பெண் கல்விக்காக போராடி வரும் மலாலா தனது பிறந்த நாளை முன்னிட்டு சிரியா பெண்களுக்காக பள்ளியை தொடங்கியுள்ளார்.பாகிஸ்தானை சேர்ந்தவர் மலாலா யூசப்சாய், பெண் கல்விக்காக போராடி வரும் இவர் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலத்த காயமடைந்தார்.பின்னர் பிரித்தானியாவில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். தொடர்ந்து பெண் கல்விக்காக குரல் கொடுத்துவரும் இவர் கடந்த 2014ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்.
இந்நிலையில் தனது 18வது பிறந்த நாளையொட்டி ‘மலாலா பண்ட்’ என்ற ...
பிரித்தானியாவில் உடல் பருமனால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: உணவு பொருட்கள் மீது வரியை கூட்டுகிறதா பிரித்தானிய அரசு?
Thinappuyal -
பிரித்தானியாவில் உடல் பருமனால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்கும் விதத்தில், சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்டுள்ள திரவ உணவுகள் மீது உள்ள வரியை அதிகரிக்க வேண்டும் என மருத்துவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பிரித்தானியாவில் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை மக்கள் பின்பற்றுவதில்லை என மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சர்க்கரையின் அளவு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை அதிகமானோர் எடுத்துக்கொள்வதால் ஒபிசிட்டி(Obesity) எனப்படும் உடல் பருமன் நோயிற்கு ஆளாகின்றனர். தரமான மற்றும்...
கைதிகளை சவக்குழியில் தள்ளி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள்: புதிய வீடியோவை வெளியிட்ட கொடூரம் (வீடியோ இணைப்பு)
Thinappuyal -
ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களின் பிணைக்கைதிகளை கொடூரமான முறையில் கொலை செய்யும் வீடியோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.ஐ.எஸ் தீவிரவாதிகள் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஈராக்கின் ஸ்பெஸ்செர் பகுதியில் நிகழ்த்திய படுகொலை தொடர்பான வீடியோவை வெளியிட்டு அவர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.இதன்படி ஏராளமான கைதிகளை அவர்கள் சவக்குழியில் படுக்க கட்டாயப்படுத்தியதாகவும், பின்னர் அவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பலரை கொன்று டைக்ரிஸ் ஆற்றில் வீசி விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதிகளின்...
துணைச்சேமிப்பு சாதனமாகக் கருதப்படும் பென்டிரைவ்களை கணனியில் இணைத்துப் பயன்படுத்திய பின்னர் அதனை அகற்றும்போது Safely Remove கொடுக்க வேண்டிய அவசியம் இருந்தது.
எனினும் இதற்காக 30 வினாடிகள் வரை காத்திருக்க வேண்டும் என்பதால் காலப்போக்கில் இச்செயல்முறையை பின்பற்றும் நடைமுறை அதிகளவானவர்களிடம் இல்லாமல் போய்விட்டது.
அதாவது Safely Remove பயன்படுத்தாமல் செயற்பாடு முடிந்ததும் நேரடியாகவே பென்டிரைவ்வினை கணனியிலிருந்து அகற்றிவிடுவார்கள்.
இவ்வாறான செயற்பாட்டினால் பென்டிரைவ்வின் ஆயுட்காலம் விரைவாக குறைவடைய வாய்ப்புக்கள் இருப்பதுடன், கணனியிலும் பாதிப்பு ஏற்பட...
நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் இன்று தங்களது வேட்புமனுக்களை மட்டு.மாவட்ட செயலகத்தில் தாக்கல்
Thinappuyal News -
நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் இன்று தங்களது வேட்புமனுக்களை மட்டு.மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.), ஜனநாயகக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஈரோஸ் மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சிகள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தன.
ஐக்கிய...
மனித உடலுக்கு நேரடியாக சத்துக்களை கொடுப்பது பழங்கள் மட்டுமே. பழங்கள் எளிதில் சீரணமாவதற்கும் வாய், வயிறு, குடல் பகுதியில் உள்ள புண்களை ஆற்றுவதற்கும் ஏற்றவை.
அந்தவகையில் எளிதில் கிடைக்கும் சாத்துக்குடி பழங்களின் நன்மைகளை பார்ப்போம்.
மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இந்தப் பழம் இருக்கும். சாத்துக்குடி, நாரத்தை, ஆரஞ்சு வகையைச் சார்ந்தது. தினமும் இரண்டு பழங்கள் சாப்பிடுவது நல்லது.
நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி...
தனது காதலி கீதா பர்ஸாவை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுகரிடம் அழைத்து சென்று ஆட்டோகிராஃப் வாங்கிக் கொடுத்துள்ளார் ஹர்பஜன் சிங்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், பாலிவுட் நடிகை கீதா பர்ஸாவை காதலித்து வருகிறார். இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
"தில் தியா ஹை" என்ற திரைப்படத்தில் அறிமுகமான கீதா, அடுத்தடுத்து 5 படங்களில் நடித்துவிட்டார். ஆனால் பாலிவுட்டில் சொல்லிக் கொள்ளும்...
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிலிருந்து விலகவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Thinappuyal News -
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிலிருந்து விலகவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடவடிக்கைகளுக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்ற நிலையில் ஜனாதிபதி இது தொடர்பில் விசேட உரையொன்றை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதிக்கு தமது கட்சியின் ஊடாக வேட்புமனு வழங்கியதையடுத்து மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு ஆதரவளித்த...
அலையென மக்கள் திரண்ட பிரான்ஸ் தமிழர் விளையாட்டு விழா: எழுச்சிக்கோலம் பூண்ட ஐ.நாவை நோக்கிய மில்லியன் கையெழுத்து இயக்கம்!
Thinappuyal -
பிரான்ஸ் தமிழர்களின் விளையாட்டு விழாவில் பெருந்திரளான மக்கள் பங்கெடுத்துள்ளதோடு, ஒரு மில்லியன் கையெழுத்து இயக்கம் எழுச்சிக் கோலம் பூண்டுள்ளது.பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் முன்னெடுப்பில் 18வது ஆண்டாக இடம்பெற்றுள்ள இப்பெருநிகழ்வில் பிரென்சு மற்றும் தமிழ் சமூக அரசியற் பிரமுகர்கள் பலர் பங்கெடுத்து நிகழ்வுக்கு வலுவூட்டியுள்ளனர்.சிறுவர் முதல் பெரியோர் வரையிலான விளையாட்டுகள், இசையரங்குகள், வர்த்தக திடல்கள், தாயகத்தினை நினைவுப்படுத்தும் உணவுவகைகள் என பல்சுவை நிகழ்வாக இது அமைகின்றது.இந்நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்...
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் வேகத்தில் மிரட்டிய புவனேஷ்வர் குமார் ஒருநாள் போட்டிகளில் 50 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.நேற்றைய போட்டியில் இந்திய அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இவரது வேகத்தில் மசகட்சா (5), சிகும்பரா (9), கிரிமர் (27),...