நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, அவை நடவடிக்கைகள் 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மஹிந்தவின் பாதுகாப்பு தொடர்பாக ஏற்பட்ட பேச்சுவார்த்தை வாய்த்தர்க்கமாக மாறி அடிதடியில் முடிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறித்து, பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் தெரிவிக்கப்பட்ட சில கருத்துக்கள் காரணமாகவே இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. குறித்த அடிதடியானது, ஆளும் கட்சியினருக்கும் மஹிந்த ஆதரவணியினருக்கும் இடையிலேயே இடம்பெற்றுள்ளது. இதனடிப்படையில், பாராளுமன்றை சபாநாயகர்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது நீண்ட கால நண்பரான டலஸ் அழகபெருவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அறிவுரை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மஹிந்த தரப்பினர் தொடர்பிலான பொறுப்புக்களை முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு வழங்கியமைக்கு, டலஸ் அழகப்பெரும எதிர்ப்பு வெளியிட்டமையே இதற்கு முக்கிய காரணமாகும். டலஸ் அழகபெரும, மஹிந்த அணியை கைவிட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பில் இணையவுள்ளதாக கடந்த நாட்களில் செய்தி வெளியாகியிருந்தன. எனினும் குற்றச்சாட்டை...
அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தாய்லாந்து சென்றிருந்த போது அவரை சந்திக்க சர்வதேச பொலிஸார் வலைவீசி தேடும் குற்றவாளியான உதயங்க வீரதுங்க வருகை தந்திருத்தார். அதற்கான புகைப்பட ஆதாரங்களும் உள்ளன. எனவே நல்லாட்சி அரசாங்கம் நீதியாக செயற்பட்டிருக்குமாயின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச மீண்டும் நாட்டிற்கு திரும்பி வரும் போது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா...
வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், அத்துமீறி நுழைந்து அவ்வீட்டிலிருந்த பாடசாலை மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்வதற்கு முயன்ற ஒருவரின் நாக்கை மாணவி ஒருவர் துண்டாடியுள்ளார். குறித்த சம்பவம் மாவத்தகம பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், நாக்கின் ஒரு துண்டை கடித்தெடுத்த குறித்த மாணவி, பெற்றோருடன் நாக்குத் துண்டை எடுத்துக் கொண்டு சென்று பொலிஸில் ஒப்படைத்துள்ளார். இதனடிப்படையில் வாக்குமூலத்தை பதிவு செய்த பொலிஸார், நாக்கின் ஒருதுண்டை இழந்த நபரை இன்னும் கண்டறிய முடிவில்லை என்றும்...
பொகவந்தலாவ பிரதேசத்தில் பாடசாலை மாணவியொருவரை கர்ப்பமாக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி என தெரியவந்துள்ளது. மேலும், குறித்த சிறுமி நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதித்த பின்னரே கர்ப்பிணி என தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதனடிப்படையில், பாதிக்கப்பட்ட சிறுமி பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
தமிழ் மக்களுடைய இனப்பிரச்சனைக்கு இலங்கை அரசு தமிழ் மக்கள் கேட்கின்ற ஒற்றுமையைக் கொடுக்கப்போவதில்லை. வடமாகாணசபையில் ஒரு ஆட்சியும், கிழக்கு மாகாணசபையில் மற்றொரு ஆட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னொரு ஆட்சியும் நடத்திக் கொண்டிருக்கின்றது. சிறுபாண்மை இனத்தைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது அரசாங்கம். இதனால் தமிழீழ விடுதலைக்காகப் போராடிய முன்னால் போராளிகள் சுதந்திரமாக இந்நாட்டில் வாழமுடியாத ஒரு சூழ்நிலை உருவாகிவிட்டது. கிட்டத்தட்ட புனவர்வாழ்வு அழிக்கப்பட்ட போராளிகள் பதினையாயிரத்திற்கும் மேற்பட்ட...
  ஏன் முஸ்லீம் பெண்கள் அந்நிய ஆடவரிடம் கைக்குலுக்குவது இல்லை என்பதை எடுத்துக்காட்டும் அழகான சம்பவம் ஒரு ஆங்கிலேயர் முஸ்லிம் ஒருவரிடம் கேட்டார்; ”நீங்கள் ஏன் பெண்களிடம் கை குலுக்குவதை தவறு என்று சொல்லி தடுக்கின்றீர்கள்?” முஸ்லிம் கேட்டார்; ‘உங்கள் நாட்டு எலிஸபெத் ராணியின் கரங்களை உங்களால் குலுக்க முடியுமா ? அதற்கான அனுமதி உங்களுக்குக் கிடைக்குமா…?” அவசர அவசரமாக மறுத்தார் அந்த ஆங்கிலேயர்; ”அதெப்படி முடியும்? அவர்கள் மகாராணியாயிற்றே….!” முஸ்லிம் உதட்டில் புன்னகைத் தழுவ சொன்னார்; ”எங்களைப் பொருத்தவரை எல்லாப் பெண்களுமே மகாராணிகளே….!!! அந்த மகாராணிகளுக்கு உரிமையானவர்கள் மட்டுமே அவர்களது கரங்களை தொட முடியும். ‘ எனவேதான் அந்நிய ஆடவரிடம்...
  போரின் போது முதலாவது பாதிக்கப்படுவது பெண், இரண்டாவது பாதிக்கப்படுவதும் பெண் என்று ஒரு பழமொழியுண்டு. அனைத்து சமூக அமைப்பிலும் பாரிய நெருக்கடிநிலை தோன்றுகிற வேளை விளிம்பு நிலையினரே முதலாவதும், அதிகளவிலும் பாதிக்கப்படுவதை பல்வேறு சமூகவியலாளர்கள் மீள, மீள சுட்டிக்காட்டி வந்துள்ளனர்.அந்தவகையில் பெண்கள் விளிம்புநிலை சக்தியினர் தான். போரின் போது பாதிக்கப்படுபவர்களில், பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள், அங்கவீனர்கள் என்போர் அதிக கரிசனைக்கும், கவனத்துக்கும் உள்ளாவது இந்த அடிப்படையில் தான். இதனை...
  உரிமைக்குப் போராட‌ பொங்கியெழுந்த த‌மிழ்நாட்டு முஸ்லீம் பெண்க‌ள். உல‌க‌நாடுக‌ளிலுள்ள‌ முஸ்லீம்க‌ளின் பிரச்ச‌னைக‌ளைப் ப‌ற்றி எல்லாம் நாம் அடிக்க‌டி முஸ்லீம் வ‌லைப்ப‌திவாள‌ர்க‌ளின் வ‌லைப்ப‌திவுக‌ளிலும் இணைய‌த்த‌ள‌ங்களிலும் வாசிக்க‌ முடிகிற‌து ஆனால் உள்ளூரில் அதுவும் த‌மிழ்நாட்டில் முஸ்லீம் பெண்க‌ள் த‌ம‌து உரிமைக்காக‌ப் போராடியதை, துணிச்ச‌ல் மிக்க‌வொரு த‌மிழ்நாட்டு முஸ்லீம் பெண்ணின் தலைமையில் போராடினார்கள் என்பதையும் எந்த வலைப்பதிவிலும் காணவில்லை.. எத்த‌னை எதிர்ப்புக்க‌ளின் ம‌த்தியில் த‌மிழ்நாட்டுப் பெண்களின், அதிலும் குறிப்பாக‌ த‌மிழ்நாட்டு முஸ்லீம் பெண்களின் அவ‌ல‌த்தை,...
   அரசியல் யாப்பின்  13வது  திருத்த சட்டத்தால் வழங்கப்பட்ட காணி, மற்றும் போலீஸ் அதிகாரத்தையேனும் இதுவரை வழங்க மறுத்த ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு இனிப்பான சமஸ்டியை வழங்குவார்களா? ஜனநாயகத்தை அடியொற்றி மேற்கொள்ளப்பட்டு வரும் ஆட்சி முறைகளில் ஒன்று  சமஷ்டியாகும். அதிகாரம் ஒரு நாட்டின் மத்திய அரசுக்கும் அங்கத்துவ அரசுகளுக்கும் இடையே பிரிக்கப்பட்டுப் பிரயோகிக்கப்படுவது சமஷ்டியாகும். இது கனடா, பிரேசில், பெல்ஜியம், ஸ்பெயின்,  சுவிஸ்லாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடைமுறையில் இருந்து வருகின்றது. அந்த வகையில்...