மைத்திரிபால சிறிசேன பாரிய துரோகம் இழைத்துள்ளார்!– வக்காளத்து வாங்கும் ஏ.எச்.எம். அஸ்வர்
Thinappuyal News -0
முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பாரிய துரோகம் இழைத்துள்ளதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.
நேற்று வரையில் அமைச்சராக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன, குடும்ப அரசியல் பற்றி எவ்வாறு குற்றம் சுமத்த முடியும்?
சிறிமாவோ பண்டாரநாயக்க நாட்டை சிறந்த முறையில் ஆட்சி செய்தார். எனினும் அவரது மகள் சந்திரிக்கா, மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து சூழ்ச்சி செய்கின்றார்.
மக்களுக்கு நலன்களை ஏற்படுத்திய மதத் தலைவர்கள் அரசியல் தலைவர்களுக்கு...
‘100 நாட்களில் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும்’- மைத்திரிபால சிறிசேனவின் முதலாவது பொய்
Thinappuyal News -
இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
'100 நாட்களில் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும்': மைத்திரிபால
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் சிறிசேன இந்த முடிவை அறிவித்தார்.
அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, எம்.கே.டி.எஸ்.குணவர்தன, துமிந்த திசாநாயக்க, ஆளும்...
மகிந்த ஆட்சியில் இரண்டு தீமையும் இரண்டு நண்மையும் அதுவே மகிந்தாவின் ஆட்சி கவிழ்ப்பதற்கா காரணம்
Thinappuyal News -
மகிந்த ஆட்சியில் இரண்டு தீமையும் இரண்டு நண்மையும் அதுவே மகிந்தாவின்
ஆட்சி கவிழ்ப்பதற்கா காரணம்
THINAPPUYAL NEWS
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானால் 100 நாட்களுக்குள் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வேன் எனக் கூறியிருக்கிறார். அது வரவேற்கப்பட வேண்டீய விடயம் TNA அவசரமாக முடிவெடுக்காது!- இரா. சம்பந்தன்
Thinappuyal News -
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான மைத்திரிபால சிறிசேன அவர்கள் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிலைமைகளை ஆராய்ந்தே முடிவெடுக்கும் என்று அந்த அமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன அவர்கள் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவரது செவ்வியையும் தான் கேட்டதாகக் கூறிய சம்பந்தன் அவர்கள், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதாக...
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் போர்க்காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்த விவகாரங்களில் பொறுப்புக்கூறுவது குறித்த பிரச்சினையில் முன்னேற்றம் காணமுடியும் — நெற்றிப்பொறியன் –
Thinappuyal News -
தமிழ்மக்களுக்கான அர சியல் தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவேண்டுமாகவிருந்தால், தமிழினத்தினை சுத்திகரிப்புச் செய்த அரசுடன் பேசுவது பயனற்றது. மீண்டும் ஒரு இனச்சுத்திகரிப்பினையே அவர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆகவே இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் தான் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற முடியும். இவ்விடயம் பற்றி முன்னாள் ஐ.நா. உதவிச் செயலர் ஹோம்ஸ் தெரிவிக்கையில், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் போர்க்காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்த விவகாரங்களில் பொறுப்புக்கூறுவது குறித்த பிரச்சினையில் முன்னேற்றம்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு அவசர கூட்டம்! -பதவிகள் பறிப்பு! மஹிந்த அதிரடி முடிவு
Thinappuyal News -
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அவசர மத்திய குழுக் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
இதற்கான அழைப்பாளர்கள் தற்போது அலரிமாளிகையின் பக்கவாட்டு மாநாட்டு அரங்கத்தில் குழுமியுள்ளனர். முக்கிய அமைச்சர்கள் பலரும் அங்கு சமூகமளித்துள்ளனர்.
ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் இந்த அவசரக் கூட்டத்தில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளது.
மேலும் பிரதமர் பதவிக்குப் பொருத்தமான நபர் குறித்த கலந்துரையாடலும் நடைபெறவுள்ளது. இதன்போது பெரும்பாலும் கோட்டாபய பிரதமர் பதவிக்கு முன்மொழியப்படும்...
“இலங்கை இந்து மகா சமுத்திரத்தில் மிக முக்கியமான கடல்சார் வணிகப்பாதையில் ஐரோப்பா, சீனாவின் மத்திய கிழக்கு மற்றும் ஆசியப் பகுதிகளை இணைக்கும் புள்ளியில் அமைந்துள்ளது. அமெரிக்காவால் இலங்கையை நிச்சயமாக இழக்க முடியாது.”
எந்தவொரு அரசியல் கோரிக்கையும் குறிப்பிட்ட அந்த நாடு மற்றும் உலக நாடுகளின் அரசியல் பொருளாதாரத்திலிருந்து விலக்கப்பட்டது அல்ல. மனித உரிமைகள் சார்ந்த கோரிக்கையையும் அது போன்றே பார்க்க முடியும். அந்த கோரிக்கையை யார் எழுப்புகிறார்கள்; எந்த கோணத்தில்...
முஸ்லீம் கட்சிகள் யார் ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்களின் வாலைத் தான் பிடிப்பார்கள்
முதுகெலும்பில்லாத கட்சிகளில் இவர்களும் ஒன்று. முஸ்லீம் காங்கிரசை பலப்படுத்திக்கொள்வதை விட்டுவிட்டு தமது ஆசனங்களுக்காகவும், அமைச்சுப் பதவிகளுக்காகவும் பல்வேறு விரயங்களை இவ்வரசாங்கத்தினால் இழந்து நிர்க்கதியாகியுள்ளனர். குறிப்பாக இவ்வரசால் முஸ்லீம் மக்களுக்கு மதச் சுதந்திரம் என்பது இல்லாமல் போயுள்ளது. தம்புள்ளை, அநுராதபுரம், திருகோணமலை போன்ற இடங்களில் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டு இருந்த இடம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளதுடன், பள்ளிவாசல்கள் கற்களாலும் தாக்கப்பட்டது.
தர்கா...
ஆளுங்கட்சியில் இருந்து வெளியேறும் பாரிய அணி- நிமல் சிறிபால டி சில்வா முக்கிய பங்கினை வகிக்கிறார்
Thinappuyal -
மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில் தனது சர்வாதிகார ஆட்சிமுறையின் மூலம் தனது பரம்பரையான ஆட்சியை கொண்டுவர முடியும் என எண்ணியிருந்த தருணத்தில் மேலும் பல அமைச்சர்கள் அமைச்சுப் பதவிகளில் இருந்து வெளியேற தயாராகவிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் சிலரின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.
இதில் குறிப்பாக நிமல் சிறிபால டி சில்வா முக்கிய பங்கினை வகிக்கிறார். இப்பெயர்ப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டவர்கள் சந்திரிக்காவின் நம்பிக்கையாளர்களாக செயற்பட்டவர்கள். பண்டாரநாயக்க குடும்பத்தினை அரச பொறுப்புக்களிலிருந்து தூக்கியெறிந்த...
மஹிந்தவுடன் கூட இருந்து குழிபறித்த மைத்திரிபால சிறிசேன – ஜனாதிபதியின் தோல்விக்கு முதற்படி
Thinappuyal -
சற்றுமுன் கிடைத்த தகவலின்படி மைத்திரிபால சிறிசேன சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகியுள்ளதாகவும், அது மட்டுமல்லாது அவர் பொதுவேட்பாளராக போட்டியிடவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் விலகியமை தொடர்பிலும், பொதுவேட்பாளராக நிற்பது பற்றியும் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. மஹிந்த ராஜபக்ஷவுடன் நீண்ட நாட்கள் அரசியலில் பக்க பலமாக இருந்துவிட்டு இறுதியில் சந்திரிக்காவுடன் இணைந்து மஹிந்தவிற்கு குழிபறித்துவிட்டார் என்பதும் சிறப்பம்சமாகும்.
விடுதலைப்புலிகளுடனான பேச்சுக்களில மைத்திரிபால சிறிசேன ஆர்வம் காட்டியமையும் இங்கு குறிப்பிடத்தக்கதொன்றாகும். மட்டுமல்லாது...