அனைத்துலக அழுத்தங்களினால் தான், சிறிலங்கா அரசாங்கம் போர் வெற்றி விழாவைத் தவிர்த்திருப்பதாக, சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “எமது அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது, போர் வெற்றியை கொண்டாட வேண்டாம் என்று வெளிநாட்டுத் தூதுவர்கள் அழுத்தம் கொடுத்தனர். மேற்குலக நாடுகளின் தயவைப் பெற முடியும் என்பதற்காகவே, எமது நாடு விடுவிக்கப்பட்ட வெற்றியைக் கொண்டாட சிறிலங்கா அரசாங்கம் விரும்பவில்லை.” என்றும்...
    ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையின் அடிப்படையில் எல்.ரீ.ரீ.ஈ யின் வெளிநாட்டு செயல்பாடுகள் பற்றிய புதிய ஆதாரங்கள் உள்ளன” என்கிற அறிக்கை தொடர்பாகவும் மற்றும் திரு.ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது எல்.ரீ.ரீ.ஈ யிடமிருந்து வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களைச் சுட்டிக்காட்டி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எழுதிய கடிதம் தொடர்பாகவும், தற்போதைய அரசாங்கம் ஜனவரி 8, 2015க்குப் பின்னர் வெளிநாட்டிலும் மற்றும் ஸ்ரீலங்காவிலும், ஈழம் என்கிற இலக்கை அடைவதற்காக தொடர்ந்து முயற்சிக்கும் எல்.ரீ.ரீ.ஈ...
  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ள இரண்டு வெளிநாட்டுப் பயணங்களிலும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பங்கேற்காதது, அரசியல் வட்டாரங்களில் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனின் அழைப்பின் பேரில், லண்டனில் நடந்த ஊழல் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்தவாரம் பிரித்தானியா சென்றிருந்தார். அதையடுத்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், லண்டனில் இருந்தே, புதுடெல்லிக்குப் பயணமானார். இந்த இரண்டு பயணங்களிலும், சிறிலங்கா...
  களனி கங்கையை அண்மித்த மக்கள் அனைவரும் அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையாலேயே அதனையண்டிய மக்களை விழிப்பாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
  கடந்த வாரம் ஒரு காலைப் பொழுது,வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் கைத்தொலைபேசி சில தடவைகள் ஒலித்தது. அவர் அப்போது தனது அதிகாரபூர்வ வதிவிடத்தில் இருந்தார். கொழும்பு நகரில் மிகவும் பாதுகாப்பான இடங்களில் ஒன்றான, ஸ்ரான்ட்மோர் கிரசன்ட்டில் அந்த வதிவிடம், சிறிலங்காவின் விமானப்படை மற்றும் இராணுவத் தளபதிகளின் வதிவிடங்களுக்கு நடுவே உள்ளது. சில காகித வேலைகளில் மூழ்கியிருந்த அவர் அந்த தொலைபேசிக்குப் பதிலளித்தார். அந்த அழைப்பை எடுத்தது, சிறிலங்காவின் முன்னாள் அதிபர்...
  இந்தியாவிலும், சிறிலங்காவிலும், 2014ஆம் ஆண்டுக்கு பின், அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அடுத்து, இரு நாடுகளுக்கு இடையிலும் நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வந்த, இலங்கைத் தமிழர் விவகாரம், முக்கியத்துவத்தை இழந்து விட்டதாக, இந்தியாவின் மூத்த ஊடகவியலாளர் மோகன் கே.ரிக்கு எழுதியுள்ள நூலில் கூறப்பட்டுள்ளது. மூத்த ஊடகவியலாளர் மோகன் கே.ரிக்கு (Mohan K. Tikku) எழுதியுள்ள, “After the Fall: Sri Lanka in Victory and War” என்ற நூல் அண்மையில் வெளியானது. அதில்,...
  அமெரிக்கக் கடற்படையின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் கொள்கை மற்றும் மூலோபாயத் திட்டமிடல் பணிப்பாளர், மேஜர் ஜெனரல் ஸ்டீவன் ஆர் ருடர், சிறிலங்காவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டமை தொடர்பான தகவல்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இவர் கடந்த 11ஆம் நாள் சிறிலங்காவுக்கான பயணத்தை ஆரம்பித்து, 13ஆம் நாள் அதனை நிறைவு செய்திருந்தார். பசுபிக் கட்டளைத் தலைமையகத்தில் இருந்து மூத்த அதிகாரி ஒருவர் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டமை இதுவே முதல் முறையாகும். அண்மையில், ஏழாவது...
  கிளிநொச்சி – பூநகரி பிரதேசத்தில் தொடர்ச்சியாக நிலவும் நீர்ப்பற்றாக்குறையைத் தீர்க்க உரிய அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை பூநகரி பிரதேச கமக்கார அமைப்பு தலைவரும் சமாதான நீதவானுமான செல்வராஜா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பூநகரி பிரதேசத்திற்கு உட்பட்ட ஞானிமடம், செட்டியகுறிச்சி, சித்தன்குறிச்சி, நல்லூர், ஆலங்கேணி போன்ற சகல பகுதிகளிலும் குடிநீருக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது. பிரதேச சபையினால் வேறு...
  இரண்டு பிள்ளைகளின் தாயாரான நிலுஷா தசாநாயக்க வெளிநாடு சென்று நான்கு வருடங்கள் ஆகிறது. அவரை காணாது பிள்ளைகள் அழுகின்றன. தாய்மார்களால் இப்படி செய்ய முடியுமா? இந்த பெண் பல்வேறு பெயர்களை பயன்படுத்துகிறார். மாயா என்ற பெயரையும் பயன்படுத்துவதாக ரஞ்சனி என்ற அம்மம்மா கூறுகின்றார். இவரே பிள்ளைகளை பராமரித்து வருகிறார். பிள்ளைகளின் தாய் பற்றி அறிந்தால் பொலிஸாருக்கு தகவல் தாருங்கள். என பொலிசார் தெரிவிக்கின்றனர்….. தாய் ஒருவர் இப்படி செய்ய முடியுமா? பிள்ளைகள் அதற்கு...
  மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாப்பொதிகளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த விடயத்தை மன்னார் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் ஜட்டவர அவர்களின் பணிப்புரைக்கு அமைய குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட கஞ்சாப்பொதிகள் 5 கிலோ 450...