தமிழ் சமூகத்தின் மீது நம்பிக்கையின்றி போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில் இராணுவத்தினரை தொடர்ந்தும் நிறுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளுமாயின் தலைவர் பிரபாகரன் மறு அவதாரம் எடுத்தால் எவரையும் குற்றஞ்சாட்டமுடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளார். அதேநேரம் சமஷ்டி பிரிவினை அல்ல என்பதை வலியுறுத்தியவர் மத்திய அரசாங்கத்தின் நேரடித்தலையீடுகளால் வடக்கு மாகாணசபை தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தேசத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக எழுத்தாளர் குசால் பெரேராவின் நூல் வெளியீடும் திறந்த...
  இலங்கை பல்கலைகழகங்களில் இடம்பெறும் ரெக்கிங் - பலரையும் அதிர்ச்சி கொள்ள வைத்த வீடியோ
  ஐ.எஸ் பயங்கரவாத குழுவுடன் சட்ட விரோதமான முறையில் தொடர்பு வைத்திருந்த இரண்டுரஷ்யர்கள் மற்றும் இலங்கையர் ஒருவர் சேலங்கூர் பகுதியில் மார்ச் 28 மற்றும்ஏப்ரல் 22ற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கைது செய்யப்பட்டு அவர்களுடைய நாட்டிற்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்கள் என்று மலேசிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மூவரும் சீலங்கூர் சிறப்பு இராணுவ அதிகாரியால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றுமலேசிய பிரதி பொலிஸ் மா அதிபர் டேன் கலிட் அபூபக்கர் தெரிவித்துள்ளார். ஐ.எஸ் பயங்கரவாத குழுவுடன் சட்டவிரோதமான...
  2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைவருக்குமான நினைவேந்தலை நடத்துவோம். அதனை எவரும் தடுக்க முடியாது என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழினப் படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் அஞ்சலி நிகழ்வு இன்றைய தினம் நவாலி சென்பீற்றஸ் தேவாலயத்தில் நடாத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதலில் பலியானோருக்காக அமைக்கப்பட்ட நினைவிடத்தில் இடம்பெற்றது. அஞ்சலி நிகழ்வை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர்...
  இந்தியாவின் கும்பமேளா நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அதேவேளை, பிரித்தானியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வெள்ளிக்கிழமை இந்தியாவிற்கு சென்றார். இந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் ஆகியோரை இந்திய பிரதமர் அழைத்துள்ளமை இருதரப்பிற்குள்ள நல்லுறவை வெளிப்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
    கேரளாவில் ‘டீம் சோலார்’ என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்த சரிதா நாயர் மற்றும் அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர், வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு சூரிய மின்சக்தி வசதியை ஏற்படுத்தி தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டனர். முதல்௲மந்திரி உம்மன்சாண்டி வரை பல்வேறு அரசியல்வாதிகளின் பெயரை பயன்படுத்தி இந்த மோசடியில் ஈடுபட்டு வந்ததால், இது கேரள அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இது தொடர்பாக சரிதா நாயர்,...
  இலங்கையில் கடந்த 6 மாதக் காலப்பகுதியில் பொலிஸாருக்கு எதிராக ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஆணையத்தின் செயலாளர் ஆரியதாஸ குரே பிபிசியிடம் தெரிவித்தார். பொதுமக்களின் முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் இருத்தல், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் பக்கச்சார்பாக நடத்தல் ஆகியவை தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் கிடைப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார். பொலிஸாருக்கு எதிராக வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளில் சுமார் 200 முறைப்பாடுகள் விசாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...
  வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அரசியல் பேச்சுக்களை பேசி வருவதை நிறுத்தவேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஆளுநர் குரே வெளியிட்டு வரும் கருத்துக்கள் மேலும் மேலும் பதற்றத்தைஏற்படுத்தி வருவதாக தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன்தெரிவித்துள்ளார். ரெஜினோல்ட் குரே ஒரு பொது அதிகாரியே தவிர தற்போது அரசியல் வாதி இல்லை என்றுமனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
  லங்கல பொலிஸ் நிலையத்தில் கடமையில் ஈடுபடும் 9 பொலிஸ் அதிகாரிகள் இடம் மாற்றப்பட்டுள்ளனர். சேவை அவசியம் கருதி இவர்கள் இடம்மாற்றப்பட்டுள்ளதாக விசேட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த காலத்தில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரி ஊழலில் ஈடுபட்டமையின் காரணமாக, மாத்தளை உதவி பொலிஸ் அதிகாரி ஒருவரினால் பதவி நீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
  ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் விசாரணைகளுக்கு உதவியளிக்க சீசெல்ஸ் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. சீசெல்ஸில் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் கொண்டிருந்ததாக கூறப்படும் கடல் கடந்த வைப்புக்கள் தொடர்பிலேயே இந்த உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமது நாடு இலங்கையின் விசாரணைகளுக்கு உதவிகளை வழங்கி வருவதாக சீசெல்ஸின் சுற்றாடல் துறை அமைச்சர் டிட்லியர் டொக்லே (Didlier Dogley) தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வந்துள்ள அவர், தமது நாட்டில் இலங்கையர்கள் கொண்டிருப்பதாக கூறப்படும் அனைத்து கணக்குகளை பரிசீலனை செய்ய...