நுவரெலியா சீத்தாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தில் இன்று (17) தீர்த்தகுட பவணியும், யாகசாலை பிரவேசம், மூல மூர்த்திகளுக்கான எண்ணெய் சாத்தும் நிகழ்வு நடைபெற்றது இந் நிகழ்வில் பெரும் திறலான பக்த்தர்கள் கலந்துக் கொண்டதுடன் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் உட்பட இந்தியாவில் இருந்து வந்துள்ள பட்டாச்சாரியர்களும் கலந்து சிறப்பித்தனர். தகவலும் படங்களும்:- பா.திருஞானம்
மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி படம் இளைஞர்கள் மத்தியில் அவ்வளவு பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இதன் வெற்றியால் தற்போது இப்படம் ஹிந்தியில் ஆதித்யா ராய் கபூர், ஸ்ரத்தா கபூர் நடிப்பில் Ok Jaanu என்ற பெயரில் தயாராகி வருகிறது. ஷாத் அலி இயக்க, ஏ.ஆர். ரகுமானே இசையமைக்கும் இப்படம் வரும் ஜனவரி மாதம் 13ம் தேதி வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தன்னுடைய டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
டென்மார்க்கில் கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து, அதிக எடை BMI சுட்டிகொண்டவர்கள், குறைவான எடையுள்ளவர்களிலும் ஆரோக்கியமானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இதற்கென 100,000 பேர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதிலிருந்து முன்னைய ஊகங்கள் அதாவது ஆரோக்கியமான BMI சுட்டி, நீண்ட கால வாழ்க்கைக்கு சமம் என்ற கருத்துக்கள் மேல் கேள்விக்குறி எழத்தான் செய்கிறது. ஆனாலும் இதுதான் முதல் தடவையல்ல, இதற்கு முன்னரும் பல ஆய்வுகள் உடல் எடை சிறிது அதிகரிப்பதால் ஆரோக்கியத்திற்கு எவ்வித பங்கமும்...
மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நாளாந்தம் மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.  நுவரெலியாவில் அதிக முகில் கூட்டம் காணப்படுகின்றது. இதனால் வாகன ஓட்டுனர்கள் வாகனங்களை செலுத்திக் கொள்வதில் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இந் நிலையில் நுவரெலியா பதுளை பிரதான பாதையில் பதுளை நோக்கிச்சென்ற முச்சக்கர வண்டி ஒன்று கட்டுமான பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதால் இரண்டு முச்சக்கர வண்டிகளும் சேதம் அடைந்துள்ளது. இதனால்...
வெங்காயம் முற்காலத்திலிருந்தே அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் உணவுப் பொருளாகும். ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, எகிப்தியர்கள் வெங்காயத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். தென் இந்தியர்களும் பழங்காலம் முதலே பயன்படுத்தி உள்ளனர். அரேபியர்கள் ஏராளமான வெங்காயத்தை உட்கொள்கிறார்கள். வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காரணமாக இருக்கிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு...
சமையலுக்கு பயன்படுத்தப்படும் இஞ்சியில் பல்வேறு மருத்துவ நன்மைகள் அடங்கியுள்ளன. 100 கிராம் இஞ்சியில் உள்ள சத்துக்கள் கொலஸ்ட்ரால் கிடையாது, சோடியம் 13 கிராம், கார்போஹைட்ரேட் 18 கிராம், நார்ச்சத்து 2 கிராம், சர்க்கரைசத்து 1.7 கிராம், புரோட்டின் 1.8 கிராம், விட்டமின்ஏ, கால்சியம் 1 சதவீதம், விட்டமின் டி, விட்டமின்பி12, விட்டமின் பி6, இரும்புசத்து 3 சதவீதம். 5 பயன்கள் தேநீர் மற்றும் சில உணவுகளில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் இஞ்சியில், 40 விதமான, 'ஆன்டி...
உடல் எடை அதிகமானால் நீரிழிவுநோய், மூட்டுவலி, முதுகுவலி, என எல்லா நோய்களும் ஒவ்வொன்றாய் வர ஆரம்பிக்கும். உடலில் கொலஸ்ட்ரால் உடலுக்கு தேவையான சக்தியாக மாறி நமக்கு அன்றாட வேலை செய்ய ஆற்றல் தருகிறது. ஆனால் இந்த கொலஸ்ட்ரால் அதிகமானால்இதயத்தின் ரத்த தமனிகளில் சென்று படிந்துவிடும். பின் இதய நோய்வரும் அபாயம் உள்ளது. கூடவே ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதி என வரவேற்கத் தொடங்கி விடுவீர்கள். கொழுப்புமிக்க உணவுகளை சாப்பிட்டு, அதன் பின் நோயினால் வாழ்நாள்...
  தமிழகத்தில், சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், போலீஸ் உயரதிகாரி ஒருவர் போட்ட ஒரு உத்தரவும், அதே உத்தரவை அவரே கேன்சல் செய்ததும் காவல்துறை வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தேர்தல் முடிவுகளை பொறுத்து இது பெரியளவில் எதிரொலிக்கும் என்று போலீஸ் வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பேசப்படுகிறது. தமிழகக் காவல்துறை அதிகாரிகளில் சிலரை எதிர்க்கட்சியினர் பணியிடம் மாற்றக் கோரி, தேர்தல்...
  முள்ளிவாய்க்கால் முடிவல்ல’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில், பங்கேற்க இருக்கும் நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு மாணவர் அமைப்பு ஒன்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருக்கிறது. ‘நிகழ்ச்சியின் நோக்கம் புரியாமல் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்’ என வேதனைப்படுகிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். மூத்த பத்திரிகையாளர் பா.ஏகலைவனால் எழுதப்பட்ட, ‘முள்ளிவாய்க்கால் முடிவல்ல, இனி என்ன செய்யலாம்?’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடக்க இருக்கிறது. இந்த விழாவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை...
ராஜீவ் காந்தி கொலை குறித்து ‘பைபாஸ்’ என்ற தலைப்பில் ஆவணப்படம் ராஜீவ் படுகொலை நடந்த மே 21-ம் தேதி வெளியிடப்படவுள்ளது. இதில் இந்தக் கொலைவழக்குக்கு துருப்புச் சீட்டாக இருந்த ஹரிபாபு என்ற புகைப்படக்காரரின் மரணத்தில் சந்தேகங்கள் எழுப்பப் பட்டுள்ளன. இதுகுறித்து ஆவணப்பட தயாரிப்பு குழு வட்டாரங்கள் கூறுகையில், “ஹரிபாபு பயன்படுத்திய கேமிரா மட்டும் எவ்வித சேதமும் அடையவில்லை என்று சொல்வதில் தொடங்கி ஏராளமான சந்தேகங்கள் எங்களுக்கு ஆரம்பத்திலேயே எழுந்தன. கேமிராவின்...