அமெரிக்காவின் குடியரசு கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் நோக்கில் பிரச்சாரம் செய்துவந்த டெட் குருஸ் அந்தப் பிரச்சாரங்களிலிருந்து விலகிக்கொண்டுள்ளார். இந்தியானாவில் மற்றுமொரு வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பிடம் தோல்வியைத் தழுவியதனைத் தொடர்ந்து அவர் இவ்வாறு விலகிக் கொண்டுள்ளார். இதன்படி நியூயோர்க்கைச் சேர்ந்த வர்த்தகரான ட்ராம்ப் பெரும்பாலும் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, ஜனநயாக கட்சியின் சார்பில் ஹிலரி கிளின்ரன் முன்னிலை வகித்து வருகின்றார். இன்னும் பல தொகுதிகளில் பிரச்சாரப் பணிகள்...
கூட்டு எதிர்க்கட்சியினரின் நடவடிக்கைகள் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக ஊடக மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியில் அங்கம் வகித்த போதும் மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் தற்போது எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கும் போதிலும் ஏனைய தரப்பினரின் கருத்துக்களுக்கு இந்த தரப்பினர் செவிமடுக்கத் தயாரில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். பாராளுமன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்குமாறு அவர் சபாநாயகரிடம் கோரிக்கை...
தெரிவுப் பணிகளை முதலில் இருந்து தொடங்க நேரிட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் அணியின் தெரிவாளர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கட் அணியின் தெரிவாளராக நேற்று முன்தினம் சனத் ஜயசூரிய கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு முன்னரும் இரண்டு தடவைகள் இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழுவில் தலைவராகவும் உறுப்பினராகவும் சனத் ஜயசூரிய கடமையாற்றியுள்ளார். இலங்கைக் கிரிக்கட் துறைக்கு 100 வீதமான பங்களிப்பினை வழங்க தாம் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். அண்மைக்க காலமாக இலங்கை கிரிக்கட் அணி பின்னடைவை எதிர்நோக்கி வருகின்றமை...
  உலகின் மூலை முடுக்கெங்கும் அன்றாடம் நடைபெறுகின்ற நிகழ்வுகளையும் அதிசயங்களையும் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் அரசியல் நிகழ்வுகளையும் சமூக அவலங்களையும் புரட்சிகளையும் இனவிடுதலைப் போராட்டங்களையும் இன்னபிற நிகழ்வுகளையும் செய்திகளாக மக்கள் மத்தியில் கொண்டுசேர்க்கும் அரிய பணியில் ஈடுபட்டிருக்கும் ஊடகவியலாளர்களையும் ஊடக நிறுவனங்களையும் மரியாதை செய்வதுடன் அவர்களை வாழ்த்துவதிலும் பெருமையடைகிறேன். பல்வேறு சவால்களுக்கும் அவமதிப்புக்களுக்கும் முகங்கொடுத்து, முகங்கோணாமல் எடுத்த காரியத்தில் கண்ணாக இருந்து, உயிரைப் பணயம் வைத்து, செய்தி சேகரித்து, அதனை உலகெங்கும்...
  Wounded Reuters photographer Gleb Garanich, who was injured by riot police, takes pictures as riot police block protesters during a scuffle at a demonstration in support of EU integration at Independence Square in Kiev November 30, 2013. Riot police in the Ukrainian capital Kiev used batons and stun grenades...
      (ப.பன்­னீர்­செல்வம்,- ஆர்.ராம்) முன்னாள் ஜனா­தி­ப­தியும், தற்­போ­தைய குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­ப­க் ஷவின் இரா­ணு­வ பாது­காப்பு நீக்­கப்­பட்டமை தொடர்பில் மஹிந்த ஆதரவு அணி­யி­ன­ர் இன்று பாராளுமன்றத்தில் எழுப்பிய சர்ச்சையையடுத்து அவர்களுக் கும் ஆளும் தரப்­புக்­கு­மி­டையே ஏற்­பட்ட வாய்த்த­ர்க்கம் திடீ­ரென கைக­லப்­பாக மாறி­யது. இதன்­போது ஆளும்கட்சி மற்றும், மஹிந்த ஆதரவு அணி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சபா மண்­ட பத்தின் மத்­தியில் ஒரு­வ­ரை­யொ­ருவர் தாக்கி­ய­துடன், கட்டி­பு­ரண்டு சண்­டை­யிட்­டனர். இதனால் சபை அல்லோல கல்லோலமானது. குறித்த கைக­லப்­பின்­போது இரண்டு...
  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கிய இராணுவப்பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் கருஜயசூரிய பணிப்புரை விடுத்துள்ளார். இதற்காக விசேட குழு ஒன்றையும் சபாநாயகர் நியமித்துள்ளார். இந்தக் குழுவில் பிரதி சபாநாயகர் திலங்க சுமத்திபால, குழுக்களின் பிரதித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியுமான செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர். இதனைத் தொடர்ந்து சபை நடவடிக்கைகளை நாளை புதன்கிழமை வரை...
  பாவற்குளம் 02 ஆம் யூனிற் நெளுக்குளம் வீதி 06 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்... வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் 2016 ஆம் ஆண்டுக்கான மாகாண அபிவிருத்தி நன்கொடையின் (PSDG) மற்றும் பராமரிப்பு ஒதுக்கீட்டின் கீழ் 70 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு வவுனியா மாவட்ட வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு சொந்தமான வீதிகளைப் புனரமைக்கும் பணிகளை ஆரம்பித்துவைத்தார் அமைச்சர் டெனிஸ்வரன்... அதன் அடிப்படையில் வவுனியா...
  டயகம பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக செல்லும் நோயாளர்களை அங்குள்ள வைத்தியர்கள் முறையாக பரிசோதனை செய்தாலும் வைத்தியசாலையில் கடமை புரியும் ஊழியர்கள் பாரபட்சம் காட்டுவதாக வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 28 ம் திகதி அன்று டயகம தோட்ட பகுதியில் இருந்து முதியோர் ஒருவர் ஆஸ்துமா நோய்யினால் பீடிக்கப்பட்டு அவரின் உறவினர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். கடுமையான வருத்தத்தின் காரணமாக சம்பந்தப்பட்ட முதியோர்க்கு சேலன் ஏற்றப்பட்டது இவரின் பாதுகாப்பிற்காக தனது...