சம்பூர் மகாவித்தியாலயத்தில் நடந்த சம்பவத்துக்கு ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோவின் தவறுகளே காரணம் என்று, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் தெரிவித்துள்ளார். சம்பூரில் கடந்த வெள்ளியன்று நடந்த பாடசாலை ஆய்வுகூடத் திறப்பு விழாவில், தன்னை அவமதித்தாக கூறி, கடற்படை அதிகாரியை கடுமையான திட்டியிருந்தார் கிழக்கு முதலமைச்சர் நசீர் அகமட். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதன் பின்னணி தொடர்பாக அவர் விபரித்துள்ளார். “ஆளுனரின் மரியாதைக் குறைவான செயலால் நான்...
யாழ்.மண்டைதீவு சந்தியை அண்மித்த பகுதியில் இன்றைய தினம் மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளதுடன் இ.போ.ச பேருந்து ஒன்று சேதமடைந்துள்ளது. மண்டைதீவு சந்தியில் இருந்து 200 மீற்றர் தொலைவில் மாலை 5 மணியளவில் ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்.வந்த அரச பேருந்தின் ரயர் வெடித்தில் வேககட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதி எல்லை கற்களை உடைத்துக் கொண்டு கடலில் பாய்ந்து விபத்து சம்ப வித்துள்ளது. குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஊர்காவற்றுறையில்...
முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி பெற்றோர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 9.30 அளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட்டு வலயக்கல்வி அலுவலகம் வரை இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெற்றோர், வலயக் கல்விப்ப ணிப்பாளரிடம் நிவர்த்தி செய்யப்பட வேண்டிய குறைபாடுகளை எடுத்துக்கூறியதுடன் மகஜர் ஒன்றையும் கையளித்தனர். அத்துடன் வடமாகாண முதலமைச்சருக்கான மகஜர் வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Go to...
  போர்க்காலத்தில், காணாமற்போனோர் தொடர்பான, விபரங்களை அறிந்து கொள்ளவும், தகவல்களை உறவினர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கும், சிறப்புப் பணியகம் ஒன்றை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இதற்கான சிறப்புப் பத்திரம் ஒன்றை சமர்ப்பித்தார். காணாமற்போயுள்ளதாக அல்லது கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ள நிலைமைகளின் கீழ் காணாமற்போன அல்லது கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ள நபர்கள் தொடர்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றன. அவ்வாறு காணாமற்போயுள்ள...
  சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின், மூன்று மெய்ப்பாதுகாவலர்களின், வங்கிக்கணக்குகள் மற்றும் நிதிநிறுவனக் கணக்குகள் தொடர்பாக விசாரணை செய்ய, நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பண மோசடித் தடுப்பு சட்டத்தின் கீழ், மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே, இந்த விசாரணைகளுக்கு கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்ற நீதிவான், நிசாந்த பீரிஸ், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு இந்த அனுமதியை வழங்கியுள்ளார். மகிந்த ராஸஜபக்சவின் மெய்ப்பாதுகாவலர்களான, மேஜர் நெவில் வன்னியாராச்சி, கப்டன் திஸ்ஸ விமலசேன,...
ஜப்பான் நாட்டில் ஒரே நேரத்தில் 100 திருடர்கள் வெவ்வேறு ஏ.டி.எம் மையங்களில் 186 கோடி ரூபாயை கொள்ளையிட்டுள்ள சம்பவம் அந்நாட்டு பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் தான் இந்த துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த மே 15ம் திகதி அதிகாலை 5 மணியிலிருந்து 8 மணி வரை நகரில் உள்ள 1,400 ஏ.டி.எம்மையங்களில் ஒரே நேரத்தில் 100 கொள்ளையர்கள் திருடியுள்ளனர். அதாவது,போலியாக செய்யப்பட்ட கடன் அட்டைகளை(Credit Cards) பயன்படுத்தி கொள்ளையர்கள்...
கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் பங்கேற்கும் நிகழ்வுகளை புறக்கணிப்பதற்கு முப்படையினரும் தீர்மானித்துள்ளனர். அண்மையில் சம்பூரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கடற்படை உயர் அதிகாரி ஒருவரை முதலமைச்சர் கடுமையாக திட்டியிருந்தார். இந்த சம்பவத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் நிகழ்வுகளை முழுமையாக முப்படையினரும் புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளனர். இனி வரும் காலங்களில் முப்படையினரதும் முகாம்களுக்குள் பிரவேசிப்பதற்கு முதலமைச்சருக்கு அனுமதியளிக்கப்படாது என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். எந்தவொரு சூழ்நிலையிலும் படை அதிகாரியொருவரை பகிரங்கமாக திட்டுவதற்கு...
அவுஸ்திரேலியாவிற்கு இலங்கையர்களை சட்டவிரோதமான முறையில் கடத்த முயற்சித்த நான்கு பேர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் க்யூ பிரிவு காவல்துறையினர் இந்த நபர்களை கைது செய்துள்ளனர். இலங்கை அகதிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்களை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கோயம்பத்தூரின் கொத்தூர் பிரதேச அகதி முகாமில் தங்கியிருந்த இலங்கையர்களிடம் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கன்யாகுமாரியிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துச் செல்ல 70,000 ரூபா பணத்தை சந்தேக நபர்கள் கோரியுள்ளனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீட் அஹமட் தனது நல்ல நண்பர் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். எனினும், சம்பூர் கடற்படை அதிகாரி ஒருவரை இழிவாக பேசிய சம்பவத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் நேற்றைய தினம் சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை பார்த்ததன் பின்னர் தாம் கிழக்கு மாகாண முதலமச்சருக்கு தொலைபேசி அழைப்பினை எடுத்து, இது பற்றி பேசியதாகத் தெரிவித்துள்ளார். இன்னும் பொறுமையுடன்...
அனர்த்த சேதங்களை வரையறுக்க அரசாங்கம் கவனம் செலுத்தியிக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அனர்த்தம் தொடர்பில் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தால் சேத அழிவுகளை மட்டுப்படுத்தியிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். அனர்த்த நிலைமைகள் குறித்து அரசாங்கத்தை விமர்சனம் செய்யவில்லை என்ற போதிலும் சில குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதாகத் தெரிவித்துள்ளார். அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்றுவதற்கு கட்சி நிற பேதங்களை பார்க்க வேண்டியதில்லை...