தனுஷ் அடுத்து வடசென்னை படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க பல நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில் விஜய் சேதுபதியிடம் கேட்டதாகவும், அவர் அதை மறுத்ததாக கூறப்பட்டது, இதை நாமே தெரிவித்து இருந்தோம். இந்நிலையில் தனுஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதி வடசென்னை படத்தில் ஒரு கேமியோவாக வந்து செல்கிறார் என கூறியுள்ளார்.
இளைய தளபதி விஜய் தெறி வெற்றியால் மிகவும் சந்தோஷத்தில் உள்ளார். இப்படத்தை தொடர்ந்து இவர் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கனடா சென்ற விஜய் விரைவில் சென்னை திரும்பவுள்ளாராம், சென்னை வந்த அடுத்ததாக விஜய்-60 படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள உள்ளாராம். இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் இரண்டு சண்டைக்காட்சிகள் எடுக்கப்படவுள்ளதாம்.
தென்னிந்திய சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்பது பல கலைஞர்களின் விருப்பம். அந்த வகையில் வில் அம்பு பட இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கிய தா என்னும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீவிஜய் ராகவன். தற்போது இவர் இரண்டாவது படமாக ஸ்ரீ பாலாஜி இயக்கியிருக்கும் எங்க காட்டுல மழை என்ற திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி வெளியிட்டிற்கும் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
வரதட்சணை கொடுமை இல்லாத சீரியல்களை இன்றைய காலத்தில் பார்க்க முடியாது. தற்போது நிஜத்திலேயே பிரபல தொகுப்பாளினியும், சின்னத்திரை நடிகையுமான ஸ்ரீவாணி வரதட்சைண புகாரில் சிக்கியுள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் வசித்து வரும் இவரின் அண்ணன் பாப்ஜி அண்மையில் மரணமடைந்துள்ளார். இந்நிலையில் பாப்ஜி மனைவி விக்ராபாத் மகளிர் காவல் நிலையத்தில் ஸ்ரீவாணி மீது புகார் அளித்துள்ளார். அதில், என் கணவர் இறந்த பிறகு என்னை வீட்டை விட்டு துரத்தும் நோக்கத்துடன் வரதட்சைண கேட்டு கொடுமை...
படகு மூலம் ஆஸ்திரேலிய பயணித்த இலங்கை வீரன் ஆஸ்திரேலிய மண்ணில் இரட்டை சத சாதனை. படகு மூலம் 4 ஆண்டுகளுக்கு முன்னர் அகதியாக பயணித்த உடைப்பை சேர்ந்த 25 வயதான ஒரு வீரர், ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கழக மட்ட போட்டிகளில் இரட்டை சதமடித்து அசத்தியுள்ளார். இவரது குடும்பம் இப்போதும் உடம்பில் வசித்துவரும் நிலையில், இவர் மிகவும் அபாயகரமானதாக எச்சரிக்கப்படும் படக்குப் பயணம் மூலம் 4 ஆண்டுகளுக்கு முன்னர் அஸ்திரேலிய மண்ணை அடைந்தார். அகதி...
  திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்தும், படிக்க வசதியில்லாததால் திருச்சி மாணவி ஆடு மேய்த்துக் கொண்டிருக்கிறார். திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, மேலக்குழுமணியை சேர்ந்த முத்துவீரன்-மலர்கொடி தம்பதியரின் மூத்த மகள் பிருந்தாதேவி. இவர் குழுமணி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பில் 486 மார்க் எடுத்தார். அதிக மதிப்பெண் எடுத்ததை பார்த்த ஆசிரியர்கள், பிருந்தாதேவியை பிளஸ் 2 படிக்க நாமக்கல் மாவட்டம், வினாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சேர்த்துவிட்டனர். முத்துவீரன்...
  அன்பே ஆருயிரே.. இனி நாம் ஈருடல் ஓருயிர்… நீ தான் நான்.. நான்தான் நீ.. என்று காதல் ரசம் சொட்டச் சொட்ட வசனம் பேசியதெல்லாம் அந்தக் காலம் பாஸ்.. இப்போதெல்லாம் கள்ளக்காதலுக்காக போட்டுத் தள்ளி விட்டு ரத்தம் சொட்ட சொட்ட கத்தியுடன் கிளம்பிப் போய்க் கொண்டிருக்கிறார்கள் ஆண்களும், அவர்களுக்குச் சமமாக பெண்களும். சென்னையில் நாளுக்கு நாள் கள்ளக்காதல் தொடர்பான கொலைகள் அதிகரித்து வருகின்றன. ஆண்களை பெண்கள் போட்டுத் தள்ளுவதும் சமமான...
இராணுவத்திடம் சரணடைந்த பின்னர், காணாமல் போனவர்கள் சம்பந்தமாக இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த பெயர்ப் பட்டியலை ஏற்றுக்கொள்ள முடியாது என முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ்.சம்புதீன் அறிவித்துள்ளார். போரின் போது காணாமல் போனவர்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த 14 ஆட்கொணர்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே நீதிபதி இதனை கூறியுள்ளார். போரின் இறுதி நான்கு நாட்களுக்குள் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக பெருந்தொகையான...
பிரான்ஸில் நேற்றிரவு நடத்தப்பட்டுள்ள தீவிரவாத தாக்குதலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த தாக்குதலினால் இலங்கையர் எவரும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து பிரான்ஸிலுள்ள இலங்கை தூதுவராலயம் தகவல்களை சேகரித்து வருவதாக பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மஹேசினி கொலொன்ன தெரிவித்துள்ளார். இந்த நிலையில் குறித்த தாக்குதலுக்கு நாடாளுமன்ற...
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் போராளிகளாக இருந்து புனர்வாழ்வு பெற்று வந்தவர்களின் உடல் பரிசோதனையை மேற்கொள்வதற்காக பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஜனநாயக போராளிகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி தெரிவித்துள்ளதாவது, “அண்மைக்காலமாக புனர்வாழ்வு பெற்று வந்த போராளிகள் மரணத்தை தழுவி வருகின்றனர். இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் பலமடைந்து வருகின்றது. இவற்றை கருத்தில் கொண்டு முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகளை...