மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பை நீக்கும் தீர்மானத்தில் மாற்றமில்லை – ருவான் விஜேவர்தன
Thinappuyal -0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜப்கஸவின் இராணுவப் பாதுகாப்பை நீக்கும் தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.மிஹிந்தலை ரஜமஹா விஹாரையில் புனரமைப்பு பணிகளில் பங்கேற்ற போது ஊடகவியலாளர்களை நேற்றைய தினம் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித சிக்கல்களும் ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்தவின் பாதுகாப்பிற்காக 105 இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் எனவும் இதில்...
சிரிய அகதி முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வட சிரியாவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விமானத் தாக்குதல் ஒன்றில் இவ்வாறு 28 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிரியாவின் இடிலிப் மாகாணம் சர்மாடா என்னும் இடத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிரிய அல்லது ரஸ்ய விமானங்களினால் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், இதுவரையில் யார் தாக்குதல் நடத்தினார்கள் என்பது பற்றி உறுதி செய்யப்படவில்லை.
கிரிக்கட் புள்ளி முறைமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என மைக்கல் வோகன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கட் நிர்வாகம் கிரிக்கட் புள்ளி முறைமை ஒன்றை அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளது.
இந்த முறைமையை இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கட் வர்ணணையாளருமான வோகன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
டெஸ்ட், ஒருநாள் மற்றும் டுவன்ரி20 போட்டிகளுக்கு புள்ளி வழங்கும் முறையைமானது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த முறையைமானது சிக்கல் நிறைந்தது எனவும் அதனை அறிமுகம் செய்ய வேண்டியதில்லை...
மேஜர் ஜெனரல் சுமித் மானவடு இன்றைய தினம் வைத்தியசாலையில் காலமானார்.
வீட்டு நிர்மானப் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த மேஜர் ஜெனரல் மானவடு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தெல்கந்த பிரதேசத்தில் அவரது வீடு ஒன்று நிர்மானிக்கப்பட்டு வருவதாகவும் நிர்மானப் பணிகளை பார்வையிடச் சென்ற போது இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேஜர் ஜெனரல் மானவடு, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவை கடந்த 2010ம் ஆண்டு...
மேபீல்ட் தோட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலருணவு பொருட்கள்
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்
தற்காலிகமாக கலாசார மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தினால் உலர்உணவு பொருட்கள் வழங்கப்பட்டது கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கிய நிலையில் பல்வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு உலர்உணவு பொருட்களை வழங்க எவறேனும் முன்வர வேண்டும் என முகாமையாளர் ஊடகம் வாயிலாக கேட்டிருந்தார். அதற்கிணங்க மண்சரிவு அபாயம் எதிர்நோக்கி தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கான உலர்உணவு பொருட்களை தொழிலாளர்...
மேபீல்ட் தோட்ட மக்களுக்கு புதிய வீடுகளை அமைக்க தோட்ட நிர்வாகம் இணக்கம் – மண்சரிவு அபாயம் காரணமாக 59 பேர் தற்காலிக இடங்களுக்கு மாற்றம் – இவர்களில் இரண்டு தினங்களுக்கு முன் பருவம் அடைந்த பெண்ணை தங்க வைக்க தடுமாற்றம்
Thinappuyal -
மண்சரிவு அபாயம் ஏற்படும் அதிக வாய்ப்பு உள்ளது என்ற அச்சத்தில் ஸ்காடு என்று அழைக்கப்படும் கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் 38 குடியிருப்பாளர்களுக்கு அத்தோட்ட நிர்வாகம் புதிய வீடுகளை அமைக்க காணி ஒதுக்கி தருவதாக தோட்டத்தின் முகாமையாளர் ஸ்ரீ கணேசன் 05.05.2016 அன்று பிற்பகல் தெரிவித்துள்ளார்.
அதேவேளை மண்சரிவு அபாயம் ஏற்படும் அச்சம் நிலவுவதனால் இவ் அபாயத்திற்கு உள்ளாககூடிய மேபீல்ட் தோட்டத்தின் 16, 6 மற்றும் 7ம் இலக்க தொடர் குடியிருப்பாளர்களில்...
அக்கரப்பத்தனை அயோனா தோட்டத்தில் சிறுத்தை புலி நடமாட்டத்தின் காரணமாக தேயிலை மலையில் தொழில் செய்யும் தொழிலாளர்கள் மத்தியில் பீதியை எற்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியாக ஒரு வாரமாக 04 சிறுத்தைகள் இத்தோட்;த்தில் உள்ள தேயிலை செடி அடிவாரத்தில் பதுங்கி இருப்பதுடன் இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள கோயில் இருக்கும் பிரதேசத்தில் காணப்படும் ஆலமரத்தில் இருப்பதாகவும், தோட்ட அதிகாரிக்கு தோட்ட தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தோட்ட அதிகாரியால் அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளதுடன்...
நுவரெலியா கல்வி வலயத்தில் அக்கரப்பத்தனை தோன்பீல்ட் தோட்டப்பாடசாலையில் தரம் 5ல் கல்வி பயிலும் நவரட்ணம் தாரணி அண்மையில் ஹோல்புறுக் தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற தமிழ் தின போட்டியில் பேச்சு போட்டி ஒன்றில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
மிகவும் கஷ்ட நிலையை எதிர்கொண்டு நடாத்தும் தோன்பீல்ட் தோட்ட பாடசாலையில் கல்விக்கான அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் இங்கு கல்வி பயிலும் இம்மாணவி இப்பாடசாலைக்கு பேச்சு போட்டி ஊடாக முதலாம் இடத்தை...
அகுரஸ்ஸ லத்துவ பிரதேசத்தில் நில்வளா கங்கைக்கு அருகிலிருந்து 04.05.2016 அன்று (புதன்கிழமை) இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
04.05.2016 அன்று மாலை, அகுரஸ்ஸ லத்துவ பிரதேசத்தில் நில்வளா கங்கைக்கு அருகில் பலா மரத்தில் சிக்குண்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் வீசிய துர்நாற்றத்தை தொடர்ந்து பிரதேசவாசி ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலைத் தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் அகுரஸ்ஸ லத்துவ பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான அரபரகொடகே இந்திரஜித்...
அகில இலங்கை தழிழ்மொழித்தினப் போட்டியில் முதலாம் இடத்தினை பெற்றுள்ள நு.மெராயா தமிழ் மகா வித்தியாலயம்.
Thinappuyal -
நுவரெலியா கல்வி வலயத்தின் ஹோல்புறூக் கோட்ட மட்டத்திலான தமிழ் மொழித்தினப் போட்டிகள் கடந்த செவ்வாயன்று ஹோல்புறூக் தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளன.
இப்போட்டிகளில் கோட்டத்திலுள்ள இருபது பாடசாலைகளின் போட்டியாளர்கள் பங்கெடுத்துக் கொண்டுள்ளனர்.
இப்போட்டிகளில் பங்குபற்றியுள்ள மெராயா தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் தங்களது போட்டிகளில் பதினாறு முதலாம் இடங்களையும், ஐந்து இரண்டாம் இடங்களையும் பெற்று கோட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளனர்.
போட்டிகளில் பங்குபற்றியுள்ள மாணவர்களையும் பயிற்றுவித்துள்ள ஆசிரியர்களையும் நிகழ்ச்சிபொறுப்பாசிரியரையும் அதிபர் திரு.என்.முத்துகுமார் அவர்கள்...