மனநிலை மாற்றங்களுக்கும், எண்ணங்களுக்கும் நம் மூளையில் சுரக்கும் நியூரோடிரான்ஸ்மிட்டர்(Neurotransmitter) என்னும் ரசாயனங்கள் காரணமாகின்றன.நம் உணவில் இருந்து, நம் உடல், தனக்குத் தேவைப்படும் ட்ரிப்டோபன், டைரோசின், கோலின் எனும் அமினோ அமிலங்கள் என்ற நியூரோ டிரான்ஸ்மிட்டர்களை தயாரித்துக் கொள்கிறது. இதற்கேற்ப உணவுகளை எடுத்துக் கொண்டால், அவை மருந்து போல செயல்பட்டு, நம் மூளையின் செயல்பாடுகளில் மாற்றங்கள் நிகழ்கின்றன. மீன் புரதச்சத்து நிறைந்த மீன், டைரோசின் என்ற அமினோ அமிலத்தைக் கொண்டது. உடலில் டைரோசின் அதிகமாக...
இந்த நாட்டிலே நடைபெற்ற ஜனநாயகரீதியான போராட்டங்களாக இருக்கலாம், ஆயுதரீதியான போராட்டங்களாக இருக்கலாம் இவை அனைத்தும் நடைபெற்றது வடகிழக்கு இணைந்த தாயகத்தில் தமிழ் பேசும் இரண்டு சமூகங்களும் சமத்துவத்தின் அடிப்படையில் வாழவேண்டும் என்பதற்காகவே என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார். கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்டியானது நேற்று  கல்லூரி முதல்வர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர். வடகிழக்கு மாகாணங்களை பொறுத்தவரையில் இந்த...
யாழில் வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில் மோடார் சைக்கிள் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்றையதினம் காலை வேலைக்கு செல்வதற்காக அராலி வடக்கில் பஸ்சிற்கு காத்திருந்து விட்டு, வீதியைக்  கடக்க முற்பட்ட வேளையில் கையடக்க தொலைபேசியில் மோட்டார் சைக்கிளில் கதைத்துக் கொண்டு வந்த இளைஞன் ஒருவன் குறித்த நபரை மோதிவிட்டு சென்றுள்ளான். இந்நிலையில் குறித்த நபர் இரத்தப் பெருக்கு காயங்களுடன் சுமார் இருபது நிமிடங்கள் வீதியில் கிடந்துள்ளார். யாரும்...
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் 12 வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும், அதனூடாக பல நன்மைகள் நாட்டிற்கு கிடைத்துள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முதலாவது வெளிநாட்டு பயணம் 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை பதிவானதாகவும்...
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இருந்து வெலிகடை சிறைச்சாலை நோக்கி சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து மீது, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பிலான விசாரணை கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் அறிவுரைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். நேற்றையதினம், பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பிலான சந்தேகநபர்களைக் கொண்டு சென்ற குறித்த சிறைச்சாலை பஸ் மீது, கார் மற்றும்...
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தின் போது, மட்டக்களப்பு - திருமலை பிரதான வீதியில் உள்ள மின்கம்பம் உடைந்த நிலையில் இருந்தும், இதுவரையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறித்த மின்கம்பத்திற்கு அருகாமையில், சிறுவர்கள் பாலர் பாடசாலை மற்றும் சிறுவர்கள், பெண்கள் என அதிக மக்கள் நடமாடும் பிரதான வீதியிலேயே இவ்வாறு காணப்படுகின்றது . “சேதங்கள் ஏற்பட முன் சீர் செய்யுங்கள்” என...
எம்பிலிபிட்டிய நகரில் விருந்துபசாரமொன்றின் போது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் சாட்சியாளர்களுக்கு, அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில், இரகசிய பொலிஸின் விசேட விசாரணை பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொலிஸ் மாஅதிபரின் உத்தரவிற்கு அமைய இரகசிய பொலிஸ் விசாரணை குழுவொன்றினால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எம்பிலிபிட்டிய மேலதிக நீதவான் பிரசன்ன பெர்ணான்டோவை பொலிஸார் நேற்று தெளிவூட்டினர். இந்த வழக்கு மீதான விசாரணைகள் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே பொலிஸார்...
வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நித்தியநகர் கிராமத்தில் யானைகளின் தாக்குதல்கள் காரணமாக விவசாய நிலங்களும்,பயிர்களும் நாசமாவதுடன் கிராம மக்களின் வீடுகளையும் தாக்கி அழித்து வருவதாக அம்மக்கள் கவலை வெளியிட்டனர். கடந்த யுத்தகாலத்தில் நித்தியநகர் கிராமத்தை விட்டு துரத்தியடிக்கப்பட்ட அம் மக்கள் உள்ளுரிலும், இந்தியவிற்கும் இடம்பெயர்ந்திருந்தனர். 2000 ஆம் ஆண்டுக்கு பின் தமது ஊரில் மீள்குடியேறிய அம்மக்கள் விவசாயத் தொழிலையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததன்...
வீட்டு வேலைகள் உட்பட பல இதர வேலைகளை செய்கையில் பெண்களின் கைகள் சொரசொரப்பாகவும், கடினமாகவும் மாறிவிடுகின்றன.கைகள் சொரசொரப்பாக இருப்பதனால், கைகள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. கைகளால் முகத்தைத் தேய்த்துக் கழுவும்போது, கண்களுக்குத் தெரியாத மெல்லிய கோடுகள் முகத்தில் உருவாகும். இதனால் நாளடைவில் முகம் தொய்வடையக்கூடும். எனவே, விரல்களின் மென்மையை காக்க வேண்டியது அவசியம். தினமும் இரவு ஒரு பாத்திரத்தில், கைபொறுக்கும் சூட்டில் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். அதில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய், ஒரு ஸ்பூன்...
காலம்: 05.03.2016 (சனிக்கிழமை) நேரம்: பிற்பகல் 2.00 மணிக்கு இடம்: இந்திரன்ஸ் விருந்தினர் விடுதி (வவுனியா மத்திய தொடருந்து நிலையத்துக்கு அருகாமையில்) நிகழ்ச்சி நிரல்: தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட 15 உறுப்பினர்களைக்கொண்ட தலைமைக்குழுவையும், பிரதேச இணைப்பாளர்களையும் மீளத்தெரிவுசெய்து கட்டமைத்தல். பிரஜைகள் குழுவின் கடந்தகால செயல்பாடுகள் - நடவடிக்கைகளை குழு விமர்சனத்துக்கு உட்படுத்தி மதிப்பீடு செய்தலும், எதிர்கால வேலைத்திட்டங்கள் - நிர்வாக ஒழுங்கமைப்புகள் தொடர்பில் தீர்மானித்தலும். புதிய உறுப்பினர்களை உள்ளீர்த்தல்: இலங்கை தேர்தல்கள் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டதும் - தேர்தல்களை சந்தித்ததுமான...