புறக்கோட்டை மிதக்கும் சந்தைக்கருகில் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். புறக்கோட்டை பஸ்தியன் மாவத்தை பஸ் நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் ஊடாக மனிங் சந்தைக்கு வரும் பொதுமக்களே இந்த துர்நாற்றத்தினால் பல்வேறு அளெகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மிதக்கும் சந்தை அமைந்துள்ள வாவி பகுதியானது பல நாட்களாக சுத்தம் செய்யாமல் இருப்பதாலேயே இவ்வாறு துர்நாற்றம் வீசுவதாக இங்கு வசிக்கும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதன்காரணமாக பல்வேறு  தேவைகளுக்காக...
ஹம்பாந்தோட்டை உப்பள தொழிலாளர்களின் போனஸ் கொடுப்பனவு ரத்துச் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உப்பள ஊழியர்கள் பெரும் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். ஹம்பாந்தோட்டையில் அரசாங்கத்துக்குச் சொந்தமான உப்பளம் ஒன்று அமைந்துள்ளது. இதில் சுமார் 500க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதன் முகாமைத்துவம் மாவட்ட அபிவிருத்திக்குழுவினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. வருடந்தோறும் இங்குள்ள ஊழியர்களுக்கு சித்திரைப் புத்தாண்டுக்கான போனஸ் கொடுப்பனவு வழங்கப்படுவது வழக்கமாகும். எனினும் இந்த ஆண்டு உப்பள ஊழியர்களின் புத்தாண்டு போனஸ் கொடுப்பனவு ரத்துச் செய்யப்பட்டுள்ளது....
ஐ.நா. பொதுச் செயலாளராக பதவி வகிக்கும் பான் கி மூன் பதவிக்காலம் வருகிற டிசம்பர் மாதம் முடிகிறது. எனவே, புதிய பொதுச்செயலாளர் தேர்தல் பதவிக்கு நியூசிலாந்து முன்னாள் பெண் பிரதமர் ஹெலன் கிளார்க் போட்டியிடுகிறார். ஐ.நா. பொதுச் செயலாளராக பதவி வகிக்கும் பான் கீ மூன் பதவிக்காலம் வருகிற டிசம்பர் மாதம் முடிகிறது. எனவே, புதிய பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக இதுவரை 7 பேர் போட்டியிட மனு செய்துள்ளனர். அவர்களில்...
மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் டேரன் சமியைப் போல் வெய்ன் பிராவோவும் சொந்த கிரிக்கெட் வாரியத்தை தாக்கி பேசியுள்ளார்.உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்கு பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் பேசிய டேரன் சமி, தங்களை சொந்த கிரிக்கெட் வாரியமே மதிக்கவில்லை என்றும், பல்வேறு பிரச்சனைகளை தாண்டியே நாங்கள் சாதித்துள்ளோம் என்று வெளிப்படையாக பேசினார். இந்நிலையில் அந்த அணியின் சகலதுறை வீரரான வெய்ன் பிராவோ தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ”:எங்கள் நாட்டு...
இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஜடேஜா விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்.சமீபத்தில் ஜடேஜாவுக்கும், ரீவா சொலன்கி என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இவர்கள் எதிர்வரும் 17ம் திகதி திருமணம் செய்து கொள்ளவுள்ளனர். இந்நிலையில் ஜடேஜாவின் மாமனார் அவருக்கு ஒரு புதிய ஆடி Q7 ரக காரை பரிசளித்துள்ளார். நேற்று வருங்கால மனைவியுடன் போய் ஜடேஜா அந்த காரை வாங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ. 90 லட்சமாகும்.
  நடிகை பிரியங்கா சோப்ரா 3 முறை தற்கொலைக்கு முயன்றதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. பிரியங்கா சோப்ரா பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்து வருகிறார். அந்த படப்பிடிப்புக்காக அவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளார். இந்த நிலையில் 33 வயது நடிகையான பிரியங்கா சோப்ரா பற்றி அவரது முன்னாள் மானேஜர் பிரகாஷ் ஜாஜூ பரபரப்பு தகவலை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து...
  யாழ்.நாக­வி­கா­ரை­யினால் கடற்­க­ரை­யோரம் அல்­லது கட­லுக்குள் கட்­டப்­ப­ட­வி­ருந்த புத்தர் சிலை கரை­யோர பாது­காப்புத் திணைக்­க­ளத்தின் அனு­மதி வழங்­கப்­ப­டா­ததால் நிறுத்­தப்­பட்­டுள்­ளது. கரை­யோர பாது­காப்புத் திணைக்­க­ளத்தின் அனு­மதி இல்­லாமல் கடற்­க­ரை­யோரம் அல்­லது கட­லுக்குள் எந்­த­வித கட்­டு­மா­னமும் மேற்கொள்ள முடி­யாது என்­பது யாழ். நாக­வி­காரை அதி­ப­திக்கு தெரிந்திருக்க வேண்டும் என தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும் அர­ச­க­ரும மொழிகள் அமைச்­சரும், தமிழ் முற்­போக்குக் கூட்­டணித் தலை­வ­ரு­மான மனோ கணேசன் தெரி­வித்­துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மனோ...
  வடக்கில் 65 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த திட்டம் நிறுத்தப்படமாட்டாது என்றும் ஆனால் பல்வேறு திருத்தங்களுடன் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்குச் செவ்வியளித்துள்ள அவர், இதுதொடர்பான தனது பரிந்துரையை வெளிப்படுத்த மறுத்துள்ளார். ஆனால், இந்தத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள சில வசதிகள் பயனாளிகளுக்குத் தேவையற்றவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த திட்டத்தில் எரிவாயு உருளை, எரிவாயு அடுப்பு,...
  சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்கி வந்த சி்றிலங்கா இராணுவத்தினரை, அந்தப் பணியில் இருந்து விலக, சிறிலங்கா இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளதாக, கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. போர்க்காலத்தில் இருந்து மகிந்த ராஜபக்சவுக்கு இராணுவ கொமாண்டோக்களால் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. கேணல் மகேந்திர பெர்னான்டோ, இந்த இராணுவ அணிக்குப் பொறுப்பாக இருக்கிறார். 89 பேரைக் கொண்ட இந்த அணியையே மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பணியில் இருந்து விலக...
அமெரிக்க கடற்படையின் மேலும் பல கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அமெரிக்க கடற் படையின் ஏழாவது கப்பற்படையணியின் கட்டளை அதிகாரி வைஸ் அட்மிரல் ஜோசப் ஓகொயின் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க- இலங்கை படைகளுக்கிடையில் நடத்தப்பட்ட முதலாவது அதிகாரிகள் மட்டப் பேச்சுக்களின் போதே, ஏழாவது கப்பற் படையணியின் கட்டளை அதிகாரியான வைஸ் அட்மிரல் ஜோசப் ஓகொயின் இவ்வாறு குறிப்பிட்டார். அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பற் படையணியின் யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ் கட்டளைக் கப்பல் கடந்த...