முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் டி20 லீக் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 28ம் திகதி துபாயில் தொடங்குகிறது. இந்த தொடரில் கங்குலி, ஷேவாக், காலிஸ், ஜெயவர்த்தனே, சங்கக்காரா, முரளிதரன், கில்கிறிஸ்ட், வெட்டோரி, பிரட் லீ, பிரையன் லாரா என பல முன்னாள் வீரர்கள் பங்கேற்கின்றனர். முதல் போட்டியிலே கங்குலியின் லிப்ரா லெஜண்ட்ஸ் மற்றும் ஷேவாக்கின் ஜெமினி அரேபியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த தொடரின் துணை நிறுவனத்திற்கு டோனி தான்...
  நியூசிலாந்து அணித்தலைவர் மெக்கல்லம் அவுஸ்திலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெற முடிவு செய்துள்ளார். இலங்கை அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 2வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது. அப்போது பேசிய நியூசிலாந்து அணித்தலைவர் மெக்கல்லம், தான் அடுத்த வருடம் பெப்ரவரியில் நடக்கும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு ஓய்வு பெற உள்ளதாக...
  பிக் பாஷ் டி20 லீக் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தியது. அவுஸ்திரேலியாவில் நடந்து வரும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் நேற்று ஹோபர்ட் ஹரிகேன்ஸ்- பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற ஹோபர்ட் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதிரடியாக ஆடிய ஹோபர்ட் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் மட்டும் இழந்த...
  இந்திய சினிமாவின் அனைத்து மாஸ் ஹீரோக்களும் நடிக்க விரும்புவது முருகதாஸ் இயக்கத்தில் தான். அந்த வகையில் இந்த அதிர்ஷடம் அடுத்து மகேஷ் பாபுவிற்கு அடித்துள்ளது. ஆம், மகேஷ் பாபு தான் அடுத்து முருகதாஸ் படத்தின் ஹீரோ. இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஸ்ருதிஹாசன் தான் கமிட் ஆகியிருந்தார். சமீபத்தில் வந்த தகவலின்படி ஆஷிக்-2 படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்த ஷரதா...
  சென்னை வெள்ளத்தால் சிக்கிய பலர் தற்போது இயல்பு நிலைக்கு வருகின்றனர். இந்த வெள்ளத்தில் சென்னையில் இருந்து பாங்காங்க் செல்ல வந்தமலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் சிக்கியிருக்கிறார். இதுபற்றி மோகன்லால் தனது வலைப்பகுதியில் கூறியுள்ளதாவது, எனது ஃபேவரைட் சிட்டியான சென்னை, தற்போதுள்ள நிலைமையை பார்க்கும்போது வேதனையாக உள்ளது. அதேநேரம், மனிதர்கள் வேற்றுமையை மறந்து ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டது ஆறுதல் அளிக்கிறது. நான் பல படங்களில் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ளேன். ஆனால் ஒரு வெள்ளம் என்னை எவ்வளவு...
  சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி தர்மதுரை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியை பறையிசைக்கலைஞர்கள் குழுவோடு எடுத்து வருகின்றனர். இந்நிலையில் படக்குழுவினர் நேற்று நடிகர் அருள்தாஸின்பிறந்தநாளை கொண்டாடினர். அப்போது படப்பிடிப்புக்காக வந்திருந்த பறையிசைக்கலைஞர்கள் பறையை இசைக்க அதற்குத் தகுந்தாற்போல் விஜய்சேதுபதி ஆடத் தொடங்க, அவரோடு மற்றவர்களும் ஆடத் தொடங்கிவிட்டனர். இதனை சிலர் படம்பிடித்து சமூகவலைதளங்களில் பரவி தொடங்கி விட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
சிம்பு ஒரே ஒரு பீப் பாடல் பாடிவிட்டு பெரும் சர்ச்சையில் சிக்கி தவித்து வருகிறார். இந்நிலையில் சிம்புவை எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என தீர்ப்பு வந்தது. சமீபத்தில் வந்த தகவலின்படி சிம்புவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாம். மேலும், அவர் தன் நண்பர்கள் வீட்டில் தலைமறைவாகியிருக்கலாம் என கூறப்படுகின்றது. இதனால், அவரின் நண்பர்கள் வீட்டிலும் சோதனை நடப்பதாக பேசப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் பதவியில் இருந்து சஜித் பிரேமதாசவை நீக்க வேண்டும் என பிரதமர் ரணிலிடம் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் கோரியுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் பிரதமரிடம் சில ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்கள் இதனை குறிப்பிட்டுள்ளத்காகவும் அதற்கு பிரதமர் மவுனமாக இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக பிரதமர் ரணிலின் தலைமை துவத்துக்கு கட்சிக்குள் எதிர்ப்பு வழுத்த போது தலைமைத்துவ சபை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது அதன்...
பண்டிகைக காலத்தில் 1000 மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இந்த மாதம் 31 ஆம் திகதி வரை இந்த பஸ்கள் சேவையில் ஈடுபடும் என்பதோடு விசேட போக்குவரத்து சேவைகளும் இடம்பெறும் என இந்த சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்துள்ளார். இந்தக் காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபையில் சேவையாற்றுகின்ற அனைத்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை பண்டிகைக்காலத்தில் விசேட ரயில்...
நாட்டின் இன்றைய அரசாங்கம் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட பொய்யையே கையாண்டு வருகிறது என்பது முதலாளித்துவ பொருளாதார நிபுணருக்கு கூட புரியும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். நாட்டின் தற்போதைய காலம் வறுமை அதிகரிக்கும் காலமாக மாறி வருகிறது. அரசாங்கம் இது குறித்து உரிய கவனத்தை செலுத்தவில்லை. மேலும் தேயிலை மற்றும் இறப்பருக்கு நிவாரணங்கள் வழங்குவது தொடர்பாக அரசாங்கம் எதனையும்...