சின்னத்திரை தொகுப்பாளினியாக இருந்தாலும் வெள்ளித்திரை நடிகர்களுக்கு மிகவும் பழக்கமானவர் டிடி. ஏனெனில் பல நடிகர், நடிகைகளை இவர் பேட்டி கண்டுள்ளார். இவர் சமீபத்தில் ஒரு வார இதழ் ஒன்றில் அளித்த பேட்டியில் யாருக்கு இந்த ரக்‌ஷா பந்தனுக்கு ராக்கி கட்ட ஆசை என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் விஜய் மற்றும் சூர்யாவிற்கு மட்டும் தான் இந்த வருடம் ராக்கி கட்ட ஆசை என கூறியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் என பெயரை எடுத்து விட்டார். இந்நிலையில் இவர் அடுத்து படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்து வருகிறார். இதன் முதற் படியாக இவர் நடித்த டார்லிங் சூப்பர் ஹிட் ஆனது. இதை தொடர்ந்து இவர் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ‘ஏ’சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனால், வரிவிலக்கு கிடைக்கவே வாய்ப்பில்லை. இருந்தாலும் இளைஞர்களை நம்புகிறோம், அவர்களுக்கு படம் பிடிக்கும் என படக்குழு உறுதியாகவுள்ளதாம்.
இளைய தளபதி புது மாப்பிள்ளைக்கு விருந்து வைத்த விஜய் எல்லோரையும் மதிக்கத்தெரிந்தவர். அவர் பெரிய நடிகரா? இல்லை சிறிய நடிகரா? என்று ஒரு போதும் பார்த்து பழகமாட்டார். சமீபத்தில் கூட சாந்தனு திருமணம் முடியும் வரை இருந்து தான் சென்றார். சமீபத்தில் இந்த புதுமண தம்பதிகளான சாந்தனு-கீர்த்தியை தன் வீட்டிற்கு விருந்திற்கு அழைத்துள்ளார். அவர்களும் செல்ல, விஜய் தடபுடலாக கவணிக்க, மகிழ்ச்சியில் சாந்தனு துள்ளிக்குதித்துள்ளார். இதை தன் டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
  தேசிய அரசாங்கத்தின் முழுமையான அமைச்சரவை மற்றும் அதற்கான அமைச்சர்கள் தொடர்பான இணக்கப்பாடு தற்போது எட்டப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் 50 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், 10 இராஜாங்க அமைச்சர்களும், 30 பிரதி அமைச்சர்களும் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இதில் 10 முஸ்லிம் மற்றும் 5 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம் பிடித்துள்ளனர். எனினும் இவர்களுக்கு ஒதுக்கப்படவுள்ள அமைச்சுக்களின் விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எதிர்வரும் நான்காம் திகதியளவில் அமைச்சர்களின் பதவிப் பிரமாண வைபவம்...
  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு இலங்கை பொலிஸ் அதிகாரி ஒருவர் செல்யூட் செய்து மரியாதை செய்தமை ஏற்றுக்கொள்ளத்தக்க செயலல்ல என்று பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. பாரிய ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் கோத்தபாய கடந்த திங்கட்கிமையன்று 24ஆம் திகதியன்று சாட்சியமளிக்க சென்றிருந்தார். இதன்போது அவருக்கு பொலிஸ் அதிகாரி வணக்கம் செலுத்தியதாக கொழும்பின் ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த பிரசன்னத்தின் போது கோத்தபாய 5 மணித்தியாலங்களாக விசாரணை...
  வவுனியாவில் சிறு நீர் முகாமைத்துவ பொருட்கள் அன்பளிப்பு வவுனியாவில் அமைந்துள்ள வைகறை புனர்வாழ்வு நிலையத்தில் வடக்கு மாகாணத்திற்கான முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட 50 பேருக்கு இன்று 28-08-2015 வெள்ளிக்கிழமை சிறு நீர் முகாமைத்துவப் பொருட்கள் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கம் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பிரதேசத்திலிருந்து முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்ட்டவர்கள்; வருகை தந்திருந்தனர். இந்நிகழ்விற்கு மோட்டிவேசன் நிறுவனத்தினர் அனுசரணை வழங்கியிருந்தனர். மோட்டிவேசன் நிறுவன பணிப்பாளர், வைகறை முகாமையாளர், ஆயுள்வேத வைத்திய அத்தியட்சகர்,...
  ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் கூட்டிணைவதால் மாத்திரம் தேசிய அரசாங்கம் ஆகிவிட முடியாது. தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு உரிய இடங்கள் வழங்கப்பட்டால்தான் இது தேசிய அல்லது தேசிய ஐக்கிய அரசாங்கமாக முடியும்.   இதேபோல் எப்பாடுபட்டாவது அமைச்சுப் பதவிகளை கைப்பற்றிக்கொள்வது என்பது தேசிய அரசாங்கத்தின் முன்னுரிமை பட்டியலில் முதலிடம் பிடிக்க முடியாது. இது தேசிய அரசாங்கம் என அழைக்கப்படலாம். ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இணைந்தால்தான் இது தேசிய...
மன்னார், மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிக்கு அருகே சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் கிணற்றில் இன்று  அகழ்வுப் பணிகள் இடம் பெறவுள்ளது. மன்னார் நீதவான் ஏ.ஜீ. அலெக்ஸ்ராஜா கடந்த புதன் கிழமை மாலை குறித்த மனித புதைகுழி காணப்பட்ட இடத்திற்குச் சென்று பார்வையிட்டதோடு நிள அளவையாளர் திணைக்கள அதிகாரிகளின் உதவியோடு கிணற்றையும் அடையாளம் கண்டனர். இந்த நிலையில் மன்னார் நீதவானின் உத்தரவிற்கு அமைய கிணற்றை அண்மித்த பகுதியில் நேற்று வியாழக்கிழமை ...
நல்லெண்ணெய்யை வெறும் வயிற்றில் குடிப்பதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.நல்லெண்ணெய்யில் கனிமச்சத்துகள், விட்டமின் ஈ, விட்டமின் பி6, மன்னீசியம், காப்பர், கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க் போன்றவை நிறைந்துள்ளன.அதுவும், நல்லெண்ணெய்யை வெறும் வயிற்றில் குடிப்பதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.1.குடலியக்கம் சீராக நடைபெற்று மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். 2.நல்லெண்ணெய்யில் லெசித்தின் என்னும் பொருளும், லினோலிக் என்னும் அமிலமும் இருப்பதால், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பைக் கரைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். 3.உடல்...
ஆஸ்திரியாவின் பேர்கன்லேன்ட் மாகாணத்திற்குக் கிழக்கே, ஹங்கேரி எல்லையை அண்மித்த பகுதியில் கைவிடப்பட்ட லொறியொன்றிலிருந்து, அகதிகள் பலரது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரிய நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்படி லொறியின் குளிரூட்டப்பட்ட பகுதிக்குள் சுமார் 50 சடலங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட லொறியில் ஹங்கேரி இலக்கத் தகடுகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதனை பயன்படுத்தி தப்பியோடிய லொறி ஓட்டுநரை கண்டுப்பிடிப்பதற்காக ஆஸ்த்ரிய அரசாங்கத்துடன் சேர்ந்து பணியாற்றவுள்ளதாக ஹங்கேரி அறிவித்துள்ளது. இவ்வாறு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி அனைவரையும்...