ஒரு பெண்னையும் ஆணையும் இரண்டாக பிளந்து மக்களை ஓடவைக்கும் அபூர்வ மனிதன் பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம்
Thinappuyal News -0
ஒரு பெண்னையும் ஆணையும் இரண்டாக பிளந்து மக்களை ஓடவைக்கும் அபூர்வ மனிதன் பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம்
4 வயது குழந்தையைக் காப்பாற்ற சுட்டுக்கொல்லப்பட்ட கொரில்லா HD video
அமெரிக்கா, சின்சினாட்டி மிருகக்காட்சி சாலையில் 17 வயது கொரில்லா குரங்கொன்று வாழும் பகுதிக்குள் நான்கு வயதுக் குழந்தையொன்று தவறி விழுந்த நிலையில் பத்து நிமிட போராட்டத்தின் பின் கொரில்லா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது.
கீழே விழுந்த குழந்தையை கொரில்லா இழுத்துக் கொண்டு சென்ற நிலையில் அதன் நடவடிக்கைகள் ஆபத்தானதாக உணரப்பட்டதன் பின்னணியில் கொரில்லா சுட்டுக்கொல்லப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமையும் அண்மையில் தற்கொலை செய்வதற்காக சிங்கக் கூட்டுக்குள்...
திருமண வைபவமொன்றில் நடனமாடிய சிறுமியுடன் நடனமாடி அச்சிறுமியை ஏமாற்றி அழைத்துச்சென்று குடும்பம் நடத்தியதாக கூறப்படும் பாதுகாப்பு படையைச்சேர்ந்தவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
காஹாதுடு வெனிவெல்கொல என்ற கிராமத்தைச் சேர்ந்த சிறுமியையே அந்த படைவீரர், இவ்வாறு ஏமாற்றி அழைத்துச்சென்று குடும்பம் நடத்தியுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட படைவீரர், திருமணம் முடித்தவர் என்று அச்சிறுமியுடன் மூன்றுமாதங்கள் குடும்பம் நடத்தியுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.
சிறுமியை கஹாதுடுவ வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை...
இலங்கையின் பிரபல பத்திரிகையான சண்டே லீடரின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, இராணுவ புலனாய்வு முகாம்களிலுள்ள அனைத்து தகவல்களையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் வழங்குமாறு கல்கிஸை நீதவான் மொஹமட் சஹாப்தீன் இராணுவ தளபதிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சண்டே லீடரின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று மீண்டும் இடம்பெற்றபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி அத்திடிய மலகலகே...
றக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பாக முன்னாள் காவற்துறை மா அதிபர் என்.கே.இளங்ககோன் கைது செய்யப்படவேண்டும் என அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.
முன்னாள் காவற்துறை மா அதிபர் இந்த சம்பவத்தை மறைக்க முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையின் பிரபல றக்பி வீரர் ஒருவரின் கை கால்களை உடைத்து ,...
கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையின் காரணமாக தடைப்பட்டிருந்த அனைத்து ரயில் சேவைகளும் தற்போது சீரான நிலைமைக்கு திரும்பியுள்ளதாக, ரயில்வே போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
தபுத்கேம பிரதேசத்தைச்சேர்ந்த அனுராதபுர ரயில் மார்க்கமானது நேற்று பெய்த மழையினால் நீரில் மூழ்கியது இதனால் ரயில் போக்குவரத்து தடைப்பட்டது.
இதேவேளை, மலையக ரயில் மார்க்கத்தில் சில இடங்கள் கீழ் இறங்கி காணப்பட்ட போதிலும் அதனை சீராக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்...
வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 65 ஆயிரம் பூர்த்தி செய்யப்பட்ட உருக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கு நிபுணர் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிவில் பொறியியல் திணைக்களத்தின் உறுப்பினர்களை உள்ளடக்கிய இக்குழுவானது, யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இரண்டு மாதிரி வீடுகளை ஆராய்ந்திருந்தது.
அதன்பின்னர் அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்தவர்களின் அவசர தேவையாக இந்த வீடமைப்புத் திட்டம் இருப்பதை சுட்டிக்காட்டுவதற்கு அப்பால் நிர்மாணப்பொருட்களின் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்தக் குழு கூறியுள்ளது.
பல்வேறு...
யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகில் இளம் பெண்ணுடன் சேஷ்டை விட்ட இளைஞர்ஒருவர் அப்பகுதி இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேற்படிச் சம்பவம் தொடர்பாகமேலும் தெரிய வருவதாவது.
குறித்த பகுதியால் தனது சகோதரியை தனியார் கல்விநிலையத்திற்கு அழைத்துச் சென்ற பெண்ணுடன் இளைஞர் ஒருவர் தகாதமுறையில் நடக்கமுயன்றுள்ளார்.
இதனை குறித்த பெண் தன் தந்தைக்கு கூறிய நிலையில் தந்தைநியாயம் கேட்க சென்ற நிலையில் தந்தையை தாக்கிய குறித்த நபர் அங்கிருந்துதப்பிச்...
திருகோணமலை தோப்பூர் தங்கபுரம் பகுதியில் குழந்தையொன்று கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒன்றரை வயது ஆண் குழந்தையொன்றின் சடலமே கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
சடலம் தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகைளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி – இரத்தினபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில், கிணற்றிலிருந்து பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த வெடிபொருட்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, 10 கிளைமோர் குண்டுகள், 66 கைக்குண்டுகள் மற்றும் 42 மோட்டார் பியுஸ் ஆகியவற்றை இராணுவத்தினர் மீட்டு குண்டு செயலிழக்கும் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
வீட்டின் உரிமையாளர் இல்லாத நிலையில், கடந்த வாரம் வீட்டைப் பராமரித்து வந்த நபர் குறித்த கிணற்றை இறைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த வெடிபொருட்களை...