ஸ்பெயினில் கணவரை கொலை செய்துவிட்டு அவரது உடலை நாய்க்கு உணவாக வழங்கிய மனைவியை பொலிசார் கைது செய்தனர்.ஸ்பெயின் நாட்டில் கலா மில்லொர் (cala millor) கடற்கரை ரிசார்ட் பகுதியில் வசித்து வந்தவர்கள் ஹான்ஸ் ஹென்கெல்ஸ் மற்றும் ஸ்வெட்லனா பட்டுகோவா தம்பதியினர்.
பல ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்துவந்த இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர்தான் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
ஸ்வெட்லனாவுக்கு கொகைன் போன்ற போதைப்பொருட்களை உட்கொள்ளும் பழக்கம் உள்ளது.
அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் உட்கொண்டதால் அவர்...
இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளிவரவுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் பிரமாண்ட ஓப்பனிங் கொடுக்க காத்திருக்கின்றனர்.
சமீபத்தில் வந்த தகவலின்படி விஜய்யின் கோட்டையான கேரளாவில், சுமார் 200 திரையரங்குகளில் தெறி வருவதாக கூறப்படுகின்றது.
இவை சாத்தியமானால் விஜய் தான் கேரளாவில் நம்பர் 1 என மீண்டும் நிருபணம் ஆகும்.
இது நம்ம ஆளு படத்தின் மூலம் மிகுந்த சோகத்தில் இருக்கிறார்பாண்டிராஜ். ஏனெனில் இவர் இயக்கத்தில் இதற்கு பிறகு ஆரம்பித்தபசங்க-2, கதகளி கூட வந்துவிட்டது.
இந்நிலையில் இப்படத்தின் ரிலிஸிற்காக பாண்டிராஜ் ரூ 3 கோடி வரை விட்டுக்கொடுத்துள்ளார் என கூறப்படுகின்றது.
இப்படம் குறித்து கேட்டால், ‘நான் ஏதும் பேச விரும்பவில்லை, படம் திரைக்கு வந்தால் போதும்’ என கூறியுள்ளாராம்.
அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர்கள் கோபப்படும் படி ஒரு சில செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இதில் அஜித் நடிகர் சங்க கிரிக்கெட் போட்டியில் கண்டிப்பாக கலந்துக்கொள்ள வேண்டும், இல்லையெனில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என விஷால் கூறியதாக ஒரு செய்தி உலா வருகின்றது.
இவை அஜித் ரசிகர்களிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அப்படியெல்லாம் விஷால் எங்குமே கூறவில்லை என்பதே உண்மை.
ஐசிசி உலக டி20 லெவன் அணிக்கு இந்திய வீரர் விராட் கோஹ்லி தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.ஐசிசி பொது மேலாளர் ஜெப் ஆலர்டைஸ், மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் இயான் பிஷப், இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் நாசர் உசேன், இந்திய முன்னாள் நட்சத்திரம் சஞ்சய் மஞ்ரேக்கர், அவுஸ்திரேலிய முன்னாள் வீராங்கனைகள் மெல் ஜோன்ஸ, லிசா ஸ்தலேகர் ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழுவினர் உலக டி20 லெவன் அணியை அறிவித்துள்ளனர்.
கனவு...
எம்பிலிப்பிட்டியவில் பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலில் கட்டிடத்திலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்த இளைஞன் தொடர்பிலான விசாரணைக்குழுவின் அறிக்கை பொலிஸ் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் குழுவினால் அடையாளம் காணப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு தம்மிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் சம்வத்தின்போது பொலிஸார் செயற்பட்ட விதம் குறித்து அந்த அறிக்கையில் ஆராயப்பட்டுள்ளது.
குறிப்பாக நிறுவன விதிக்கோவையின் பிரகாரம், பொலிஸார் ஒழுக்கம் மீறி செயற்பட்டார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக...
கொடகவல-பலவின்ன பிரதேசத்தில் வாயு சிலிண்டர்கள் வீழ்ந்ததினால் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக கொடகவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சப்புகஸ்கந்தையில் இருந்து அம்பலாந்தொட்டை நோக்கி வாயுசிலிண்டர்கள் லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட போது குறித்த லொறியிலிருந்து வாயு சிலிண்டர்கள் திடீரென விழுந்துள்ளன. இதன்போது பாதையில் பயணித்த குறித்த பெண் படுகாமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் படுகாயமடைந்த பெண் கொடகவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக...
பண்டிகை காலங்களில் நுகர்வோருக்கு ஏற்படக் கூடிய அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக நாடு முழுவதும் சுற்றிவளைப்பை மேற்கொள்வதற்கு நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுமக்கள் உணவு மற்றும் குடிபானங்களை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்கும்படி பொது சுகாதார பரிசோதாகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
அத்துடன் பண்டிகைக்காலத்தில் மக்களின் சுகாதாரத்துக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் பிரகாரம் எதிர்வரும் ஏப்ரல்...
பூஜை பரிகாரத்தின் போது எலுமிச்சைப் பழம் தொண்டையில் சிக்கியதில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
அனுராதபுரம் பிரதேசத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனை குறித்த பெண்ணின் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்ட அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியும் எஸ்.எம்.எச்.எம்.என்.சேனநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் இந்தப் பெண்ணின் உடலில் இருபதுக்கு மேற்பட்ட எரிகாயங்களும், அடிகாயங்களும் காணப்பட்டதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 36 வயதான குறித்த பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி மந்திரவாதியிடம் அழைத்துச் சென்ற...
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் சென் ஜோன் டிலரி தோட்டபகுதியில் கெசல்கமுவ ஓயாவில் ஆணின் சடலம் ஒன்று நேற்று மாலை மீட்கபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
70வயது மதிக்கதக்க இரண்டு பிள்ளைகனின் தந்தையான பழனியாண்டி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கபட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சடலம் தொடர்பாக அட்டன் நீதவான் விசாரனைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பரிசோனைக்காக நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபடவுள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம்...