ஶ்ரீ.சு.க மத்திய செயற்குழு உறுப்பினர்கள் 25 பேர் – செயற்குழுவில் இருந்து நீக்கம்:-
Thinappuyal News -0
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் 25 பேரின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவிப்பு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அத தெரணவிடம் குறிப்பிட்டுள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும் மத்திய செயற்குழுவை கூட்டாது, இவ்வாறு உறுப்புரிமையை நீக்குவது சட்ட ரீதியானது அல்ல என, பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தற்போது கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் பிரகாரம் குருநாகல் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியே முன்னிலை வகிக்கின்றது. இரண்டாம் இடத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், மூன்றாம் இடத்தில் ஜே.வி.பி யும் உள்ளன என்று உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
தபால் மூல வாக்குகளில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலிடத்தில் உள்ளது. யாழ்ப்பாணத்தில் சுமார் 60...
திக்வெல்ல - கொட்டகொட வாக்குச் சாவடியில் இருந்து வாக்கு பெட்டிகள் கொண்டு சென்ற கெப் வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
வளைவொன்றில் வைத்து குறித்த கெப் வண்டி தடம்புரண்டதில் இவ் விபத்து நிகழ்ந்துள்ளதோடு, விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ் விபத்தின் போது வாக்கு பெட்டிக்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த வாகனங்த்தில் இருந்த வாக்கு பெட்டியை வேறு வாகனத்திற்கு மாற்றி மெதவத்தை தொழில்நுட்ப கல்லூரிக்கு கொண்டு...
கடந்த தேர்தல்களோடு ஒப்பிடுகையில் இம்முறை சுயாதீனமானதும் அமைதியானதுமான தேர்தலொன்று இடம்பெற்றுள்ளதாகவும் திருப்திகரமான சூழலை அவதானிக்க முடிவதாகவும் தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான தேசிய அமைப்பு, பெப்ரல் அமைப்பு உள்ளிட்ட தேர்தல்கள் கண்காணிப்பு குழுவினருடன் இடம்பெற்ற மாநாட்டிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
தேர்தல்கள் திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களம் போன்றன தமது செயற்பாடுகளை எவ்வித தடையும் இன்றி முன்னெடுப்பதை காணமுடிகிறது எனவும் தேர்தல்கள் கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலைக்குள் 14 கிராம் நிறையுடைய கொக்கேயின் போதைப்பொருள் கடத்திய புறா… காவலர்களிடம் வசமாக சிக்கிய
Thinappuyal News -
சிறைச்சாலையொன்றுக்குள் போதைப்பொருள் கடத்திய புறாவொன்று அந்த சிறைச்சாலைக் காவலர்களிடம் வசமாக சிக்கிய சம்பவம் Costa Rica-வில் இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள் சகிதம் சான் ராபயல் டி அலஜுயலா நகரிலுள்ள லா றிபோர்மா சிறைச்சாலைக்குள் பிரவேசித்த மேற்படி புறாவைப் பிடித்த சிறைச்சாலைக் காவலர்கள் அதனை காவலில் வைத்துள்ளனர்.
அந்தப் புறாவின் மார்பில் இணைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பையில் சுமார் 14 கிராம் நிறையுடைய கொக்கேயின் போதைப்பொருள் மற்றும் அதே நிறையுடைய கஞ்சா போதைப் பொருள்...
நடைபெற்ற 2015ம் அண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் அமைதியான முறையிலும் நீதியானதாகவும் நடைபெற்று முடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த தேர்தல் தொடர்பில் இன்று கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில் அதிகமானவை கடைசி மணித்தியாலயத்திலேயே கிடைக்கப் பெற்றதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்ற விஷேட ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாடு முழுவதிலும் உள்ள...
இலங்கையின் 15ஆவது நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் சற்று முன்னர் நிறைவடைந்த நிலையில் வாக்கெண்ணும் நிலையத்துக்கு மிகவும் பலத்த பாதுகாப்போடு வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன.
யாழ் தேர்தல் தொகுதிகளில் வாக்களிப்புக்கள் நிறைவடைந்த நிலையில் வாக்கெண்ணும் நிலையமான யாழ் மத்திய கல்லூரிக்கும் பேருந்துக்களிலும் உலங்கு வானூர்தி மூலமும் பாதுகாப்பாக வாக்குப்பெட்டிகள் எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.
இன்னும் சில மணித்தியாலத்தின் பின்னர் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன.
கொழும்பு மாவட்டத்திலிருந்து 19 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன்
19 உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர் இம்மாவட்டத்திலிருந்து 15,86,598 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
தபால் மூல வாக்குகள்
மொத்த வாக்குகள்
அளிக்கப்பட்ட வாக்குகள்
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்
ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குகள்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 15வது பாராளுமன்றத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. 196 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான இந்த தேர்தலில்
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 6,151 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் யாரைத் தெரிவு செய்வது என்ற தீர்ப்பை மக்கள் நாளை
வழங்கவுள்ளனர்.
சுயாதீனமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுக ளும்
நிறைவடைந்துள்ளதாகவும் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரையில் மக்கள் வாக்களிக்க முடியுமெனவும் மேலதிக
தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட்
தெரிவித்தார்.
225 பாராளுமன்ற...
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளருமான அனுர குமார திசாநாயக வாக்களிப்பு நிலையம் வந்தபோது.
Thinappuyal News -
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளருமான அனுர குமார திசாநாயக வாக்களிப்பு நிலையம் வந்தபோது.