அமெரிக்க நாடாளுமன்றத்துக்கும், சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கும் இடையிலான, ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க நாடாளுமன்றக் குழுவொன்று சிறிலங்கா வந்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் காத்திரமான அரசாட்சி, ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தல்,போன்ற நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள, சபை ஜனநாயக பங்காளர் என்ற அமைப்பைச் சேர்ந்த, காங்கிரஸ் உறுப்பினர்களே சிறிலங்கா வந்துள்ளனர்.
சிறிலங்கா நாடாளுமன்றத்துடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்தக் குழுவினர் நேற்று, சிறிலங்கா நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர்.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட...
கடந்த அரசாங்கத்தின் பிழைகள் பற்றி பேசிக்கொண்டிருப்பதில் மட்டும் பயனில்லை! ஹிஸ்புல்லாஹ்
Thinappuyal -
கடந்த அரசாங்கத்தின் பிழைகள் பற்றி மட்டும் பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை என மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற விவாதங்களில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம் செய்த தவறுகளை பற்றி பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை. மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள வரிச் சுமையை குறைக்க வேண்டும்.
நாம் வரியை அறவீடு செய்யும் போது வர்த்தக நிறுவனங்கள் மக்கள் மீது பாரியளவில் வரியை அறவீடு செய்ய முயற்சிக்கின்றன. இதனால்...
சர்வதேச நாடுகளுடன் வர்த்தகத்தை பலப்படுத்துவதற்காக இலங்கை பல்வேறு பொருளாதார ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளதாக சர்வதேச வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேசத்துடன் இணைந்து இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் நோக்கத்துடன் அரசாங்கம் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச வணிக மையம் ஏற்பாடு செய்த உலக ஏற்றுமதி அபிவிருத்தி அமைப்பின் இந்த வருடத்திற்கான முக்கிய மாநாடு இலங்கையில் நடாத்துவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்றைய தினம்...
எதிர்வரும் ஜுலை மாதம் முதல் பஸ் கட்டணத்தை உயர்த்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் கடந்த 02 ஆம் திகதி முதல் வட் வரி அதிகரிப்பை நடைமுறைப்படுத்தியதன் காரணமாக வாகன உதிரிப்பாகங்களின் விலையும் பாரியளவில் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக தனியார் பஸ் உரிமையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாகவும், எனினும் தேசிய பஸ் கட்டண உயர்வுக் கொள்கை காரணமாக ஜுலை மாதம் வரை கட்டணத்தை...
ஐக்கிய நாடுகள் சபையில் எரிக் சொல்ஹைமுக்கு புதிய பதவி! புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பு
Thinappuyal -
ஐக்கிய நாடுகள் சபையில் எரிக் சொல்ஹைமுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பதவி குறித்து புலம்பெயர் தமிழர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வெளிப்பட்டுள்ளது.
நோர்வே ராஜ்ஜியத்தின் சர்வதேச அபிவிருத்திக்கான முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹைம் , இலங்கையில் விசேட சமாதானத் தூதுவராகவும் கடமையாற்றியிருந்தார்.
விடுதலைப்புலிகளுடனான யுத்தம் நிலவிய காலப்பகுதியில் அரசாங்கம் மற்றும் புலிகள் இடையேயான தகவல் பரிமாற்றங்கள், போர்நிறுத்த இணக்கம் உள்ளிட்ட முக்கிய விடயங்களில் அவர் தன் பங்களிப்பை நல்கியிருந்தார்.
எனினும் எரிக் சொல்ஹைம் சமாதானத்தூதுவர் என்ற...
நாடாளுமன்றின் கௌவரத்தை பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் கடமையாகும்! எதிர்க்கட்சித்தலைவர்.
Thinappuyal -
நாடாளுமன்றின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் கடமையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினருக்கும் ஆளும் கட்சியினருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பு குறித்து நேற்று நாடாளுமன்றில் கருத்து வெளியிட்ட போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
இவ்வாறான சம்பவங்கள் இத்துடன் நிறைவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். இந்த சம்பவம் வருத்தமளிக்கின்றது. இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.
அவையின் கௌரவத்தை பாதுகாப்பதற்கு அனைத்து தரப்பினரும் இணங்கிச்...
நாய்களை பதிவு செய்யாத அதன் உரிமையாளர்களுக்கு பத்தாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட உள்ளது.
நாடு முழுவதிலும் குறித்த உள்ளுராட்சி மன்றங்களில் வருடாந்தம் பதிவுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அவ்வாறு செய்யத் தவறும் நாய்களின் உரிமையாளர்களுக்கு 10000 ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும் உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் அமைச்சரவையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
தெரு நாய்களினால் மக்களுக்கு ஏற்படும்...
சிறிலங்கா வந்துள்ள ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் ஜுவான் மென்டஸ் நேற்றுமுன்தினம் வவுனியா ஜோசப் இராணுவ முகாமில் சோதனைகளை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வன்னிப் படைகளின் தலைமையகமாக இயங்கும், ஜோசப் படை முகாமில், இரகசியமாக பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அது ஒரு சித்திரவதை முகாமாக இயங்குவதாகவும், குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.
சிறிலங்கா இராணுவத்தினரால் சித்திரவதை செய்யப்பட்ட பலர், ஜோசப் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக, ஐ.நா நிபுணர் குழுவில் இடம்பெற்றிருந்த யஸ்மின் சூகாவும்...
மட்டக்களப்பு- வாழைச்சேனையில், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர், உந்துருளி விபத்தில் மரணமானார். இந்தச் சம்பவம் கடந்த மாதம் 29ஆம் நாள் இரவு இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாழைச்சேனை கிண்ணியடியைச் சேர்ந்த, பொன்னையா ஜெயராஜ் (வயது37) என்பவரே மரணமானவராவார்.
ஆயுதக்குழு ஒன்றின் உறுப்பினராக செயற்பட்ட இவர் பின்னர், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இணைந்து பணியாற்றினார்.
மட்டக்களப்பில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் பணியாற்றிய வந்த இவர், பணிமுடிந்து வீட்டுக்குத் திரும்பிக்...
சிறிலங்காவில் இருந்து அவுஸ்ரேலியாவின் கொகோஸ் தீவைச் சென்றடைந்த படகில் இருந்த அகதிகள், இரவோடிரவாக இரகசியமான முறையில், விமான மூலம் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மோசமான காலநிலைக்கு மத்தியில் கடந்த திங்கட்கிழமை காலை கொகோஸ் தீவைச் சென்றடைந்த மரப்படகு ஒன்றில், சுமார் 12 அகதிகள் வரை இருந்ததாக உள்ளூர் வாசிகள் தெரிவித்திருந்தனர்.
கொகோஸ் தீவில் இருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் இந்தப் படகு தரித்து...