இந்திய இராணுவ யுத்த கல்லூரியை சேர்ந்த 20 பேர் அடங்கிய இராணுவ குழு தற்பொழுது இலங்கை வந்தடைந்துள்ளது.
Thinappuyal News -0
இந்திய இராணுவ யுத்த கல்லூரியை சேர்ந்த 20 பேர் அடங்கிய இராணுவ குழு தற்பொழுது இலங்கை வந்தடைந்துள்ளது.
இந்த குழுவிற்கு தலைமை தாங்கி வந்துள்ள பிரிகேடியர் சிந்து இந்த கல்லூரியின் இயக்குனர் ஆவார். இவருடன் உயர் அதிகாரிகள் நால்வரும் இணைந்துள்ளனர்.
இந்த விஜயம் ஓர் சினேக பூர்வமானதொன்று என இலங்கை இராணுவ கட்டளை தளபதி தயா ரடநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இது பற்றி தெரியவருவதாவது, இந்தியா இலங்கை இராணுவ வீரர்களில் 80 சதவீதத்தினருக்கு வெளிநாடுகளில்...
கல்குடா அல்கிம்மா சமூக சேவைகள் அமைப்புவறிய மாணவர்களுக்கு அல்கிம்மா அமைப்பு துவிச்சக்கர வண்டி அன்பளிப்பு
Thinappuyal News -
கல்குடா அல்கிம்மா சமூக சேவைகள் அமைப்பு நாடளாவிய ரீதியில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது.
அதன் அடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளும், வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தையல் இயந்திரங்களும் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை இடம்பெற்றது.
எஸ்.ஐ.எம்.சாதாத் ஆசிரியர் தலைமையில் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக இந்நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம்.எஸ்.ஹாறூன் (ஸஹவி) கலந்து...
நான்கு குடும்பங்களுக்கான ஒரு இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள்;. முள்ளியவளையில் வழங்கினார் ரவிகரன்.
Thinappuyal -
நான்கு குடும்பங்களுக்கான ஒரு இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் 2014-10-30ம் திகதியன்று முள்ளிவளையில் வழங்கப்பட்டுள்ளது. கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் ஊடாக மேற்படி உதவிகள் வழங்கப்பட்டிருந்தன.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில், வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு மூலமாக வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்வின் முதற்கட்டம் கடந்த 2014-10-30ம் திகதி முள்ளியவளையில் காலை 10 மணியளவில் ஆரம்பமாகியிருந்தது.
கணவனை இழந்து...
வடமாகாண சபையின் பேரவைத் தலைவர் திரு.சி.வி.கே.சிவஞானம் கடந்த 5 ஆம் திகதி பேரவைச் செயலகத்தில் வைத்த, பத்திரிகையாளர் மகாநாட்டில், வல்வெட்டித்துறை நகரசபையில் 10 இலட்சமும், பருத்தித்துறை பிரதேச சபையில், 7 இலட்சம் ரூபாவும் முறைகேடான கொடுப்பனவுகள் இடம் பெற்றதாகக் குறிப்பிட்ட செய்திகள் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியிடப்படபொழுது அதிர்ச்சியாக இருந்தது.
இச் செய்தியின் சாராம்சத்தை வாசித்தவர்கள் மேற்படி சபைகளிலேயே மோசடிகள் இடம் பெற்றதாகத் தவறாக விளங்கிக் கொள்வார்கள் என்று...
இந்தியா இன்றி இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது:- விக்னேஸ்வரன் புதிய கண்டுபிடிப்பு
Thinappuyal News -
இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியா தலையிட்டால் தான் நிரந்தர தீர்வுகாண முடியும் என வடமாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 7–ந் திகதி சென்னைக்கு விஜயம் செய்த விக்னேஸ்வரன், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இன்று காலை சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட 18 ஆயிரம் பேரும், ஒரு லட்சம் இளம் விதவைகளும், பெற்றோரை இழந்த எண்ணற்ற குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் இருக்கின்றனர்.
இளைஞர்கள், பெண்கள், அன்றாடம்...
வடக்கில் வாக்குகளைப் பெறுவது சவால்! கூட்டமைப்புக்கு ஐ.தே.க அழைப்பு-நிதானமாக சிந்திக்கும் சம்பந்தன்
Thinappuyal News -
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மாகாணத்தின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதே அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இருக்கும் மிகப்பெரிய சவாலாகும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
பொது எதிரணியுடன் கைகோர்த்து தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேண்டும் என ஐ.தே.க அழைப்பு விடுத்துள்ளது.
அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பௌத்த சிங்கள வாக்குகளை எதிர்பார்த்து தேர்தலில் குதிப்பது முட்டாள்தனமான செயல். பௌத்த...
சிறீலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக சித்தரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் ஆற்றிய உரை உலகெங்கும் வாழும் தமிழ் மக்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது கூற்றை மறுதலிக்காது இறுமாப்புடன் சம்பந்தர் நடந்து கொள்ளும் நிலையில், அதனை அவரது தனிப்பட்ட கருத்தாக தணித்துவிட்டு நழுவிக் கொள்ளும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழீழ விடுதலைப்...
முதலில் தேர்தல் அறிவிக்கப்படட்டும். அதன்பின்னர் இத்தகைய அழைப்பு விடுக்கப்பட்டால் நாம் அதனை ஆழமாக பரிசீலிக்கத் தயாராக இருக்கிறோம்-இரா.சம்பந்தன்
Thinappuyal News -
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அரசுத் தரப்பு வேட்பாளரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் நிலைப்பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கவேண்டும் என்று அரசுத் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஆழமாகப் பரிசீலிக்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். தங்களை இதுவரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரித்துச் செயற்படவில்லை என்றும் இம்முறையாவது தங்களை ஆதரிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வரவேண்டும் என்றும் அரசின் சிரேஷ்ட அமைச்சரும் ஜனாதிபதி...
ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் விவசாய ஆராய்ச்சி சிறப்புத்திறன் விருதுகள் விழா
Thinappuyal News -
ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் விவசாய ஆராய்ச்சி சிறப்புத்திறன் விருதுகள் விழா 2014 இல், நவ. 10, 2014 இல், கலந்துகொள்கிறார். அதிசிறப்பான விவசாய ஆராய்ச்சிகளை மேற்கொண்ட விஞ்ஞானிகளும், தேசிய விவசாய சிறப்புத்திறன் விருதுக்காக பெயர் குறிப்பிடப்பட்டவர்களும் விருதுகளைப் பெற்றனர்.
வடக்கு மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி ஒருபுறம் நடைபெறுகிறது. அதேவேளையில், இன்னொருபுறம் இலங்கை அரசு ஆதரவுடன் ஆளுநர், முதன்மைச் செயலாளர் மற்றும் சில அதிகாரிகள் தலைமையில் முரண்பாடான மற்றொரு நிர்வாகமும் செயல்படுகிறது.
Thinappuyal News -
வடக்கில் தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசு ஒன்று இயங்கினாலும், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் தமது கட்டுப்பாட்டிலேயே வடபகுதி மக்களும், நிர்வாகக் கட்டமைப்புக்களும் இருக்கவேண்டும் என்பதில் குறியாகவுள்ளனர். அதுமட்டுமன்றி இனப்பரம்பலை மாற்றியமைக்கவும் அவர்கள் முயற்சிக்கின்றனர். இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்குமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.
மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் (பி.யூ.சி.எஸ்) ஏற்பாட்டில் நடைபெற்ற கே.ஜி.கண்ணபிரான் நினைவு நினைவு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தமிழகம் சென்ற முதலமைச்சர், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று திங்கட்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். இதன்போதே...