வாகனங்கள் செலுத்தும் போது கையடக்கத் தொலைபேசி பாவிப்பதை முழுமையாக தடை செய்வதற்கான சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது. கையடக்கத் தொலைபேசி பாவிப்பதன் ஊடாக விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் இதில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களே அதிகளவில் இடம்பெறுவதாகவும் வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை சுட்டிக்காட்யுள்ளது. மேலும் நேற்று சட்டத்தரணிகள் சங்கத்துடன் இடம் பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக வீதி பாதுகாப்பு தொடர்பான...
கிழக்கு மாகாணத்திலுள்ள வர்த்தகர்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கிழக்கு மாகாண வர்த்தகச் சம்மேளனத்தின் தலைவர் கே.குலதீபன் தெரிவித்தார். கிழக்கு மாகாண வர்த்தகச் சம்மேளன அங்குரார்ப்பண நிகழ்வுக்கான ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் கலந்துரையாடல், நேற்று திருகோணமலை ஜேக்கப் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த வர்த்தகர்களும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு, ஒன்றிணைந்து...
சிறுநீரக நோயாளர்களுக்கு மாதந்தோறும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த 3000ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படாமையால் சிறுநீரக நோயாளர்கள் மிகவும் கஷ்டங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக சிறுநீரக பாதுகாப்புச் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், மதவாச்சி பிரதேசத்தில் குறித்த பணமானது ஒழுங்கான முறையில் வழங்கப்பட்டு வரும் இதேவேளை, ஏனைய பிரதேசங்களிலுள்ள சிறுநீரக நோயாளர்களுக்கு குறித்த கொடுப்பனவானது குறிப்பிட்ட நேரத்தில் வழங்கப்படாமல் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படுவதாக இந்த சங்கத்தின் ஏற்பாட்டாளர் அகுனோச்சிய குமார காசியப்ப தேரர்...
விஷால் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர். அதுமட்டுமில்லாமல் நடிகர் சங்கத்தின் செயலாளராக இருந்து வருகிறார். நடிகர் சங்க பொறுப்பு ஏற்றதில் இருந்தே பல நல்ல காரியங்களை அனைவருக்கும் செய்து வருகிறார். இந்த நிலையில் விஷாலுக்கு யாரோ ஒருவர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை உருவாக்கி அதை வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். தற்போது அந்த போஸ்டர் வைரலாக பரவி வருகிறது. அதில் திரு. விஷால் எங்களை பகைத்தால் இதுதான் நிலைமை என்று குறிப்பிட்டுள்ளனர். இது...
தேசிய விருதில் விசாரணை படத்திற்கு சிறந்த தமிழ் படம், சிறந்த துணை நடிகர், சிறந்த எடிட்டிங் என மூன்று விருதுகள் கிடைத்துள்ளது. இதுகுறித்து தனுஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், விசாரணை படத்துக்கு 3 விருதுகள் என்பது எனக்கு 3 மடங்கு மகிழ்ச்சியான விஷயமாகும். மூன்று தேசிய விருதுகளை தந்துள்ள இயக்குனர் வெற்றிமாறனுக்கு நன்றி கூறுவது எனது கடமையாகும் என்று கூறியுள்ளார்.
நேற்று 63வது தேசிய விருது வென்றவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதில் ஐ படத்திற்காக உடலை இளைத்து, கூட்டி என மிகவும் கஷ்டப்பட்டு நடித்த விக்ரமிற்கு ஒரு விருதும் கிடைக்கவில்லை என்பதால் ரசிகர்கள் பலரும் தேசிய விருதிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பி.சி. ஸ்ரீராம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், விக்ரமிற்கு விருது கிடைக்காதது அவருடைய இழப்பு இல்லை, இது தேசிய விருதுகளுக்கான இழப்பு என்று டுவிட் செய்துள்ளார். advertisem
கலாபவன் மணியின் மரணம் சினிமாவிற்கு ஒரு ஈடுகட்ட முடியா இழப்பாகும். இந்நிலையில் கலாபவன் மணிக்கு திருவனந்தபுரம்அருகே ஆற்றிங்கல் மாமம் என்ற இடத்தில் அவரது ரசிகர்கள் அமைப்பான கலாபவன்மணி சேவா சமிதி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கலாபவன்மணியின் உருவபடத்தை அணையாவிளக்குடன் அமைத்து ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். இதில் அவரது சகோதரர் மற்றும் பல பிரபலங்கள், எராளமான ரசிகர்கள் பங்கேற்றனர்.
இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் நேற்று திடீரேன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனை சந்தித்து பேசியுள்ளார். அவரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் கொடுத்துள்ளார். மனு கொடுத்துவிட்டு வெளியில் வந்தநடிகர் பார்த்திபன் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்தபோது, அண்மையில் லதா ரஜினிகாந்த் எனக்கு போன் செய்து அழுதபடி பேசினார். குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாக இன்று காலையில் பத்திரிக்கையில் வந்த செய்தியை படித்தேன். ஒரு பெண், ஆண் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். இதுபோல் குழந்தைகள்...
63வது வருட தேசிய விருது இன்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் சினிமாவிற்கு சுமார் 5 விருதுகளை வரை கிடைத்தது. ஆனால், வழக்கம் போல் பாலிவுட் படங்களுக்கே பல விருதுகளை அள்ளிக்கொடுத்துள்ளனர். குறிப்பாக ஐ படத்திற்கு விக்ரமிற்கு விருது அளிக்காதது பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விக்ரமிற்கு ஆதரவாகவும், தேசிய விருதிற்கு எதிராகவும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏப்ரல் மாதம் தெறி படம் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தின் டீசர், ட்ரைலர், பாடல்கள் என அனைத்தும் ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில் இந்த வாரம் இப்படம் சென்ஸார் செல்லவுள்ளதாம். எப்படியாவது ‘யு’ சான்றிதழ் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பும். ஏனெனில் இப்படத்தின் பட்ஜெட் ரூ 70 கோடி வரை இருப்பதால் வரி விலக்கு கிடைத்தால் தான் வசூலில் பாதிப்பு ஏற்படாது என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள்...