சம்பந்தனின் அரசியல் வரலாற்றில் அவரது கால்த் தூசிக்கு பெறுமதியற்ற உதயகம்பன்பிலவும் அவர் சார்ந்த ஆதரவாளர்களும் தென்னிலங்கையின் இனவாதக் கட்சிகளும் தமது மீசையை முறுக்கிக் கொண்டு தமிழ் மக்களுடைய வடகிழக்கு பிரதேசத்தில் இருக்கக்கூடிய காணிகளைப் பார்வையிட்டமை தவறு எனக் கூறும் இவர்கள் ஒன்றை விளங்கிக் கொள்ளவேண்டும். குறிப்பாக வடகிழக்கில் தமது பூர்வீகக் காணியில் வாழ்ந்து வந்தவர்கள் தான் தமிழ் மக்கள். அத்துமீறு இராணுவம் தமது உயர்பாதுகாப்பு வலயங்களாக தமிழ் மக்களுடைய...
இலங்கை சுதந்திரமடைந்து 1948ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை அரசை தனது பன்டைய மாற்றுத் தேவைகளுக்காக பயன்படுத்தி வந்த இந்தியரசு படிப்படியாக அதன் புலனாய்வு நடவடிக்கையை இலங்கையில் திட்டமிட்டுத் தொடர ஆரம்பித்தது. அதன் பின்னர் 1990ம் ஆண்டு காலப்பகுதிகளில் தமிழீழ விடுதலைப்புலிகளுடைய மோதல்கள் இலங்கை இராணுவத்துடன் தீவிரமாக வெடிக்க அதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இந்தியரசு நிரந்தரமாகவே தனது 'றோ' நடவடிக்கைகளை ஆரம்பித்துக் கொண்டது. தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையினர் தமக்கு...
  வளரும் இளம் பெண்கள் தாங்கள் எடுத்துக் கொள்ளும் உணவினை பொறுத்து அழகாக ஜொலிக்கலாம் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஏனெனில் பழங்கள், காய்கறிகளை அதிகளவில் எடுத்துக் கொண்டால் அதில் நிறைந்துள்ள இயற்கை சத்துக்கள் உங்கள் உடம்பில் உள்ள திசுக்களை வளர்ச்சிடைய செய்து, தோலின் பளபளப்புக்கு உதவுகின்றன. என்ன சாப்பிடலாம்? 10 முதல் 12 வயதின் முற்பகுதியில் உள்ள வளர் இளம்பெண்கள் தினமும் 260 முதல் 320 கிராம் வரையிலும், 13 முதல்...
இன்றைய காலகட்டத்தில் கணனி முன் அமர்ந்து கொண்டு வேலை பார்ப்பவர்களே ஏராளம். குறைந்தது 7- 8 மணிநேரமாவது தொடர்ந்து அமர்ந்து கொண்டே வேலை செய்வதால் பல்வேறு உடல் நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதில் குறிப்பாக சொல்லப் போனால் கழுத்து வலி, முதுகு வலி, வயிறு சம்மந்தப்பட்ட பிரச்னைகள், கண் சார்ந்த பிரச்னைகள் என இப்படி அடுக்கி கொண்டு போகலாம். இந்த வலிகளை குணப்படுத்த வலி நிவாரணை மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் அது ஆபத்தில்...
இலங்கையுடனான உறவுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா முக்கியத்துவம் அளிப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான அமெரிக்க வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற இலங்கை அமெரிக்க வர்த்தக மற்றும் முதலீட்டு உடன்படிக்கை குறித்த கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு தொடர்ச்சியான வகையில் ஒத்துழைப்புக்களை வழங்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மக்களுக்கு சமூக பொருளாதார நன்மைகளை ஏற்படுத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்...
இலங்கையின் மிக முக்கியமான ஊடகவியலாளர்களில் ஒருவரான சிவராம் படுகொலை செய்யப்பட்டு ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று அவரது நினைவு  தினமாகும். பிரபல ஊடகவியலாளர் சிவராம் ஏப்ரல் 28, 2005ஆம் ஆண்டில் பாதுகாப்பு மிகுந்த இலங்கைத் தலைநகர் கொழும்பில் பாராளுமன்றத்திற்கு அருகில் வைத்து கடத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். 1959, ஆகஸ்ட் 11, ஈழத்தின் கிழக்கே மட்டக்களப்பில் பிறந்த சிவராம் தராகி என்ற பெயரில் த ஐலன்ட் ஆங்கிலப் பத்திரிகையில் 1989இல் தன்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இராணுவ பாதுகாப்பு விரைவில் அகற்றப்படும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் மே மாதம் 1ம் திகதியின் பின்னர் மஹிந்தவிற்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு அகற்றப்படும் என ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன இறுதியாக நடைபெற்ற அமைச்சரவையில் கூறியதாக ராஜித  குறிப்பிட்டுள்ளார். அரசியல்வாதிகளுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்குவதனை நிறுத்திக் கொள்ள பாதுகாப்புப் பேரவை தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு அமையவே மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கும்,...
இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் இணக்கம் வெளியிட்டுள்ளது. கடன் செலுத்துகைகளுக்காக பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இந்தக் கடன் தொகை பயன்படுத்தப்பட உள்ளது. 2020ம் ஆண்டளவில் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை 3.5 வீதமாக வரையறுக்க முடியும் என இலங்கை சர்வதேச நாணய நிதியத்திற்கு உறுதியளித்துள்ளது. வரி அறவீட்டு முறைமைகளின் ஊடாக வருமானத்தை அதிகரித்துக் கொள்வதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளின் அடிப்படையில் இரு தரப்பிற்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாகத்...
இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்திலுள்ள படுகாடு பகுதியில் பல வருடங்களுக்கு பின்னர் நெல் வேளாண்மை செய்கையில் ஈடுபட்டுள்ள தமிழ் விவசாயிகளுக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நெல் வேளாண்மைக்குரிய காணி உரிமை தொடர்பாக தமிழ் விவசாயிகளுக்கும் சிங்கள விவசாயிகளுக்குமிடையில் காணப்பட்ட அமைதியற்ற நிலை காரணமாகவே காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. காலை 6.00 மணி தொடக்கம் மாலை 6.00 வரை பகல் நேரங்களில் மட்டும் காவல்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை கொலை செய்ய சூழ்ச்சி செய்தவரே இந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ என பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு நேர்மையாக இருக்காதவர்கள் மஹிந்தவை பிழையாக வழிநடத்தி வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக செயற்பட்டு வரும் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ ஒரு தடவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை கொலை செய்ய முயற்சித்திருந்தார் என அவர்...