டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் 2வது அரையிறுதியில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
நேற்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேற்றியது.
இந்நிலையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் இந்தியா, மேற்கிந்திய...
தெறி படத்தின் ட்ரைலரில் விஜய்யை தாண்டி நம்மை மிகவும் கவர்ந்தது நைனிகா தான். இவரின் எக்ஸ்பிரஷன், குறும்பு சேட்டை என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து இழுத்து விட்டது.
தற்போது ஒரு பேட்டியில் நைனிகா ‘விஜய் அங்கிள் சோ ஸ்வீட், அவர் எனக்கு நிறைய கிப்ட்ஸ் வாங்கி தந்தார். முதலில் எனக்கு ஒரு ரிமோர்ட் கார் தந்தார்.
பிறகு வாட்ச், பிங்க் கலர் பேக், சாக்லேட்ஸ், ஒரு ஸ்மைலி பாக்ஸ் கொடுத்தார்’ என...
தனுஷ் தற்போது அடுத்தடுத்து பல படங்களின் கமிட் ஆகி வருகின்றார். இதுமட்டுமின்றி இவர் தயாரிப்பிலும் வரிசையாக படங்கள் வருகின்றது.
இதில் கமர்ஷியலாக நானும் ரவுடி தான் பெரிய ஹிட் அடிக்க,விசாரணை தேசிய விருது பெற்றது தனுஷிற்கு கூடுதல் மகிழ்ச்சி.
இந்நிலையில் இவர் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் கொடி படத்தைலைகா நிறுவனம் வாங்கி வெளியிடவுள்ளது. இதை தொடர்ந்து தொடரி, வட சென்னை, செல்வராகவன் படம், பாலாஜி மோகன் படம் என தனுஷ் நடிப்பில்...
பிரபல இயக்குனர் திரைப்பட நடிகை ரோஜாவின் கணவர் என அனைவராலும் அறியப்பட்டவர் ஆர்.கே.செல்வமணி. இவர் சமீபத்தில் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மிகவும் சர்ச்சையாக பேசினார்.
இதில் இவர் கூறுகையில், ‘என் மனைவியின் அண்ணன் மகள் என்னிடம் “என்ன.. உங்க சென்னை நட்சத்திர கிரிக்கெட் அணி இவ்வளவு மோசமாக உள்ளது, எல்லா போட்டிகளிலும் தோற்றுக்கொண்டே வருகிறார்கள்” என கேட்டார்.
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை, தயவு செய்து நன்றாக...
செல்வராகவன் தற்போது எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தை இயக்கி வருகிறார். இப்படம் 90% படப்பிடிப்பு முடிந்து விட்டதாம்.
இப்படம் முடிந்த கையோடு அடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு படத்தை செல்வராகவன் இயக்கவுள்ளாராம். இதற்கான பேச்சு வார்த்தை தற்போது நடந்து வருகின்றது.
ஏற்கனவே விஜய் சேதுபதி கையில் அரை டஜன் படங்கள் இருக்க, தற்போது செல்வராகவனுடன் இணைவது ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை தந்துள்ளது.
வடக்கில் வீடொன்றில் இருந்து நேற்று மீட்கப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் அங்கி மற்றும் ஆயுதங்கள் குறித்து ஜீ.எல். பீரிஸ் ஏற்கனவே அறிந்திருந்தால், முன்னதாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியிருக்கலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த தற்கொலை அங்கி உட்பட ஆயுதங்கள் கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்திற்கு கொண்டு வரப்படவிருந்ததாக ஜீ.எல். பீரிஸ் கூறியுள்ளார்.
இந்த தகவல்களை அறிந்திருந்தும் ஏன் அவர் அதனை பொலிஸாருக்கு தெரியப்படுத்தவில்லை எனவும் பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திறைசேரியின் புதிய...
கண்டெடுக்கப்பட்ட அங்கிகள் மற்றும் யுத்த ஆயுதங்களால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சறுத்தல் என பலர் கருத்து வெளியிட்டாலும் அவற்றால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணா சேன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்துடன், குறித்த ஆயுதங்கள் தொடர்பான விசாரணைகளை விசேட பொலிஸ் பிரிவினர் மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக கருணா சேன ஹெட்டியாராய்ச்சி...
ஈராக்கில் உள்நாட்டு போர் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் வேறு வழியில்லாததால் குப்பை அள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே நடைபெற்று வரும் உள்நாட்டு போரினால் பெரிதும் பாதிக்கப்படுவது அங்குள்ள அப்பாவி மக்களே.
இந்த போர் காரணமாக ஏராளமானோர் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்து அகதிகளாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஈராக்கின் குர்தீஷ் பகுதியில் இடம் பெயர்ந்துள்ள அகதிகள் வாழ வழியில்லால் அங்குள்ள குப்பை கிடங்கில் குப்பை அள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குப்பை கிடங்கில்...
அயர்லாந்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்று சுறாக்களுடன் ஒரு இரவை கழிக்கும் விசித்திர சவாலை பொதுமக்களிடம் விடுத்துள்ளது.அயர்லாந்த் நாட்டில் அமைந்துள்ள தனியார் நிறுவனமானAirbnb மற்றும் Paris Aquarium இணைந்து இந்த வேறுபட்ட சவாலுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த சவாலில் தெரிவாகும் 3 துணிச்சல் மிகுந்த நபர்களை பாரிஸ் நகரில் அமைந்துள்ள பிரபல நீர்வாழ் காட்சியகத்தில் ஒரு இரவை கழிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த விசித்திர சவாலுக்கென பாரிஸ் நீர்வாழ் காட்சியகத்தில் சுறாக்களுக்கான பகுதியில்...
காணாமல் போனதாக கூறப்பட்டவர்களில் நான்கு பேர் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இரண்டு, மூன்று பேர் மாலைதீவு சிறையில் இருப்பதாகவும் காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
நேற்று புதன்கிழமை வவுனியாவில் இடம்பெற்ற காணாமல் போனோர் தொடர்பான சாட்சியமளிப்பு அமர்வு நிறைவு பெற்ற பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அதில் தெரிவித்ததாவது,
காணாமல் போனோர் தொடர்பாக செய்யப்பட்ட...