பிரேசிலின் ரியோ நகரில் நடைபெற இருக்கிற ஒலிம்பிக் தொடரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 10 பேர் அடங்கிய கும்பலை அந்நாட்டு பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஒலிம்பிக் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி பிரேசின் ரியோ நகரிரல் தொடங்கவுள்ளது நினைவுக்கூரதக்கது.
10 பேர் கைது குறித்து பிரேசில் நாட்டின் நிதித்துறை மந்திரி அலேக்சாண்ட்ரே டி மொரேஸ் கூறுகையில், தாக்குதல் நடத்த தற்காப்புக் கலை, வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை கையாள்வது குறித்து...
தொடங்கியது முதல் டெஸ்ட்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடும் இந்தியா
Thinappuyal -
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் பயணமாகி உள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற விராட் கோஹ்லி முதலில் துடுப்பெடுத்தாட முடிவுசெய்தார்.
இந்திய அணி
முரளி விஜய், ஷிகர்தவான், புஜாரா, கோஹ்லி, ரஹானே, சஹா...
இலங்கை யாழ்ப்பாணத்தில் ரூ. 400 மில்லியன் செலவில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் கட்ட திட்டமிட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை யாழ்ப்பாணத்தில் கட்ட திட்டமிட்டுள்ளோம்
சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படும் இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமான பணிகள் நவம்பர் மாதம் தொடங்கும்.
3 ஆண்டுகளில் இந்த பணிகள்...
இலங்கை அணியின் முன்னாள் வீரர் திலன் சமரவீரா, இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி சமீப காலமாக கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வருகிறது. சமீபத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கூட இலங்கை அணி தோல்வியை சந்தித்து நாடு திரும்பியது.
இந்த நிலையில் அனைத்துப் போட்டிகளுக்கும் தலைவராக உள்ள மேத்யூஸை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர் மீது விமர்சங்கள் எழுந்து வருகிறது.
ஆனால் அவுஸ்திரேலியாவுக்கு...
டி20 போட்டிகளில் உலக சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி சொந்த மண்ணிலே டெஸ்ட் போட்டிகளில் ஜொலிக்க முடியாமல் தவித்து வருகிறது.
சொந்த மண்ணில் மேற்கிந்திய தீவுகள் அணி டெஸ்ட் தொடரை வென்று 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடைசியாக அந்த அணி விளையாடிய 9 தொடரில் 8 டெஸ்ட் தொடரை இழந்து இருந்தது. ஒரு தொடர் சமநிலையானது.
கடைசியாக 2013ல் தான் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது....
கரீபியன் பிரிமியர் லீக் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் கிறிஸ் கெய்ல் தலைமையிலான ஜமைக்கா டாலவாஸ் அணி டக்வொர்த் லூயிஸ் முறையில் 36 ஓட்டங்களால் அசத்தல் வெற்றி பெற்றது.
பார்படாஸ் டிரிடன்ஸ் அணிக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடிய ஜமைக்கா டாலவாஸ் அணி 18 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 195 ஓட்டங்கள் குவித்தது.
தொடக்க வீரர் வால்டன் 97 ஓட்டங்களும், சங்கக்காரா 50 ஓட்டங்களும் குவித்தனர். கடந்தப் போட்டியில் டக்-அவுட் ஆன...
சுவிஸ் தலைநகர் பெர்னில் உள்ள காட்டு பகுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Orpund பகுதியில் உள்ள காட்டில் நாயுடன் நடைப்பயிற்சி சென்ற ஒரு பெண், காட்டில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டுள்ளார். அப்போது அவரது உடலுக்கு பக்கத்தில் அவரது நாய் காத்து கொண்டிருந்துள்ளது.
இதை கண்ட அவர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்....
சுவிஸ் அஞ்சல் அலுவலகங்களில் தொடங்கப்பட்டுள்ள பைலட் திட்டத்தின்(Pilot Project) மூலம் இனி அஞ்சல் அலுவலகங்களில் டெபிட் கார்டு(Debit Card) ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்குவதற்கான தொகையை அஞ்சல் அலுவலகங்களில் உள்ள கணக்குகள் மூலமும், நேரடியாக பணம் செலுத்தியும் வாங்கி வருகின்றனர்.
பொதுவாக பயன்பாட்டில் இருக்கும் டெபிட் கார்டு அங்கு ஏற்றுக்கொள்ளப்படாததால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில் 15 மில்லியன் பிராங் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ள பைலட் திட்டத்தின்...
இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர் நடிப்பில் வெளிவந்த தெறி ரூ 150 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த படம் இன்றுடன் 100வது நாளை கடக்கின்றது, இதை ரசிகர்கள் காமென் டிபி வைத்து கொண்டாடி வருகின்றனர், அது மட்டுமின்றி டுவிட்டரில் இந்திய அளவில் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.
THERI HITS CENTURY என்ற டாக் கிரியேட் செய்து ட்ரண்ட் செய்து வருகின்றனர்,...
நடிகர் சூர்யா தற்போது சிங்கம்-3 படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் சூர்யா தன் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றது போல் பல புகைப்படங்கள் வலம் வருகின்றது.
எங்கு இருக்கிறார் சூர்யா என்று விசாரிக்கையில் சிங்கம்-3 படப்பிடிப்பிற்கு கொஞ்சம் ஓய்வு அளித்துள்ளாராம் இவர். இதை தொடர்ந்து தன் குடும்பத்தினருடன் கேரளா சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.
இன்னும் சில தினங்களில் சிங்கம்-3 இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சூர்யா கலந்துக்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.