புதிய அரசியல் அமைப்பு பற்றிய மக்களின் கருத்துக்கள் அடங்கிய அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. சட்டத்தரணி லால் விஜேநாயக்க தலைமயிலான குழுவொன்றினால் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அரசியல் அமைப்பு பற்றிய மக்கள் கருத்துக்கள் அறியப்பட்டிருந்தன. அரசியல் அமைப்பு பற்றி மக்கள் வெளியிட்ட கருத்துக்கள் மற்றும் கருத்து கோரும் பணிகளின் முன்னேற்றம் பற்றி எதிர்வரும் 15ம் திகதி ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சட்டத்தரணி விஜேநாயக்க கொழும்பு பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார். இந்த...
அட்டன் நகரத்திலிருந்து 03.03.2016 அன்று காலை 7.30 மணியளவில் டயகம நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று பாடசாலை மாணவன் மீது மோதியதால் மாணவன் படுகாயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான். இவ்விபத்து தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவருவதாவது, டிக்கோயா தரவளை பகுதியில் 8 வயதுடைய மாணவன் ஒருவன் தனது வீட்டிலிருந்து பாடசாலைக்கு செல்லும் போது படியில் இருந்து வீதிக்கு இறங்கும் பொழுது அவ்வழியாக வந்த பஸ்...
பயங்கரவாதத் தடை திருத்தச் சட்ட யோசனைகள் உரிய அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தி அமைக்கப்படவுள்ளது. இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள உத்தேச திருத்தச் சட்ட யோசனை துறைசார் மூன்று அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சட்டவாக்க ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா தெரிவித்துள்ளார். நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோரிடம்...
வடக்கில் உள்ள ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிவதற்காக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க எதிர்வரும் 26ஆம் திகதியன்று அங்கு செல்லவுள்ளார். இந்த மூன்று நாள் விஜயத்தின் போது கொழும்பில் உள்ள அரச மற்றும் தனியார் ஊடக பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர். இந்தநிலையில் போர் காலத்தில் கொல்லப்பட்ட மூன்று ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வீடமைப்புத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவுடன் பேசி மாகாண ஊடகவியலாளர்களுக்கென்று 25 ஊடக கிராமங்களை நிர்மாணிக்கவுள்ளதாக கயந்த கருணாதிலக்க...
சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவல் பிரபுவின் 159 ஆவது பிறந்த தின நிகழ்வுகள், மாவட்ட ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு த.நிகேதன் தலைமையில் வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில் அண்மையில் வெகு சிறப்பாக  நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக மத வழிபாடுகளும், அதனைத் தொடர்ந்து சாரண மாணவர்கள் பங்குபற்றிய துவிச்சக்கர வண்டி விழிப்புணர்வு பயணம்  வவுனியா நகரெங்கும் சிறப்பாக நடைபெற்றதுடன்.  தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில் சாரணர்களின் கலை...
இலங்கையின் நல்லிணக்கத்தின் அனுகூலங்களை மக்கள் உணர வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நேற்று இடம்பெற்ற ஜனநாயக சமூகத்தின் அதிகாரசபையின் 20வது கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அமைச்சர் இந்தக்கருத்தை வெளியிட்டார். எனவே இனப்பிரச்சினையை தீர்க்கும் முயற்சிகளுக்கு அரசாங்கம் சர்வதேசத்தின் உதவிகளை எதிர்பார்க்கிறது என்று அவர் குறிப்பிட்டார். நல்லிணக்கம் காரணமாக இலங்கையில், அரசியல் பொருளாதார முதலீட்டு ஊக்குவிப்பு என்பன ஏற்படும் என்பதில் அரசாங்கத்துக்கு சந்தேகம் இல்லை. எனினும் நல்லிணக்கத்தின் அனுகூலங்களை...
பொன்னர் சங்கர் கூத்தானது பேச்சு வழக்கில் மருவி பொன்னர் சங்கம் என பெயர் வந்தது. பொன்னர், சங்கர் எனும் இரண்டு சகோதரர்களும் தனது தங்கையின் ஆசையை நிறைவேற்ற ஏழு கடல் தாண்டி சென்று தங்கை கேட்ட கிளியை கொண்டு வந்து தன் தங்கையிடம் கெடுத்தனர். அந்த கிளியைத்தேடி செல்லும் வழியில் சந்தித்த இன்னல்களையும் பேராட்டங்களையும் அன்னன் தங்கை உறவின் ஆலத்தையும் 5 அங்கங்களான பிறப்பு வளர்ப்பு, கிளி பிடித்தல்,...
கடந்த 23 ஆம் திகதி அனுராதபுரம், மகசின், வெலிக்கடை ஆகிய சிறைகளில் இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகள் சிலர் தங்களது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அனுராதபுரச் சிறைச்சாலையில் இருந்த இரு கைதிகள் தங்களது உண்ணாவிரதத்தை கைவிட்டிருக்கும் அதே வேளையில், மகசின் சிறைச்சாலையிலும், வெலிக்கடைச் சிறைச்சாலையிலும் 14 தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ச்சியாக தமது உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். இச் சூழ்நிலையில் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள்...
 வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளால் முன்னெடுக்கப்படும் மக்கள் நலன்சார் செயற்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலொன்று வவுனியா பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர் பணிமனையில் நேற்று இடம்பெற்றது. இதில், மக்கள் நலன்சார் திட்டங்களை திட்டமிடும்போது மாவட்டத்தின் நீண்டகால நோக்கை அடிப்படையாக கொண்டதாக அமைய வேண்டும் எனவும் இதன்போது உள்ளூராட்சி மன்றங்களினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற செயற்திட்டங்கள், எதிர்காலத்தில் திட்டமிடப்பட்ட செயற்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன் இவ்வாறான கூட்டங்கள் எதிர்காலத்தில் மாதமொருமுறை நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. வடக்கு...
ஐ. நா. மனித உரிமை ஆணையத்தின் நிகழ்கால கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் விவகாரம் விவாதிக்கப்படாமல் இருக்க இருதரப்பு இணக்கம் ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று சந்தேகம் எழுப்பியுள்ளது. மனித உரிமை ஆணையம் இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், வட, கிழக்கில் இராணுவத்தினரின் பிரசன்னத்தை குறைத்தல், வடக்கில் பொதுமக்களின் காணிகளை விடுவித்தல் ஆகிய நிபந்தனைகளை இலங்கை அரசாங்கத்திடம் விதித்துள்ளது. இதனை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதன் காரணமாகவே மனித...