ளதாக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் விடுதலை செய்யப்படும் அதேவேளை அவர்களது மீன்பிடி உபகரணங்கள் மீள் கையளிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக இலங்கையில்...
தற்போது உள்ள வாழ்க்கைமுறை முற்றிலும் மாறிவிட்டது, ஓடிக் கொண்டே இருக்கும் இந்த சமூகத்தில் நாம் மற்ற விடயங்களில் எடுக்கும் அக்கறையை உடல்நலத்தில் சற்றும் எடுத்துக் கொள்வது இல்லை.
இதனாலே பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை நாம் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம்.
இருப்பினும் அவற்றை கண்டுகொள்ளாமலே அன்றாட நாட்களை கவனித்துக் கொண்டே இருப்பதால் அதன் மூலம் வரும் உச்சகட்ட பிரச்சனையை சமாளிக்க முடியாமல் தற்போது ஏராளமானோர் திக்குமுக்காடி வருகின்றனர்.
வாழ்க்கையில் தன் உடல்நலத்தை பற்றி கவலை...
இத்தாலியில் 101 வயது பாட்டி ஒருவர் கருப்பை மாற்றத்தின் மூலம் 17வது குழந்தையைபெற்றெடுத்துள்ளார்.
இத்தாலியை சேர்ந்த Anatolia Vertadella(101) என்ற பாட்டிக்கு ஏற்கனவே 16 குழந்தைகள் உள்ளன, இந்நிலையில்இவருக்கு 48 வயது இருக்கையில், கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் அறுவை சிகிச்சைமூலம் இவரது கர்ப்பப்பை அகற்றப்பட்டது.
ஆனால், இவருக்கு மீண்டும் கருத்தரித்து குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என ஆசை வந்துள்ளது, தான் பயன்பாடற்று இருப்பதாக உணர்ந்த இவர், எப்படியாவது 17 வது குழந்தையை...
ஹம்பாந்தோட்டை பொருளாதார திட்டத்தை ஆரம்பிப்பதற்காக 10 பில்லியன் டொலர்களுக்கான முதலீட்டாளர்களை உள்ளீர்க்கும் வகையிலான பேச்சுக்களை இலங்கை, சீனாவுடன் ஆரம்பித்துள்ளது.
இந்தப் பொருளாதார திட்டத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு, மின்வலு உற்பத்தி மற்றும் கைத்தொழில் வலயங்கள் என்பன மையப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் கண்டி பெரும்பாக அபிவிருத்தி, வடமேல் மாகாண கைத்தொழில் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டம், மேல்மாகாண மற்றும் தென்மாகாண சுற்றுலா மற்றும் கைத்தொழில் திட்டம் என்பன அடுத்து வரும்...