திருகோணமலை தோப்பூர் தங்கபுரம் பகுதியில் குழந்தையொன்று கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒன்றரை வயது ஆண் குழந்தையொன்றின் சடலமே கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. சடலம் தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகைளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.  
கிளிநொச்சி – இரத்தினபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில், கிணற்றிலிருந்து பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த வெடிபொருட்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, 10 கிளைமோர் குண்டுகள், 66 கைக்குண்டுகள் மற்றும் 42 மோட்டார் பியுஸ் ஆகியவற்றை இராணுவத்தினர் மீட்டு குண்டு செயலிழக்கும் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். வீட்டின் உரிமையாளர் இல்லாத நிலையில், கடந்த வாரம் வீட்டைப் பராமரித்து வந்த நபர் குறித்த கிணற்றை இறைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த வெடிபொருட்களை...
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடனான உறவு சிறப்பாக உள்ளதாகவும், தான் ஏன் புதிய கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தமிழ்த்தேசிய கூட்டமைப்புலிருந்து விலகி, புலம்பெயர் ஆதரவுடன் ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளார் போன்று தோன்றுவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திச்சேவை ஊகம் வெளியிட்டிருந்தது. புதிததாக உருவாகும் கட்சி கடும் போக்கு கொள்கையை பின்பற்றும் எனவும் தமிழத்தேசிய கூட்டமைப்பால்...
ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணி பெங்களூர் அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. பெங்களூர் அணியில்,கிறிஸ் கெய்ல் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்தார். அதன் பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி(54), டிவில்லியர்ஸ் (5), வாட்சன்(11) என ஆட்டமிழக்க பெங்களூர் அணி தோல்வியை நோக்கி செல்ல ஆரம்பித்தது. இறுதியில் பெங்களூர் அணி 8 ஒட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது, இதனால் கிண்ணத்தை தவறவிட்டது குறித்து பெங்களூர் அணியின் அணித்தலைவர் கோஹ்லி கூறியதாவது, நானும்,...
நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவிக்கும் வீரருக்கு ஆரஞ்ச் நிற தொப்பியும், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தும் வீரருக்கும் ஊதா நிற தொப்பியும் வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டு ஆரஞ்ச் நிற தொப்பியை பெங்களூரு அணியின் அணித்தலைவர் விராட் கோஹ்லி 4 சதம், 7 அரைசதம் உள்பட மொத்தம் 973 ஓட்டங்கள் (17 ஆட்டம்) குவித்து தட்டிச்சென்றுள்ளார். ஒரு சீசனில் 900...
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி "பாலோ-ஆன்" பெற்றுள்ள நிலையில் தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது. இங்கிலாந்து- இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட்போட்டி செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் நடக்கிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி மொயீன் அலி (155), ஹால்ஸ்(83), ரூட் (80) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 9 விக்கெட்டுக்கு 498 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி மோசமாக...
அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி வரி ஏய்ப்பு புகாரில் எதிர்வரும் 2ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். கால்பந்து களத்தில் கலக்கும் மெஸ்ஸி, விளம்பர உலகிலும் கொடிகட்டி பறந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2007-2009ம் ஆண்டு வரை அவர் வருமான வரியை சரியாக செலுத்தவில்லை என்று ஸ்பெயினில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் ரூ.31.46 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு பார்சிலோனாவில் உள்ள கேடாலோனியா...
9வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் 8 ஓட்டங்களால் பெங்களூர் அணியை வீழ்த்திய ஐதராபாத் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் கோஹ்லி தலைமையிலான றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. இதில் நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்க வீரர்களான தவான் (28), அணித்தலைவர் வார்னர் (69) நல்ல தொடக்கம்...
வீராட் கோஹ்லி உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர் என அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜெஃப் லாசன் புகழாரம் சூட்டியுள்ளார். மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜெஃப் லாசன் கலந்துகொண்டார். அதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஜெஃப் லாசன்,அவுஸ்திரேலியாவில் உள்ள எகிரும் வகையிலான பிட்சுகளில் வேகப்பந்து வீச்சாளர்களைத் திறம்பட சமாளிக்கும் துடுப்பாட்டகாரர்களில் குறிப்பிடத்தக்கவர் கோஹ்லி என்று தெரிவித்தார். மேலும், இந்திய அணி கடந்த 2011-ல் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டபோதிலிருந்தே...
உத்தர பிரதேச மாநிலத்தில் மனைவியை, கணவனே ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் அடகு வைத்த இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரவீந்தர் சிங் என்ற நபர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் ஜஸ்மீட் கவுர் என்ற பெண்ணை திருமணம் செய்து கான்பூரின் கோவிந்த் நகரில் வாழ்ந்து வந்துள்ளார். ஐபிஎல் சூதாட்டத்தில் பணம் பொருள் உள்ளிட்டவற்றை இழந்த நிலையில், ரவீந்தர் சிங், அவரது மனைவி கவுரை அடகு வைத்து விளையாடி இழந்துள்ளார். தற்போது ரவீந்தர்...