தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தப்படி இலங்கை தேர்தல் முடிவுகள் வந்து விட்டது. தமிழ் இனத்தை பெரும் அளவில் அழித்த மகிந்த ராஜபக்சே விரட்டியடிக்கப்பட்டு விட்டார்.
இலங்கையின் புதிய அதிபராக மைத்ரீபால சிறிசேனா ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளார். தேர்தல் பிரசாரத்தின் போது, நிறைய வாக்குறுதிகளை சிறிசேனா வெளியிட்டிருந்தார். இதனால் சிறிசேனா அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எல்லா தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது. சிங்களர்கள், ஊழல் இல்லாத ஆட்சி வருமா என்று எதிர்பார்க்கிறார்கள்.
தமிழர்கள்,...
குடியுரிமை பறிக்கப்பட்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அதனை மீண்டும் வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரை புதிய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சராகவும் நியமித்துள்ளார்.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் 20 வருடங்களாக பாதுகாப்பு அமைச்சை ஆட்சியில் இருந்த ஜனாதிபதிகள் எவருக்கும் வழங்கவில்லை
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடமே பாதுகாப்பு அமைச்சு இருந்து வந்தது. கட்சிக்குள்ளும் வெளியிலும் தமக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து தற்காத்து கொள்ளவே அவர்கள் பாதுகாப்பு அமைச்சை தம்வசம் வைத்திருந்தனர்.
எனினும் மைத்திரிபால...
அலரிமாளிகையைவிட்டு வெளியேறியதன் பின்னணியில் அமெரிக்கா – களத்தில் சந்திரிக்கா,சம்பந்தன்.
Thinappuyal -
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் மும்முரமாக அறிவிக்கப்பட்டுக்கொண்டிருக்க, அலரிமாளிகையில் தங்கியிருந்த மஹிந்த ராஜபக்ஷ எப்படியாவது ஒரு இராணுவ புரட்சியையோ அல்லது தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுடன் பேசி முடிவுகளை மாற்றிக்கூறுமாறு பலமுறை பணித்திருந்தார். ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால வெற்றிபெற்றதும், எப்படி அவர் வெற்றிபெற்றார் என அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட முன்னரே முன்னாள் ஜனாதிபதி தனது மூட்டைமுடிச்சுகளுடன் அலரிமாளிகையைவிட்டு வெளியேறினார். இது அவருடை இராஜதந்திர அணுகுமுறை என்றும்...
சிறிலங்காவை விட்டுத் தப்பிச் சென்று வெளிநாடுகளில் வசித்து வந்த, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமான – இரண்டு மூத்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் நேற்று நாடு திரும்பியுள்ளனர்.
மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க மற்றும், பிரிகேடியர் துமிந்த கெப்பிட்டிவலன ஆகியோரே நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
2010ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், சரத் பொன்சேகா தோல்வியடைந்ததையடுத்து, சிறிலங்கா அரசாங்கத்தினால், கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு...
தேசிய அரசாங்கம் 100 நாளில் முடிவுக்கு வந்த பிறகு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அரசாங்கம் அமையும்போது அதில் அங்கம் வகிப்பது குறித்து அப்போது சிந்திக்கலாம்- இரா.சம்பந்தன் எம்.பி
Thinappuyal News -
அமைச்சுப் பதவி எதுவும் தேவையில்லை; வெளியிலிருந்தே தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு அளிக்கிறோம். - இப்படித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கிறார் என அறிய வருகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்துப் பேசியபோதே சம்பந்தன் அவருக்கு இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிய வருபவை வருமாறு:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரதமர் ரணில்...
வடக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு ஓய்வு பெற்ற சிவில் அதிகாரியும், ரணிலின் முன்னைய அரசில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பணியாற்றியவருமான ஒஸ்ரின் பெர்னாண்டோ
Thinappuyal News -
வடக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு ஓய்வு பெற்ற சிவில் அதிகாரியும், ரணிலின் முன்னைய அரசில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பணியாற்றியவருமான ஒஸ்ரின் பெர்னாண்டோவை நியமிப்பது குறித்து புதிய அரசுத் தலைமை பரிசீலித்து வருவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தப் பதவிக்கு முன்னாள் வெளிவிவகார செயலாளரும், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினராகக் கடமையாற்றியவருமான பள்ளியக்கார நியமிக்கப்பட்டுவிட்டார் என சில ஊடகங்களில் ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன....
விமல் வீரவன்ஸவுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Thinappuyal News -
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ஸவுக்கு எதிரான பாலியல் வன்புணர்ச்சி குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துமாறு புதிய அரசாங்கம், பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பான பல தகவல்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தனிப்பட்ட ரீதியில் கிடைத்துள்ளன. இது பற்றி உடனடியாக தேடி அறிந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனை தவிர ராஜபக்ச அரசாங்கத்தின் படு...
நாட்டை விட்டு தப்பிச் செல்லும் எந்த தேவையும் இல்லை: விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுத விநியோகஸ்தரான கே.பி என்ற குமரன் பத்மநாதன்
Thinappuyal News -
இலங்கையில் இருந்து தான் தப்பிச் செல்லவில்லை என விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுத விநியோகஸ்தரான கே.பி என்ற குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை கூறியுள்ளார். கே.பி தேர்தல் நேரத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்றதாக சில ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டிருந்தன.
இந்த நிலையில், கே.பியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இந்திய ஊடகவியலாளரிடம், தான் இன்னும் கிளிநொச்சியிலேயே இருப்பதாக கே.பி கூறியுள்ளார்.
நாட்டை விட்டுச் செல்லும் எந்த தேவையும்...
பழந்தமிழ் நாகர்குல மன்னன் நாகராசனின் குருந்தூர்க்குளத்தை சீர்செய்து தாருங்கள். முல்லை.குமுளமுனை மக்கள் கோரிக்கை
Thinappuyal -
தொள்ளாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட அளவு பாசனவசதி பெறவல்ல பழந்தமிழர் நாகர்குல மன்னன் நாகராசன் நிர்மாணித்த குருந்தூர்க்குளத்தை சீர்செய்து தாருங்கள் என குமுளமுனை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொன்மை வாய்ந்த தமிழர் அடையாளமாக விளங்கிவரும் இக்குளத்தின் குளக்கட்டுப்பாதையும் பல வருடகாலமாக சீர்செய்யப்படாது உள்ளதோடு ஒடுகின்ற நீரை மறிக்கவல்ல குளக்கட்டும் இன்றி ஒவ்வொரு ஆண்டும் பாய்ந்துவரும் நீர் வீணாகிச்செல்கிறது என கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,
கடந்த 2015-01-01 அன்று...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய அமைச்சரவை இன்றைய தினம் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொள்ளவுள்ளது.
இவ் அமைச்சரவை 30 உறுப்பினர்களை கொண்டாதாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் இவ்வாறு 30 பேரை கொண்ட அமைச்சரவையாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சரவைக்காக ஜே.வி.பிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கடந்த நாட்களில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அத்துரலிய ரத்தின தேரர் குறிப்பிட்டிருந்தார்.
எப்படியிருப்பினும், ஜே.வி.பி இது சம்பந்தமாக தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.