நாட்டின் மேல், வடமேல், தென், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் காலைவேளைகளில் மழைபெய்யக்கூடிய சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட மாகாணங்களின் சில பிரதேசங்களில் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியமுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மழைபெய்யும் அதேவேளை, நாட்டின் மத்திய மலைநாட்டின் மேற்குப்பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காற்று...
  இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரணங்களுடன் பங்களாதேஷ் விமானமொன்று சற்றுமுன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளது. மருந்துகள் மற்றும் குடிநீர் என்பன குறித்த விமானத்தின் மூலம் கொண்டுவரப்படவுள்ளதாக அந்நாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றது. குறித்த நிவாரணங்களின் பெறுமதி 100 மில்லியன் ரூபா என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, பாகிஸ்தானிலிருந்து நேற்று கிடைக்கப்பெற்ற நிவாரணங்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக களனி கங்கையின் நீர் இரசாயன நச்சுத் தன்மைக்கு முகங்கொடுத்துள்ளதாக மேல்மாகாண கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரனசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பின் பலபகுதிகளிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்யும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய நிலையில் அதிகமான வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீடுகளே சுத்தம் செய்யவேண்டிய நிலையில் உள்ளன. எவ்வாறாயினும் குறிப்பிட்ட வீடுகளின் வெள்ள நீரில் விசக்கிறுமிகளின் தாக்கம்...
  தனது தாயாரை கத்தியால் குத்திய மகனை கண்டிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 63 வயதுள்ள தாயையே 43 வயதுடைய மகன் கத்தியால் குத்தியதாக கைதானதாக கண்டி பொலிசார் தெரவித்தனர். இச்சம்பவம் நேற்றுக் காலை 5.30 மணியளவில் இடம் பெற்றதாகவும் இது ஒரு குடும்பப் பிரச்சினை காரணமாக இடம் பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதனை அடுத்து சந்தேநபரை அவரின் இரு சகோதரர்கள் தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட பெண்ணின் இடுப்புப் பகுதியில் காயமேட்பட்டுள்ளதுடன் அவர் தற்போது...
  இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் வரி அதிகரிக்கப்பட்டதால் வாகனங்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் இதனைக் கூறியுள்ளது. அதன்படி 1000 cc இற்கு மேற்பட்ட வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் விலைகளே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளன.
  இங்கிலாந்தில் காருக்குள் சிக்கிக் கொண்ட ராணித் தேனீயை மீட்க ஆயிரக்கணக்கான தேனீக்கள் காரைப் பின் தொடர்ந்து வந்து துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இங்கிலாந்தின் மேற்கு வேல்ஸ் மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட காரை கரோல் ஹோவர்த் என்ற 65 வயது பெண்மணி ஓட்டியுள்ளார். சம்பவத்தன்று இவர், ஹாவர்போர்ட்வெஸ்ட் நகரில் உள்ள ஒரு வணிக மையத்திற்குச் சென்றிருந்தார். அங்கு தனது காரை நிறுத்தி விட்டு சாப்பிடப் போனார். திரும்பி...
  க.காந்தி முருகேஷ்வரர் ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்பார்கள் ஆன்றோர்கள். நம் வாழ்வில் எண்களுக்கான பங்களிப்பு மிக முக்கியமானது. இந்த அடிப்படையிலேயே எண்ணியல் ஆய்வாளர்கள் பலரும் எண்கணிதத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார்கள். எண்கணித ஜோதிடத்தின் முக்கிய அங்கங்களாக பிறவி எண்ணையும் விதி எண்ணையும் குறிப்பிடுவார்கள். இவற்றைப் போன்று லக்ன எண்ணையும் கவனத்தில் கொண்டால், விரிவான பலாபலன்களை அறிய முடியும் என்கிறார்கள், சில எண்கணித ஆய்வாளர்கள். இங்கே, லக்ன எண் அடிப்படையில்… கல்யாணத்துக்குக் காத்திருக்கும்...
நிரந்தர வீடு தேவையில்லை தற்காலிக வீடொன்றை அமைத்து தந்தால் போதும் என கிளிநொச்சி – சிவபுரம் கிராமத்தைச் சேர்ந்த கும்பஸ்தர் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார். வீட்டுச் சுவருக்கு முட்டுகொடுத்த தடியை எடுத்துவிட்டால் சுவர் விழுந்து விடும். இதுதான் எமது நிலை எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். யுத்தப் பாதிப்புக்களால் மீளமுடியாமல் தவிக்கும் தமக்கு இயற்கையும் இடையூறு விளைவிப்பதாக ஒன்றரை மாதக் குழந்தையுடன் ஆபத்தான கொட்டில் ஒன்றில் வசிக்கும் தேவராசா தவநேசன் வேதனையுடன் தெரிவித்தார். கடந்த...
  ஜப்பானின் நகோயா நகரில் நடைபெறும் ஜி-7 நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் இன்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தவுள்ளார். இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மார்க்கல், பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹொலன்டே, கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடே, இத்தாலியப் பிரதமர் மற்ரோ ரென்சி, ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இன்று காலை ஆசியாவின் உறுதிப்பாடும் செழிப்பும் என்ற...
  சம்பூரில் நடந்த சர்ச்கைக்குரிய நிகழ்வு தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவெடுக்கும் வரை, அதுபற்றி எந்தக் கருத்துக்களையும் வெளியிடக் கூடாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இரண்டு தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளார். சம்பூர் மகாவித்தியாலயத்தில் கடந்தவாரம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில், கடற்படை அதிகாரியை, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் கடுமையாகத் திட்டிய விவகாரம் தொடர்பாக, சிறிலங்கா பிரதமர், கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் அறிக்கை ஒன்றைக் கோரியுள்ளார். அதேவேளை, சிறிலங்கா...