தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கொடும்பாவி எரிக்கப்பட்டமைக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். காணாமற்போனோர் தொடர்பில் உண்மை நிலையை வெளிப்படுத்தல், அரசியல் கைதிகளை விடுவித்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை மார்ச் மாதம் சமர்ப்பிக்க கோரி கடந்த...
  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சில கூட்டணிக் கட்சிகள் எப்படியான முயற்சிகளில் ஈடுபட்டாலும் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள சிரேஷ்ட தலைவர் மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை கடுமையாக எதிர்க்கும் நிலைப்பாட்டில் இருப்பதாக அந்த கட்சியின் உட்தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், எதிர்வரும் பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக போட்டியிட எந்த வகையிலும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. பிரதமர்...
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் உருவப்பொம்மைகள் எரிக்கப்பட்டமைக்கு கனேடிய தமிழர் பேரவை கண்டனம் வெளியிட்டுள்ளது.   இதுகுறித்து கனேடிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- இவ்வாறான நடவடிக்கைகள் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் அரசியல் தலைமைகளை மலினப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியான அபிலாசைகளை மௌனிக்கச் செய்யும் முயற்சியாகவே இதனை நோக்க வேண்டும்....
  யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வீரசிங்க பத்திரணலாகே விமலசேன மற்றும் எல்பிட்டிய பொலிஸ் பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஆனந்த ராஜகருணா ஆகிய இருவரும் இரகசிய பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர். பிரபல்யமான கோடீஸ்வரர் வர்த்தகரான பெர்னாட் ஜயத்ன என்பவர் பியகம விலேஜில் 2012ஆம் ஆண்டு வெட்டிக்கொலைச்செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான தகவல்களை மறைத்து. அக்கொலைக்கு உறுதுணையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவ்விருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
  வலி.வடக்குப் பகுதியில் படையினர் வசமுள்ள காணிகளில் ஆயிரம் ஏக்கரை நிலச்சொந்தக்காரர்களிடமே கையளிக்க 3 கிழமைகளில் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன். வலி.வடக்குப் பகுதியில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது குறித்த முக்கிய கலந்துரையாடல் இன்று ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். அவர்...
  வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற பாடசாலையின் 127வது ஆண்டு விழா மற்றும் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நிகழ்வுகளில் கலந்துகொண்டபோது..
  கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டுள்ள இரு அமைச்சு மற்றும் பிரதி தவிசாளர் பதவிகளுக்கு உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். இதன்படி கிழக்கு மாகாண கல்வி அமைச்சருக்கான தெரிவாக திருகோணமலையை பிரதிநிதித்துவபடுத்தும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரான தண்டாயுதபாணியும் விவசாய அமைச்சருக்கான தெரிவாக மட்டக்களப்பினை பிரதிநிதித்துவ கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கி.துரைராஜசிங்கமும் பிரதி தவிசாளருக்கான தெரிவாக மட்டக்களப்பினை பிரதிநிதித்துவபடுத்தும் பிரசன்னா...
  யாழ்ப்பாணம் கரவெட்டி பிரதேச வைத்தியசாலையின் தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு பா.உறுப்பினர் சி.சிறீதரன், மாகாண சபை உறுப்பினர்களான சிவயோகன் சுகிர்தன் ஆகியோரின் நிதி ஒதுக்கீட்டில் பெறப்பட்ட பொருட்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. வைத்தியசாலையின் அத்தியட்சகர் வைத்தியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை திட்டமிடல் பணிப்பாளர் வைத்தியர்.நித்தியானந்தா, கரவை ஒன்றிய போசகர் செல்வரட்ணம், கரவை ஒன்றிய தலைவர் உபாலி பொன்னம்பலம், வைத்தியசாலை நலன்புரிச்சங்க தலைவர் ராகவன்,...
  உலகின் மிகப் பெரிய மனிதநேயப் பணியகங்களில் ஒன்றான ‘செஞ்சோலை’யை தமிழீழத்தில் ஆரம்பித்தவர் தமிழீழத் தேசியத் தலைவர். மானுட தர்மம் என்னவென்பது அங்கு போதிக்கப்படவில்லை. செயலுருவம் பெற்றிருந்தது. உலகமே பார்த்து அதிசயித்த அரும்பெரும் தலைவரின் மடிமீது அமர்ந்து குலுங்கிச் சிரிக்கும்போது உலகமே தம்வசமிருப்பதாக செஞ்சோலை செல்வங்கள் நினைப்பதுண்டு. குழந்தைகளோடு குழந்தையாக சிரித்து மகிழும் ஒப்பற்ற தலைவரின் மனிதத்தைப் புரிந்து புல்லரித்துப் போனவர் ஏராளம். அது ஒரு வரலாற்றுப் பதிவு. காலச் சக்கரத்தின் கண்ணாடி....
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் டிஆர்எஸ் நடைமுறையில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.டிஆர்எஸ் என்பது நடுவரின் முடிவை மறு பரிசீலனை செய்யும் நடைமுறையாகும். அதாவது கிரிக்கெட் ஆட்டத்தில் களத்திலுள்ள இரு நடுவர்களுக்கும், விக்கெட் விவகாரத்தில் சந்தேகம் ஏற்பட்டால், மூன்றாவது நடுவரை தொடர்பு கொண்டு கேட்கலாம். இந்த விவகாரத்தை மூன்றாவது நடுவர் தொலைக்காட்சியில் மீண்டும் போட்டு பார்த்து முடிவை அறிவிப்பார். இந்த டிஆர்எஸ் என்னும் முறை சமீபகாலமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நடுவருக்கு சந்தேகம் வந்தால் மூன்றாவது...