ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கி தீர்ப்பளித்தமை தொடர்பில் இலங்கை அரசா  கவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவானது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து 2011-ல் லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் சார்பாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர்...
இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நான் முட்டாள் என்று அழைக்கமாட்டேன். முதலமைச்சர் என்றும் அழைக்கமாட்டேன். முற்றிலும் முடியாத பரிதாபத்துக்குரிய முன்னாள் அமைச்சர் என்று தான் குறிப்பிடுவேன். இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பதிலடிகொடுத்துள்ளார் வடக்குமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். வடமாகாண நீரியல் ஆய்வு மையத் திறப்பு விழா தொண்டமனாறு நீர்ப்பாசன திணக்கள வளாகத்தில் இன்று புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக்...
  ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் யாஸிதி இனப் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் அடிமைகளாக்கி விற்பனை செய்கின்றனர்.ஈராக் மற்றும் சிரியாவின் பல பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், அங்குள்ள மலைப்பகுதிகளில் வாழும் சிறுபான்மையினமான யாஸிதி இனப்பெண்களை கடத்தி சென்றுள்ளனர். மேலும் தீவிரவாதிகளிடமிருந்து தப்பி சிஞ்சார் மலைப்பகுதியில் குடிபெயர்ந்த யாஸிதி பெண்கள் மற்றும் குழந்தைகள் சமீபத்தில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறைப்பிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான யாஸிதி இனத்தைச் சேர்ந்த பெண்களையும், குழந்தைகளையும் தீவிரவாதிகள்...
பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் லோரா டேவிட்ஸ் இன்று யாழ். ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ். ஆயர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.லோரா டேவிட்ஸ், பிரித்தானிய உயர்த்தானிகராக பதவியேற்ற பின்னர் முதன் முதலாக இன்று யாழிற்கு விஜயம் செய்துள்ளார். அவர் யாழில் பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடினார். அதன்போது, யாழ். மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையையும் சந்தித்தார். அச்சந்திப்பின் போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வடபகுதிக்கான விஜயம்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டை பிரிப்பதற்கு எவ்வித தயார் நிலைகளையும் மேற்கொள்ளவில்லை. எனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரியுள்ளார். தமிழீழத்தை கைவிட்டால் தாம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை கைவிடுவதாக ஜனாதிபதி கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று கிளிநொச்சியில் வைத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள சுமந்திரன், கூட்டமைப்பை பொறுத்தவரை அது அதிகார பரலாக்கலை வலியுறுத்தி வருகிறது. அதுவும் ஐக்கிய இலங்கைக்குள்...
என் கணவர் கடத்தப்பட்டு காணாமல் போய்விட்டார். ஆனால் அவர் உயிருடன் இருக்கிறார், எங்களிடம் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில் வாழ்கிறோம். என் கணவரை மீட்டுத்தாரு ங்கள் என யாழ். தொண்டமனாறு பகுதியில் தாய் ஒருவர் வடமாகாண முதலமைச்சரிடம் உருக்கமான வேண்டுகோளினை விடுத்துள்ளார். இன்றைய தினம் மேற்படி பகுதியில் மாகாண நீர் ஆராய்ச்சி மையம் திறப்பு விழாவின் போது வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லின கோழிக் குஞ்சுகளும் வடமாகாண கால்...
காங்கேசன்துறை வெளிச்சவீட்டினை பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச திறந்து வைத்தார். யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியின் அழைப்பை ஏற்று இருநாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச வரலாற்று முக்கியம் வாய்ந்த காங்கேசன்துறை வெளிச்ச வீட்டினை நேற்று திறந்து வைத்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட செயலர் பளையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை ஆரம்ப வைபவத்தில்...
  கண்டி - தெல்தெனிய வீதியில் 65 பயணிகளுடன் 200 மீற்றர் பள்ளத்தில் விழுந்த பஸ்.கண்டி - தெல்தெனிய வீதியில் ரம்புக்வெல்ல பகுதியில் இபோச பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்து 64 பேர் காயமடைந்துள்ளனர்.வேகந்தையில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த பஸ் 200 மீற்றர் பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விக்டோரியா நீர்த்தேகத்துடன் இணைந்த நீர்...
இன்று (15.10.2014) வவுனியாவில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களினால் வினவப்பட்ட வினாக்களுக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பதிலளிக்கையில்,   கேள்வி :- தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்கின்ற விடயம் பரவலாக பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இவ்விடயம் தொடர்பாக தங்களுடைய கருத்து என்? பதில் :- தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இந்தப் பதிவைச் மேற்கொள்ளவேண்டுமென்று ஏற்றுக்கொண்டிருக்கின்றார். கட்சிகள் அனைத்தும் வலுவாக செயற்படவிருக்கின்றோம். ஓற்றுமையோடு இந்தப்பதிவை நிச்சயமாக செய்துமுடிப்போம் என்று...
கடந்த வருடம் நடைபெற்ற க. பொ. த. (உயர்தரப்) பரீட்சையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களும் தோற்றி இருந்தனர். இவர்களில் 132 பேர் தற்போது பல்கலைக்கழங்களுக்குத் தெரிவாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜகத் விஜேதிலக்க தெரிவித்துள்ளார். தற்போதைக்கு விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 12,081 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களில் 650 பேர் சிவில் பாதுகாப்புப் படையணியில்...